குழந்தை - கவிதை .
புட்டிப் பாலை எட்டிப் பறித்துக் குடித்தது 
குட்டி பலூனை தட்டித் தட்டிச் சிரித்தது
தொட்டில் மீது பெட்சீட் நனைத்தது

தூங்கும்போது "நரி வெருட்டி" சிரித்தது
இரவிரவா கத்தியழுது
அப்பா அம்மாவின் நித்திரையைக் குழப்பியது
தவழ்ந்து தவழ்ந்து பின் தள்ளாடி நிமிர்ந்து
பெற்றோர் கைபிடித்து நடை பழகியது
என ,

இவையெல்லாம் இப்பொழுது ஞாபகம் இல்லையெனினும்
வேறோரு குழந்தை செய்வதைப் பார்த்து
நாமும் அப்போது இப்பிடித்தானோ!?
என உள்ளுக்குள்ளே சிரிப்பது வழமை!

நன்றி : கவிதையின் கவிதைகள் .


Comments