துவாரகா - கவிதை .



உந்துல, சந்திரமண்டலமெனத்
தலை சாய்த்திருந்த சிறையில்
...
தண்ணீர் மென்மையானதா
நொந்ததா மனவெளி
சுரங்கங்களில் கலகத்தின்
அழிவுண்டான இரவொன்றில்
தமிழ்ச் சகோதரியைப்
பற்றி எதற்காக கலவரம்?

கனவுகளின் முன்னணிக்கு
உண்மையாகவே வெடி பட்ட நாளில்
கண்ணீர் வரிசையிட்டதோ வழி நீளவும்
பிக்குவின் காவியுடையைப் போல
காத்திருந்த செங்கொடி
யாருடைய குருதியால்
சிவந்ததென்பது மறந்து விட்டதா?

யுத்தத்தின் பெயரில் மனிதர்கள்
மலைகள் நடுங்குகையில்
சத்தமின்றி பின்புறங்களில்
களைப்பாறிய துணியை
அவிழ்த்துக் கொண்டு
ஆயுதங்களை வெளிக்கொணர்ந்து
எய்த மின்னற்தீ இதயத்தின்
ஆழத்திலிருந்து கேட்கிறதா?

சிங்கம் வாலின் நுனியை
வளைத்துச் சுருட்டிய மாத்திரத்தில்
தலை சாய்த்து
தமிழ் அரிச்சுவடிக்கு தீயிட்டவர் யார்?
இருளைக் கிழித்துக் கொண்டு
சந்திரன் பிரகாசிக்கும் விதம் குறித்து
நிலாமுற்றங்களில்
சண்டைகள் இல்லை சகோதரர்களே!

கார்த்திகைப் பூவொன்றின்
அழகு கண்ணில் பட்டு
பறந்து வரத் தோன்றியதா குளவிகளே!
மறைத்து அடிக்கும்
இலையொன்றின் தடம் தெரிந்து
சிரித்துப் பிறகு
விம்மியழுவோம் நண்பர்களே!

(மஞ்சுள வெடிவர்த்தன, டிசம்பர் 3, 2009)

Comments