கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது - கட்டுரை .




விஞ்ஞானம்,மருத்துவம் வளர்ந்துகொண்டே போகிறது ஆனால் மனிதன் முன்னேறுகிறானா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது வளர்ச்சி என்பது மனிதனை அழிப்பதாக இருந்தால் அது வளர்ச்சியல்லவே இன்றைய காலத்தில் முன்னைய காலத்தில் இருந்த மருத்துவத்தை விட எத்தனையோ மடங்கு முன்னேறிவிட்டது ஆனால் மனிதனின் சராசரி ஆயுட்காலம்,ஆரோக்கியம் முன்பை விட வளர்ச்சியடையவில்லை எந்த விதத்தில் எங்கள் வளர்ச்சி இருக்கிறது??? நிற்க..

கருவில் இருக்கும் 3மாத பெண் குழந்தை அப்பாவாகியது.இது சாத்தியமில்லையா? ஏன் சாத்தியமில்லை ???????? சாத்தியமாம் விஞ்ஞானம் சொல்கிறது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை......... இதுதான் விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ள பரிணாமம் இது மனிதனுக்கு அதுவும் ஆண்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கிறது இதற்கு காரணம் குளோனிங் என்ற முறைதான்.

பெண்ணின் கருமுட்டையில் உள்ள மரபணுவை நீக்கி எந்த ஆணுக்கு குழந்தை வேண்டுமோ(உயிரணு தேவையில்லை) அவரின் உடலில் எங்காவது ஒரு மரபணுவை கொண்டுள்ள செல்லை பிரித்தெடுத்து(இது கண்டிப்பாக ஆணின் செல்லாகத்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை) மரபணு நீக்கிய கருமுட்டைக்குள் செலுத்தி பக்குவமாக கருவை வளரசெய்யவேண்டும் இந்த கருவை பெண்ணின் பெண்ணின் கர்பபைக்குள் செலுத்தி குழந்தை உண்டாகும் தன்மைதான் குளோனிங் என்கிறார்கள் இது பல மிருகங்களில் செய்து நிரூபித்தாலும் மனிதனின் இன்னும் செய்யப்படவில்லை என்கிறார்கள். மனிதனை குளோனிங் மூலம் உருவாக்கபோகிறோம் என்ற அறிக்கைக்கு எதிராக கிளம்பிய எதிர்பால் நிறுத்தபட்டது சில நாடுகளில் இதற்கு சட்டபூர்வமான தடையும் இருக்கிறது.இதையும் மீறி சில நிறுவனங்கள் இரகசியமாக இந்த அராட்சியை வெற்றிகரமாக செய்து மனிதனை உருவாக்கிவிட்டதாக சிலர் தெரிவிக்கிறார்கள்.

இப்படியாக மனிதனை உருவாக்கினால் பிறக்கும் குழந்தையின் செல்லின் வயது எந்த மனிதனின் (ஆணோ,பெண்ணோ ) செல்லின் வயதை உடையதாகவே பிறக்கும் குழந்தையின் செல் அதே முதிர்ச்சியில் இருக்கும் எனவே அது அறிவில்,அனுபவத்தில்,பாலியல் தன்மையில் செல்லை எடுத்த நபரினை ஒத்ததாகவே குழந்தை பருவத்திலேயே இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியானால் குழந்தை பிறந்ததுமே பேசுமோ???

நான் பலமுறை நினைத்ததுண்டு இப்போது இருக்கும் அறிவு சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்கும் என் வாழ்க்கை எப்படி மாறி இருக்கும் தவறான முடிவுகள் தவிர்க்கபட்டிருக்கும் என பல நேரங்களில் நினைத்திருக்கிறேன். அது இன்று சாத்தியமாகி இருக்கிறது எனது செல்லில் இருந்து உருவாகும் குழந்தை அச்சு அசல் என்னை போலவே என் அறிவுடன் உருவத்திலும் பிறக்கும் என்றால் அதிசயம்.

ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லை உருவாக்குதல், ஒரு செல்லில் இருந்து ஒரு உறுப்பை உருவாக்குதல்,ஒரு செல்லில் இருந்து குழந்தையை உருவாக்குதல் இப்படியாக இந்த குளோனிங் மனித இனத்துக்குள் நடைமுறைக்கு வந்தால் என்னென்னவெல்லாம் ஆகும் நினைத்து பார்க்கவே முடியவில்லை.ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லை உருவாக்க முடியும் என்றால் மனிதனுடைய பழுதடைந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி மாற்ற முடிந்தால் சிறப்பு, அதிலும் அவர்கள் இளமையாக இருக்கும் போது சேமித்து வைத்து அவர்கள் செல்லை வயதாகியபின் மாற்றமுடியுமேன்றால் இளமை தொடரும். ஒரு செல்லின் இருந்து ஒரு உறுப்பை உருவாக்க முடிந்தால் சிறுநீரகம் ,இதயம் இப்படி உடல் உறுப்புகளை அவரவர் செல்களில் இருந்து உருவாக்கி இலகுவாக மாற்று சிகிச்சை செய்துவிட முடியும்.

ஒரு கருவை உருவாக்க கருமுட்டை மரபணு போதும் என்றால் அந்த மரபணு ஆணினுடையதாகத்தான் இருக்க வேண்டுமென்பதல்ல ஒரு பெண்ணின் மரபணு நீக்கபட்ட கருமுட்டையுடன் அப்பெண்ணின் உடலில் உள்ள மரபணுவை சேர்த்தும் கருவை உருவாக்கிவிடமுடியும் எனவே இங்கு ஆணின் தேவை இல்லாமல் போகிறது.பெண்ணும் பெண்ணும் சேர்ந்து திருமணம் முடிக்கும் இந்த காலத்தில் அவர்கள் இருவருக்கும் ஒவ்வொருவரின் மரபணுக்களை மாற்றி மாற்றி மற்றயவர்களின் கருமுட்டைக்குள் செலுத்தி கருவை உருவாக்கி அவர்களுக்கு வாரிசுகளை உண்டாக்கிவிடலாம் ஆனால் இந்த விடயத்தில் கூட கருமுட்டை இல்லாமல் ஆண்கள் இருவர் சேந்து வாரிசுகளை உருவாக்க முடியாது. ஆண்களை இங்கேயும் இயற்கை வஞ்சித்துவிட்டது.

ஒரு ஆணினதும் பெண்ணினதும் உறவின் போது இருவரினதும் மரபணுக்களோடு சேர்ந்த உயிரணுவும் கருமுட்டையும் சேர்ந்து இயற்கையாக உருவாகும் புதிய கலவை மரபணுகொண்டகரு மூன்றே மாதத்தில் ஒரு வடிவத்துக்கு வந்துவிடும் அந்த மூன்றே மாத கருக்குழந்தையின் மரபணு ஒன்றை எடுத்து அந்த குழந்தைக்கு இன்னொரு குழந்தையை உருவாக்கிவிடலாம் இப்போது மூன்றே மாத கருகுழந்தை அப்பாவாகிவிடும். ஒருவேளை கருவில் இருக்கும் குழந்தைக்கு எதாவது ஆபத்து வந்துவிட்டாலும் அந்த மரபணுவை முதலிலே எடுத்து வைத்துகொண்டால் அதே குழந்தையை உருவாக்கிவிடலாம்.

இப்ப சொல்லுங்கள் கரு உருவாக கருமுட்டையும் மரபணுவும் போதுமென்றால் கருவில் இருக்கும் மூன்று மாத கருவின்(பெண்ணாக இருந்தாலும் பிரச்சனை இல்லை)) செல்லை எடுத்து இன்னொரு மரபணு நீக்க பட்ட கருமுட்டையோடு சேர்த்து கருத்தரிக்க செய்தால் கருவில் இருக்கும் மூன்று மாத பெண் சிசு அப்பாவாகாதா???????


கருமுட்டை உற்பத்தி செய்யமுடியாத பெண்ணுக்கும், உயிரணு உற்பத்தி செய்யமுடியாத ஆணுக்கும் அவரவர் மரபணுமூலம் இந்த குளோனிங் மூலம் வேறொரு பெண்ணின் மரபணு நீக்கபட்ட கரு முட்டையுடன் சேர்த்து கரு உண்டாக்கி அவர்களுக்கு வாரிசுகளை உண்டாக்கலாம் இதை தவிர இவர்களுக்கு வேறுவழியில் குழந்தையை உருவாக்க முடியாது.

இந்த மரபணுக்களை பிரித்து அவற்றினைகொண்டு கருவை உருவாக்குவது போல மரபணுவில் உள்ள பரம்பரை நோய்கள் போன்றவற்றை பிரிக்கமுடிந்தால் இன்னும் சிறப்பு.

