யார் இந்த களப்பிரர்கள்?வரலாறு -பாகம் - பாகம் 03 -களப்பிரர்களும் தமிழ் மொழி வளர்ச்சியும்.


களப்பிரர்கள் காலத்தில் முக்கியமாக தமிழகத்தில் இரண்டு வகையான மாற்றங்கள் முன் எப்போதும், எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு நடந்துள்ளது. அதாவது,


01.தமிழ் எழுத்துரு மாற்றம் .

02 .இலக்கியத் தோன்றல்கள் .

தமிழ் பிராமி (தமிழி கி.மு 5 - கி,பி 3 ம் நூற்றாண்டு) எழுத்திலிருந்து வட்டெழுத்தாக தமிழ் மாற்று வடிவம் பெற்றது களப்பிரர்கள் காலத்தில் தான். அதாவது தமிழ் பிராமி எழுத்துகள் கோடு கோடாக இருக்கும். இந்த வட்டெழுத்துகளிலிருந்து தான் நாம் தற்பொழுது பயன் படுத்தும் நவீன வடிவத்தை தமிழ் எழுத்து முறை பெற்றது என்று கூறுவர். ஆனால் தற்ப்பொழுதுள்ள தமிழ் நவீன எழுத்து முறை வட்டெழுத்துகளிலிருந்து தோற்றம் பெற்றவை அல்ல அவை தனியாக சோழ மற்றும் பல்லவர்களால் வட்டெழுத்துக்கு பதில் கொண்டுவரப்பட்டது என்றும் கூறுவார்.

கோடு கோடான பிராமி எழுத்துகள் கற்க்களில் செதுக்க ஏதுவாக இருப்பதை கவனிக்கவும். பிராமி எழுத்துகள் கோடு கோடாக இருப்பதால் அவை ஓலைச் சுவடிகளில் எழுத கடினமாதலால் (கிழிந்து விடுகின்ற) வட்டெழுத்துகளாக தோற்றம் பெற்றன.

தமிழ் பிராமி எழுத்து- தமிழ் என்பதை பிராமியில் இப்படித்தான் எழுத வேண்டும்

தமிழ் எழுத்து முறை வரலாறுவட்டெழுத்து வளர்ந்த விதம் :இப்போது நாம் வழங்கிக்கொண்டிருக்கும் பெரும்பான்மையான இலக்கியங்கள் களப்பிரர்கள் காலத்தில் தோன்றிய நூல்களே ஆகும்.

இன்று நாம் உலகப் பொது மறையாக கூறிக்கொண்டிருக்கும் திருக்குறள் கூட களப்பிரர் காலத்தில் தோன்றிய முக்கியமான நூல் ஆகும். ஆனால் அதற்க்கு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியதாகவும் குறிப்பிடுவர். ஆனால் களப்பிரர்கள் காலத்தில் தான் திருக்குறளுக்கு உண்மையான வடிவம் பெற்றது.

கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சீவக சிந்தாமணி, முது மொழிக் காஞ்சி, விளக்கத்தார் உத்து (கூத்து நூல்), நரி விருத்தம், எலி விருத்தம், திருமூலரின் திருமந்திரம், காரைக்கால் அம்மையாரின் திருவந்தாதி, முதல் ஆழ்வார்கள் எனக் கூறப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவர் பாடிய திருவந்தாதி நூல்கள் மற்றும் முத்தொள்ளாயிரம் ஆகிய நூல்கள் களப்பிரர் காலத்தில் தோன்றியவை ஆகும். இந்நூல்களில் களப்பிரரைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை.

அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள் இவர்கள் காலத்தில் தோன்றியது தான்.

களப்பிரர்கள் காலத்திற்கு முன்பு தமிழ் இலக்கியங்களில் ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைப் பாக்கள்தான் இருந்தன. அதற்குள்ளேயே தமிழ்ப்பாக்கள் முடங்கிக் கிடந்தன. ஆக, களப்பிரர்கள் வந்த பிறகுதான் தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகள் வந்தன.

ஆனால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்த புத்ததத்தர் என்னும் பௌத்தத் துறவி பாலி மொழியில் எழுதிய அபிதம்மாவதாரம் என்னும் நூலில் களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிய ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இந்த ஒன்று மட்டுமே களப்பிரரைப் பற்றி அறிய உதவும் சமகாலச் சான்று ஆகும்.

ஆனால் இதில் உள்ள ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் களப்பிரர்கள் காலத்தில் தோன்றிய நூல்களில் களப்பிரர்கள் பற்றி எந்த ஒரு குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் களப்பிரர்கள் காலத்திற்கு பின்னர் எழுதப்பட்ட நூல்களில் களப்பிரர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. ஆனால் களப்பிரரைப் பற்றிய குறிப்புகள் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய, இலக்கண நூல்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய கல்லாடம், பெரிய புராணம் என்னும் இலக்கிய நூல்களிலும்,யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூல்களிலும் களப்பிரர் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. பல்லவர் மற்றும் முற்காலப் பாண்டியர் காலத்தில் வெளியிடப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பேடு, வேலூர்ப்பாளையம் செப்பேடு, காசக்குடிச் செப்பேடு, தளவாய்புரம் செப்பேடு, வைகுந்தப் பெருமாள்கோயில் கல்வெட்டு ஆகியவற்றிலும் களப்பிரர் பற்றிய சில செய்திகள் இடம்பெறுகின்றன...

