‘வேட்கை’-கவிதை.




கடலின் கரையில் மணிலில் மாளிகை
கட்டிட விரும்புகின்றேன்
கதிரின் பிழம்பைக் கையால் தழுவிடக்
காதல் கொள்ளுகின்றேன்

உடலின் கூடுவிட்டு உயிரால் ஓடி
உலவிட விழைகின்றேன்
ஊருணி நீர்மேல் ஓவியம் தீட்டும்
உரத்தை வேண்டுகின்றேன்.
வெண்முகிலுக்குள் படுத்துக் கிடக்க,
வேட்கை கொள்ளுகிறேன்.

நன்றி: கவிஞர் மீரா

Comments