இந்த குளோனிங் முறை பாவனையில் வந்தால் ஆண்கள் பெண்கள் சேந்து வாழும் தேவை அருகி போகும். குழந்தை பெறுவதற்கு ஆணின் சரி அரைவாசி பங்கு தேவை என்ற சினிமா வாசகங்கள் எல்லாம் இனி இருக்காது. ஆண்கள் இல்லை என்றாலும் பெண்கள் மூலமாக மனித சமுதாயம் இருக்கும் என்பதால் ஆண்களின் முக்கியத்துவம் குறைந்துபோகும். ஆண் என்பவன் பெண்ணுக்கு காம இன்பம் கொடுபதுக்கு மட்டுமே தேவை என்பது போல ஆகிவிடும்.

பிரபலங்கள் பணக்காரர்கள் தங்கள் செல்களில் இருந்து தங்களை போலவே பலரை உருவாக்க முனைந்தால் ஏற்கெனவே சனத்தொகை பெருக்கத்தால் திண்டாடும் உலகம் வளங்கள் அழிந்துபோய் பொருளாதாரத்துக்காக ஒவ்வொரு நாடும் அடித்துகொள்ளும் மனிதர்களுக்குள் மனிதநேயம் இருக்காது. இரே உருவத்தில் பலர் இருந்தால் என்னவாகும் அடையாளம் காண முடியாமல் பல ஏமாற்றங்கள் நிகழும். அறிவில் குறைந்தவர்கள், பரம்பரை நோயுள்ளவர்கள் ஒதுக்கபட்டு அறிவாளிகள் விஞ்ஞானிகள் வீரர்கள் செல்லில் இருந்து பலரை ஒவ்வொரு நாடும் உருவாக்க தொடங்கிவிடும். இப்படி ஒரு நிலை வந்தால் கற்பனை பண்ணி பார்க்கவே முடியவில்லை இயற்க்கை சமநிலை முழுவதுமாக குழம்பி போகும்.

அணு கண்டுபிடிப்பு ஆரம்பகாலத்தில் மனிதர்களால் போற்றபட்டது ஆனால் இன்று அது பாரிய அச்சுறுத்தலாக இருக்கிறது விஞ்ஞான அதிவேக வளர்சி மனித வாழ்க்கைக்கு அழிவையே தேடிடருவதாக அமைந்திப்பதை நாங்க உலக இன்றைய நடத்தைகளின் ஊடாக புரிந்துகொள்ளகூடியதாகவே இருக்கிறது. சில புதிய கண்டுபிடிப்புக்களால் இருக்கும் நன்மைகளை விட பாதிப்புதான் அதிகம் இருக்கும் என்று தெரிந்து சில நாடுகள் மற்றைய நாடுகளில் இருந்து தங்களை தொழில்நுட்பத்தில் வளர்ந்ததாக காட்டிக்கொள்ள மக்கள் சுகந்திரத்தை,பாதுகாப்பை பாதிக்கும்,அச்சுறுத்தும் கண்டுபிடிப்புகளை நடைமுறையில் வைத்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியின் கேடு என்று சொல்லவேண்டும்.

இந்த குளோனிங் முறை கண்டுபிடித்ததில் இருந்து மதங்கள் எல்லாம் இந்த முறை தங்கள் மதத்தில் இருப்பதாக அலட்டிக்கொள்ள ஆரம்பித்து விட்டது.

இனிவரும்காலத்தில் கண்டிப்பாக இந்த குளோனிங் நடைமுறைக்கு வரத்தான் போகிறது இப்போது இல்லை என்று சந்தோசபட்டா லும் எதாவது சில நாடுகள் இதில் எதாவது சாதனைகள் செய்ய ஆரம்பித்தால் மற்றைய நாடுகளும் ஆரம்பித்துவிடும் சட்டங்கள் மாற்றப்படும்.

இந்த மாற்றங்கள் மனிதனை எங்கு கொண்டுசென்று விடும் என்பது யாருக்கும் தெரியாது..........

விஞ்ஞானம் மனித வாழ்வை முன்னேற்றுகிறதா? பசித்த வயிறுகள் பல இருக்க மனிதநேயமற்ற கொடிய கொலைகள் தடுக்கபடாமலிருக்க வளர்ச்சிஎன்ற பெயரில் இவை எதை சாதிக்க போகின்றன??????????



Comments