சொறிநாயைப் பிடித்து
“சோல்ஜர்” எனப் பெயர் வைத்து
கறியோடு சோறும்
வெறியேற அபினும்
குழைத்துண்ணக் கொடுத்து
வடக்கே போ என்றான்
வேட்டைக்கு
காவாலி சோல்ஜர்
கடைசித் தெருதாண்டி
முக்கி முணகி
மோப்பம் பிடித்தபடி
கால்தூக்கி
எல்லை வரைகின்றான்
என் வீட்டுச் சுவரில்
அடித்து விரட்ட
ஆளில்லா வீடொன்றில்
நாநீட்ட
தாகம் தணித்தவளின்
கைநக்கி
கோரைப்பல் தெரியச்
சிரித்தான்
வேட்டை நாயில்லா
வீடொன்றாய்ப் பார்த்து
கோழி இரண்டையும் -தென்னங்
குலை நான்கையும்
தேசியச் சொத்தாக்கினான்
சிதறுண்ட கால்கொண்ட
சிறுபுலியின் கதவுடைத்து
பெண்மையை அரசுடைமையாக்கினான்
காலம் பொறுமையாய்
காத்திருக்கிறது
காலம் வருவதற்காய்
நன்றி: http://www.eelavayal.../blog-post.html
இக்கவிதை மன்னார் அமுதனால் எழுதப்பட்டது... ஆக்ககர்த்தாவின் பெயரையும் இணைத்துப் பகிர்வதே சிறப்பு...
ReplyDeleteஈழவயல் தளத்தில் tag பகுதியில் இப்பெயரைக் காணலாம்... நன்றி
வணக்கம் மன்னார் அமுதன் ,
Deleteஉங்கள் வரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் . இந்தக்கவிதை நீங்கள் எழுதியது தான் என்பது எனக்குத் தெரியும் . நான் மற்றய வலைப்பூக்களில் எனக்குப்பிடித்தவற்றை யாழ் இணையத்தில் இணைக்கும்பொழுது , கருத்துக்கள விதிகளின்படி பதிவின் மூல இணப்பை இணைத்து விடுவேன் . அதையே எனது வலைப்பூவான அடுத்த வீட்டு வாசத்தில் தரவேற்றிவிடுவேன் .எனது இந்த வலைப் பூவில் உங்கள் கவிதையின் மூல இணைப்பும் , யாழ் இணையத்தின் இணைப்பும் உள்ளது . எனவே இந்த விடயத்தில் நான் மனச்சாட்சியுடனேயே நடந்திருக்கின்றேன் என நினைக்கின்றேன் . நான் ஏதாவது தெரியாது தவறு விட்டிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் .
நேசமுடன் கோமகன்