Tuesday, November 13, 2012

கோயில் திருவிழாக்களும் சைட் அடிக்கப்படும் பெண்டுகளும்!


 கோயில் திருவிழாக்களும் சைட் அடிக்கப்படும் பெண்டுகளும்!

”சைட் அடிக்கப்படும் பெண்டுகள்” என்ற தலைப்பில் எழுதப்படும் இப் பதிவிலுள்ள விடயங்களானது பல ஆண்களின் பார்வையில் உள்ள விடயங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ”சைட் அடிக்கும் பெண்டுகள்” எனவும் இதனை எழுதலாம். ஏன்னா, "அவங்க சைட் அடிக்கிறதும், நம்மளை மறைந்திருந்து பார்க்கிறதும்" எங்களுக்குத் தானே தெரியும்! ஹி..ஹி....சினிமாவில ஹீரோ பார்த்திருப்பம். அவர் பாடுவார், ஆடுவார், சண்டைபோடுவார், ரொமான்ஸ் பண்ணுவார். ஹீஹீ இப்பிடியெல்லாம் செய்தால் தான் அவர் ஹீரோ. அதே வேலையை நாங்களும் செய்தம் எண்டா எங்களை ”பைத்தியக்காரன், விசரன், லூசன்” (எல்லாம் ஒண்டு தானோ!?) எண்டெல்லாம் பேசுவாங்க. அப்ப நாங்க ஹீரோ ஆகவே முடியாதா?.. முடியும்.

அதுக்கு சரியான இடம் தான் கோவில் திருவிழாக்கள். அங்கு நாம் ஒவ்வொருவரும் ஹீரோக்கள். எங்கள் ஊரில் இருக்கும் இளம் பெண்களுக்கு நாங்கள் ஹீரோ, எங்களுடன் படிக்கும் பெண்களுக்கு நாங்கள் ஹீரோ, ஆகக் குறைந்தது எங்கள் தெருவில் இருக்கும் இளம் பெண்களுக்களுக்காவது நாங்கள் ஹீரோவாக இருக்க மாட்டோமா? அடப் போய்யா! பக்கத்து வீட்டு பெண்ணுக்காவது நாங்கள் ஹீரோவா இருப்பமில்லே!

நாங்க ஹீரோ எண்டுறதை எப்பிடிக்காட்டுறது.? எதையாவது பண்ண வேண்டாமா? பண்ணணும்... ஊர்த்திருவிழா வரும் வரை வெயிட் பண்ணணும்.. திருவிழா வந்தால் ஒரே கொண்டாட்டம் தான்.

”பள்ளிக்காதல் பாதியிலே..” என்பார்கள். அது நூற்றுக்கு 98 வீதமாவது வெறும் எதிர்ப்பாற் கவர்ச்சி தான். டீன்-ஏஜ் பருவத்திலை அது வந்து போகும். (அது வந்தாத்தாண்டா நீ ஆம்பிளை). இந்த எதிர்பாற்கவர்ச்சியால் கோயிலுக்கு வரும் ஒரு பெண்ணையோ! அல்லது ஒரு பெண்கள் குழுவையோ நாங்கள் தனியாகவோ அல்லது நண்பர்கள் குழுவாகவோ டாவடிப்போம். அவர்களும் எங்கள் டாவுக்கு பதிலளிப்பது போல சிரிப்பார்கள், நெளிவார்கள், சிலவேளை கதைக்க கூட செய்வார்கள். இதுக்காகவே திருவிழாக்காலத்திலை ஆன்மீக பக்தி கூடி அலையுற ஆசாமிகள் பலபேர்.

எப்படியெல்லாம் கோயிலில் சைட் அடித்தார்கள் - அடிக்கிறார்கள் - அடிப்பார்கள் - அடித்தோம்..

கோயில்ல எது ரேனிங்பாயிண்ட், முதல்ல அதைக் கண்டு பிடிக்கணும். கோயிலுக்கு வாரவங்க எப்பிடியும் கும்பிடத்தான் வருவாங்க. அதனாலை நாங்க வளைச்சுப் போட வேண்டியது சுவாமியை. நம்ம பசங்க எல்லாம் என்ன செய்வாங்க எண்டால், அநியாயத்துக்கு சுவாமியை சுத்திச் சுத்தி வருவாங்க. சுவாமி காவுவது, சுவாமியின் வாகனம் காவுவது என்பது இதன் முதற்படி. எல்லோரும் சுவாமியை நோக்கி கும்பிடும் போது இவர்கள் மட்டும் இலக்கு வைத்த பெண்ணை நோக்குவார்கள். அவளும் இவரை நோக்கினால், ஐயா வெரி ஹெப்பி. திருவிழாவின் 25 நாளும் அவர் அந்த கொம்பிலை அந்த இடத்திலையே பிடிச்சு சுவாமி தூக்குவர். அவாவும் அதே இடத்திலை சுத்தி வருவா..

இன்னுமொரு விசயம், தேர்முட்டிப் படி அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மஞ்சம், கைலாசவாகனம், சப்பறம் போன்றவற்றில் சுவாமியை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் படிக்கட்டு. அதில் ஏறினால் கொஞ்சம் எல்லோரையும் விட உயரத்தில் தோன்றலாம். அடித்துப் பிடித்து சுவாமியுடன் ஏறினால் எங்களோட கண் பார்வைக்கு எல்லோரும் தெளிவாகத் தெரிவாங்க. உயரத்தில் நின்று பெரிய நாட்டாமை போல அங்கை இஞ்சை ஓடியாடித் திரியுறது. அப்ப தானே, ஊர் இளவயதுப் பெண்களெல்லாம் ”யாரிந்த மன்மதன்” என உயரே பார்ப்பார்கள்.

