தமிழ்மொழிக்குள்ள பல சிறப்புகளில் சொற்சிறப்பும் ஒன்று. தமிழ்மொழியிலுள்ள பருவப்பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இச்சொற்களின் சிறப்பு, உருவத்தையும் பருவத்தையும் காட்டி நிற்பதாகும்.
ஆண்களின் பருவப்பெயர்கள்:
பாலன் -7 வயதிற்குக்கீழ்
மீளி -10 வயதிற்குக்கீழ்
மறவோன் -14 வயதிற்குக்கீழ்
திறலோன் -14 வயதிற்கும்மேல்
காளை -18 வயதிற்குக்கீழ்
விடலை -30 வயதிற்குக்கீழ்
முதுமகன் -30 வயதிற்கும்மேல்
மற்றொரு பட்டியல்:
பிள்ளை -குழந்தைப்பருவம்
சிறுவன் -பாலப்பருவம்
பையன் -பள்ளிப்பருவம்
காளை -காதற்பருவம்
தலைவன் -குடும்பப்பருவம்
முதியோன் -தளர்ச்சிப்பருவம்
கிழவன் -மூப்புப்பருவம்
பெண்களின் பருவப்பெயர்கள்:
பேதை - 5 வயதிற்குக்கீழ்
பெதும்பை -10வயதிற்குக்கீழ்
மங்கை -16வயதிற்குக்கீழ்
மடந்தை -25வயதிற்குக்கீழ்
அரிவை -30வயதிற்குக்கீழ்
தெரிவை -35வயதிற்குக்கீழ்
பேரிளம்பெண் -55வயதிற்குக்கீழ்
பூவின் பருவங்கள்:
அரும்பு - அரும்பும்நிலை
மொட்டு -மொக்குவிடும்நிலை
முகை -முகிழ்க்கும் நிலை
மலர் -பூநிலை
அலர் -மலர்ந்தமநிலை
வீ -வாடும்நிலை
செம்மல் -இறுதிநிலை
இலைகளின் பருவப்பெயர்கள்:
கொழுந்து -குழந்தைப்பருவம்
தளிர் -இளமைப்பருவம்
இலை -காதற்பருவம்
பழுப்பு -முதுமைப்பருவம்
சருகு -இறுதிப்பருவம்
உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்
ReplyDeleteகாண:http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_16.html
வணக்கம் ஆரசன் சே என்னையும் ஒரு மனிதனாக மதித்து உங்கள் வலைப்பூவிலும் நட்பு வட்டத்திலும் அறிமுகப்படுத்தியமைக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் . எனதுவலைப்பு கோவையூரான் ( தமிழர் வாழ்வியல் கருவூலம் http://koovaiuraan.blogspot.fr/ ) வடகோவையூரான் ( அடுத்த வீட்டு வாசம் http://vadakovaiouraan.blogspot.fr/ ) என்ற உபதலைப்புகள் உள்ளன உண்மையில் அடத்தவீட்டு வாசம் எனது சுயபடைப்புகள் இல்லை என்னைக் கவர்ந்த மற்றையவர்களின் படைப்புகளை யாழ் இணையத்தில் பதிவு செய்யும் பொழுது அவர்களது வலைப்பூ மூல இணைப்பு , வெளிவந்த யாழ் இணையத்தின் இணைப்பு இரண்டையும் எனது " அடுத்த வீட்டு வாசம் " என்ற தலைப்பில் வலைப்பூவாக உருவானது . எனது சுய ஆக்கங்கள் எனது தாய் வலைப்பூவான கோமகன் http://koomagan.blogspot.fr/ என்ற பெயரிலேயே உள்ளது . மேலும் நான் யாழ் இணையத்தில் http://www.yarl.com/ கருத்துகள உறுப்பினராக இருக்கின்றேன் . இந்தக் கருத்துக்களைத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி கள உறுப்பினராக இணைய ஊக்கப்படுத்தினால் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன் . உங்கள் என்னையிட்ட அக்கறைக்கு மீண்டும் நன்றி சொல்கின்றேன் . உண்மை ஓங்குக!!!! வாழியதமிழ்!!!!!
Deleteநேசமுடன் கோமகன்
அப்பாடி இவ்வளவு இருக்கா ?
ReplyDeleteவாங்கோ ராஜபாட்டை ராஜா. தமிழில் இதெல்லாம் சின்ன சாம்பிள் . இன்னும் முத்துக்குளிக்க இருக்கிறது . ஆனால் நேரம் இல்லை . வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் .
Deleteநீங்களும் என் ராஜபாட்டை : ராஜா யாழ் இணையத்தில் http://www.yarl.com/ கருத்துக்கள றுப்பினராக இணையலாமே ??
Deleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் . எனது நண்பர்கள் வட்டத்தில் உங்களைக் கண்டிருக்கின்றேன் . உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் , என்னைப் பின்தொடர்வதற்கும் மிக்க நன்றிகள் .நீங்களும் யாழ் இணையத்தில் http://www.yarl.com/ கருத்துக்கள றுப்பினராக இணையலாமே ??
ReplyDelete