உச்சி முதல் அடிவரை அனைத்துமே பயன்படக்கூடிய மரம் பனைமரம். இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளுமே நமக்கு பயன்படுகிறது. அதிலும் ஓலையின் பயன்பாடு மிகவும் அதிகம்.
பலஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறத்திற்கு கிராக்கி பயங்கரமாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.
இதனால் மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். இதனால் பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே பார்க்க முடியாது.
மக்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது.
ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள் வரத்தொடங்கின. இவை மிகவும் எளிதாக கையாளக்கூடியதாக இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கினார்கள். ஆகையால் பனை ஓலை பெட்டிகள் உள்ளிட்ட பனைப் பொருட்களின் தேவை குறைந்து விட்டது.
பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப்பெட்டிகளின் வருகையால் பனை ஓலைப்பெட்டிகள் காணாமல் போய் விட்டன. அந்த தொழிலும் நலிவடைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் ஒரு காலத்தில் பனை ஓலையினால் செய்யப்படும் பொருட்களின் உற்பத்தியானது மிகவும் சிறந்து விளங்கியது.
குறிப்பாக மிட்டாய் வைக்க பயன்படுத்தும் பனை ஓலைப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. ஏனென்றால் இப்பகுதியானது பனை மரங்கள் நிறைந்த பகுதியாகும். ஆகவே பனை ஓலையினால் செய்யக்கூடிய பொருட்களான முறம், கல்யாண சீர்வரிசைப் பெட்டி, வீட்டின் சுவற்றை சுற்றி அமைக்கப்படும் வேலி, மேலும் இனிப்பு வகைகளை வைக்க பயன்படும் ஓலைப்பெட்டி போன்றவைகளும் தயாரிக்கப்படுகின்றன.
கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தின்பண்டங்களின் உற்பத்தியானது அதிக அளவில் இருப்பதால், அத்தகைய தின்பண்டங்களை பார்சல் செய்வதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலைப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற் கேற்றார் போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும்.
முன்பெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கான பனை ஓலைப்பெட்டிகள் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. மேலும் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் போது இங்கிருந்து சுமார் 80,000 முதல் ஒரு லட்சம் வரை பெட்டிகள் அனுப்பப்பட்டு வந்தது.
திருவிழாக் காலங்களில் உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு செல்பவர்கள் ஓலைப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள் என்பதால் அனைத்து இனிப்பு வகைளிலுமே பனை ஓலைப் பெட்டிகளில் வைத்தே பண்டங்களை வைத்திருப்பார்கள்.
நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளின் வருகையை தொடர்ந்து ஓலைப் பெட்டிகளின் பயன்பாடானது குறையத் தொடங்கியது. இதனால் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில் தற்பொழுது ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால் அதில் சூடான தின்பண்டங்களை பார்சல் செய்யும்பொழுது வேதிப்பொருட்கள் கலப்பதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது.பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்படும் உணவு பண்டங்களானது விரைவில் கெட்டுப் போய்விடும். மேலும் உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதால் அவை கெட்டுப் போகாமல் இருக்கலாம். ஆனால் அப்பொருட்களின் இயற்கைத்தன்மையை இழந்து விடுவது மட்டுமின்றி, அவற்றை உட்கொள்வதால் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுகின்றது.
ஆனால் பனை ஓலைப்பெட்டிகளில் வைக்கப்படும் திண்பண்டங்கள் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. உணவுப்பொருளுக்கு புதிய மணமும், உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது. ஆகவே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பனை ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், அனைவரும் உடல் நலத்தை காக்கலாம்.
மேலும் நலிவடைந்து வரும் பனைப்பொருட்கள் தொழிலுக்கு புத்துயிர் அளித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கையினால் செய்யப்படும் படின ஓலைபெட்டிகளை பொதுமக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
இன்னும் சிறிது நாட்களில் மறைந்து விடுமோ என்று அச்சமாகத்தான் உள்ளது...
ReplyDeleteபயன் தரும் தகவல்களுக்கு நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...
உங்கள் வரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றிகள் திண்டுக்கல் தனபாலன் .
Deleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteஉங்கள் வரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றிகள் ராஜா.
Deletevisit :
ReplyDeleteசூது கவ்வும் : விமர்சனம்
உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது . ஆனால் எனக்கு முன்பு சினிமாவில் ஆர்வம் இருந்தது இப்ப இல்லை . எங்கடை வாழ்க்கையே சினிமா மாதிரித்தானே போட்டுது ராஜா . மன்னிச்சுக் கொள்ளுங்கோ .
Deleteமறந்துபோனவைகளை மீட்டெடுக்கும் பதிவு...
ReplyDeleteநீங்கள் கூறிய இடங்களில் அதிகமாக பார்த்திருக்கிறேன்.
மேலும்
இன்னும் சில பகுதிகளில் உயிர்ப்புடன் இருக்கின்றன இத்தொழில்...
ஆனால் வருமானம் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
திருச்செந்தூர் ( சில்லுக் கருப்பட்டி அடைக்க) திருநெல்வேலி சரகங்களில் இன்னும்
வாழ்ந்துகொண்டிருக்கின்றன மெலிதான உயிருடன்...
அருமையான பதிவு நண்பரே....
ஈழத்தில் குறிவைக்கப்பட்ட தமிழர் சொத்துக்களில் பனையும் ஒன்றாகும் . உங்கள் வரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றிகள் மகேந்திரன் .
Delete