புராதன இலங்கை சரித்திரம்-வரலாறு.




புராதன இலங்கை : 

தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதி பூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத்துவதே இந் நூலின் நோக்கமாகும். 

புத்தூரில் பிரசித்த நொத்தாசிசாக விளங்கிய உயர் திரு. வ. நாதர் ஏன்பவரால் வெளியிடப்பட்டுள்ள அகத்தியர் இலங்கை என்னும் நூலில் இந்த உண்மை தெளிவாக்கப்பட்;டுள்ளது. இந்த நூலை மதுரையில் வாழ்ந்த உயர்திரு கந்தசாமிச் செட்டியரே தமக்கு வழங்கியதாக திரு. நாதர் அவர்கள் தமது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.'அகத்தியா இலங்கை என்னும் இந்த நூலை உசாத்துணை நூலாகக் கொண்டு புராதன இலங்கை என்னும் இநதப் பக்கம் வெளிவருகின்றது. 

இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் தமிழர்கள் கூலிவேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்றும் பொய்யான கதைகளைச் சிங்களப் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரஞ் செய்து அதன் மூலம் சிங்கள இனவெறியை அவர்களுக்கு ஊட்டி இலங்கையில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி அழித்து விடத் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர். இவ்வாறான பொய்ப்பிரசாரத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களை அழித்து ஒழிப்பதைத் தவிர்க்கவும் இலங்கை வாழும் தமிழர்களுக்குச் சிங்களவர்களிலும் பார்க்க உரிமை கூடுதலாக உண்டு என்பதை எமது மக்கள் ஆதாரபூர்வமாக அறிய வைப்பதற்கும் இது போன்ற பக்கங்கள் வெளிவருவது மிக மிக அவசியமாகும். இந்த அவசியத்தை உணர்ந்தே இந்தச் சிறிய இணைய பக்கத்தையும் வெளியிட முன்வந்துள்ளேன். எனவே இந்த இணையப் பக்கத்தை ஈழத்தமிழ் மக்களாகிய நாங்கள் விழிப்படைவோமாகுக... எழுச்சியடைவோமாகுக. 

ப. கணபதிப்பிள்ளை 

தொடரும்

Comments