முக்கியமான இன்னொரு பகுதி. தேர், சப்பறம், மஞ்சம் போன்றவற்றின் வடம் (பிடித்திழுக்கும் கயிறு). வகுப்பறையைப் போல கோயிலிலும் பெரும்பாலும் ஆண்கள் ஒரு கரை, பெண்கள் ஒரு கரை எனத்தான் வலம் வருவார்கள். பெண்கள் பக்கம் உள்ள வடத்தைப் போய் பிடித்துக் கொள்வது. அதுவும் உட்புறமாக. அப்பத்தானே பெண்ணுங்களை வடிவாப் பார்க்கலாம். கோயில் வீதியின் நாலு மூளையிலும் தேரைத்திருப்பும் போது எப்படியும் வடம் அங்கும் இங்கும் போகத்தான் செய்யும். பெண்ணுங்க பக்கம் நிண்டா கதைக்கிறதுக்கும் எல்லாத்துக்கும் வசதி தானே!

சுவாமியை விட்டு விலத்தியும் (விலகி) ஹீரோயிசம் பண்ணலாம். அதுக்கெண்டு சில இடங்கள் கோயிலிலை இருக்கு. கோயில் வெளி வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடை போன்ற இடங்களில் அல்லது மானப் பந்தல் (கும்பம் வைத்து படையல் படைப்பது) வைப்பார்கள். அதில் நிச்சயம் சாப்பிடுவதற்கு ஏதாவது படையல் பண்ணியிருப்பார்கள். ஐயர் பூசை முடித்ததும் அதைத் தூக்கிக் கொண்டு போய் பெண்கள் பகுதியில் கொடுக்கலாம். (ஆம்பிளைங்க கடுப்பானால் ஒண்டும் செய்ய முடியாது). அல்லது குடுக்கிறவனிட்ட அடிச்சு பிடிச்சு; வேட்டி ஊத்தையாகி ஒரு கேசரியை வாங்கி பொண்ணுங்களுக்கு குடுத்திட்டு நாங்கள் கையிலை மிஞ்சின ஒரு பருப்பு பருக்கையை மட்டும் திண்டு ஏப்பம் விடுவது. (இதெல்லாம் தேவையா பாஸ்?)


கோயிலையும் அன்னதானத்தையும் பிரிக்க முடியாது. அன்னதானம் எண்டா சும்மா வாங்கிட்டு போகலாம் எண்டு நினைக்காதீங்க. வேலாயுதத்திற்கு டிக்கட் எடுத்து முதல் ஸோ பார்த்தாலும் (இங்கையும் விஜயா? ஸப்பா...) எங்கட ஊரில அன்னதானத்தின் முதல் பந்தியில் உட்காரேலாது. நாங்க கோயிலிலை கொஞ்சம் ஓடித்திரிஞ்சு வேலை செய்யுற ஆளா இருந்தா தெரிஞ்ச பொண்ணுங்களை பின் கதவாலை கூட்டிட்டு வரலாம். எல்லாரும் கறி, சோறுக்கு அடிபட நாங்க மட்டும் அவங்களுக்கு வலிய வலிய கொண்டு போய்ப் போடலாம். கொஞ்சம் கோயில் பெடியளோட தொடர்பில்லாத ஆட்களா நாங்கள் இருந்தா, அந்த பொண்ணுங்களை எல்லாம் ஒரு இடத்தில நிற்கச் சொல்லிப் போட்டு சனத்துக்க அடிபட்டு நாங்க சோறு வாங்கி குடுத்திட்டு வயிறு பசியால் கடிக்க மூஞ்சையில் அசடு வழியலாம்.

இதேபோல தண்ணீர்ப் பந்தலில் நின்று அள்ளியள்ளி தண்ணீர் கொடுக்கலாம். கச்சான், பூந்திரி, பகோடா, தேன்முறுக்கு, ஐஸ்கிறீம் என எங்கள் காசில் (ஹீ ஹி அப்பாவின்) அவர்களுக்கு தின்பண்டங்களை வாங்கிக் கொடுக்கலாம். இவ்வளவு ரிக்ஸ் எடுத்தும் ”காவாலி” (ஒண்டுக்கும் உதவாதவன்) என்ற பெயர் தான் கிடைக்குதா? டோண்ட் வொறி.. இரவு திருவிழா முடிந்து போகும் போது அவர்களுக்கு துணையாக இருட்டில் வழிகாட்டியாகவும், பாதுகாவலனாகவும் போகலாம்.

இவ்வளவு கஸ்டப்பட்டும் ஒரு பலனும் இல்லையா? கோயிலுக்கே போகவேண்டாம் பேசாம வீட்டை படுத்திருந்து கேபிள் டி.வி பாருங்க.. இப்பிடியெல்லாம் ரிக்ஸ் எடுத்தா தான் நீங்க ஊரில ஹீரோ.. இல்லாட்டி ஸீரோ..

நன்றி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=110868

http://www.eelavayal...og-post_20.html

2 comments:

  1. நாமும் சுழற்றினோம் . அவள்களும் சுளட்டினாள்கள் :-)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் சகத்திவேல் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் உங்களை சுளட்டியவளின் அனுபத்தையும் பகிரலாமே

      Delete