ஆனால் களப்பிரர்கள் காலத்தில் தோன்றிய நூல்கள் பல இருந்தாலும் களப்பிரர்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. இந்த நூல்களை களப்பிரர்கள் ஆதரித்தார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. அதே சமயம் தமிழர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் களப்பிரர்களால் எப்படி தமிழகத்தை முன்னூறு ஆண்டுகள் ஆண்டனர் என்ற கேள்வியும் எழுகிறது. களப்பிரர்கள் காலத்தில் பல சமூக மாற்றம் ஏற்ப்பட்டதாக கூறுகின்றனர். அதில் விவசாய குடிகளின் நிலை மற்றும் அவர்களின் செல்வாக்கு உயர்ந்ததாகவும், அதே சமயம் பிராமணர்களின் செல்வாக்கு குறைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல தானங்கள் நிறுத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் கூட சமண சமயத்தை சார்ந்தவர் என்ற வாதமும் களப்பிரர்கள் காலத்தில் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் பங்கு முக்கியமானது என்பதை காட்டுகிறது. மேலும் அக்காலங்களில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி கூட பவுத்த முனிவரால் இயற்றப்பட்டது என்ற வாதமும் களப்பிரர்கள் ஆதரித்திருப்பர் என்பதையே காட்டுகிறது.

ஆனால் களப்பிரர்கள் இதனை ஆதரித்தனர் அல்லது முற்றாக எதிர்த்தனர் என்பதற்கான முறையான சான்றுகள் ஏதும் இல்லை. பிற்காலத்தில் அழிக்கப்பட்டிருக்கலாம்.

களப்பிரர்களுக்கும் பிராமினர்களுக்கும் இடையில் என்ன நடந்திருக்கலாம், அவர்கள் ஏன் முற்றாக அழிக்கப்பட்டிருப்பர் என்பது பற்றி அடுத்து வரும் தொடர்களில் பார்க்கலாம் .

தொடரும்

நன்றி : இரவின் புன்னகைகாக வெற்றிவேல்
Comments

 1. முதலில் காப்பி பண்ணும்போது அதை எழுதியவருக்கு முன்னுரிமை கொடுத்து அவரின் தளத்தையும், பெயரையும் நன்றி என்று குறிப்பிட வேண்டும் .. அதை விட்டுவிட்டு சும்மா கடமைக்கு போடுவது அழகல்ல, அதுவும் நீங்கள் போட்ட அந்த நண்பரின் தளமும் சரியாக குறிப்பிடப் படவில்லை ..

  முதலில் காப்பி பண்ணுவதை நிறுத்துங்கள், இல்லையேல் எங்கிருந்து எடுதிங்களோ அவருக்கு உரிய மரியாதையை கொடுங்கள் ...

  ReplyDelete
  Replies


  1. அரசன் சேSeptember 19, 2013 at 4:04 PM

   முதலில் காப்பி பண்ணும்போது அதை எழுதியவருக்கு முன்னுரிமை கொடுத்து அவரின் தளத்தையும், பெயரையும் நன்றி என்று குறிப்பிட வேண்டும் .. அதை விட்டுவிட்டு சும்மா கடமைக்கு போடுவது அழகல்ல, அதுவும் நீங்கள் போட்ட அந்த நண்பரின் தளமும் சரியாக குறிப்பிடப் படவில்லை ..

   முதலில் காப்பி பண்ணுவதை நிறுத்துங்கள், இல்லையேல் எங்கிருந்து எடுதிங்களோ அவருக்கு உரிய மரியாதையை கொடுங்கள் ... /////
   வணக்கம் அரசன் சே , முதலில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் . நீங்கள் குறிப்பிட்ட தவறைத் திருத்தம் செய்துள்ளேன் . மேலும் நான் யாழ் இணையத்தில் கோமகன் என்ற பெயரில் எழுதி வருவது உங்களுக்குத் தெரியாத விடையமல்ல . நான் விரும்பிய வேறு நண்பர்களது ஆக்கங்களைப் பதிவதற்காகவே " அடுத்தவீட்டு வாசம் " என்ற பெயரில் இந்த வலைப் பூவை , கோமகன் வலைப் பூவின் கீழ் இணைத்தேன் . அதில் எனது நண்பர்களது ஆக்கங்களுகுரிய மரியாதையை சரியாகத்தான் கொடுத்து வந்துள்ளேன் . இந்தப் பதிவில் நான் வேலைக்குப் போகின்ற அவசரத்தில் சரியாக அதிகம் கவனிக்கவில்லை தவறுக்கு வருந்துகின்றேன் . அதேவேளையில் வெறும் கடமைக்கு இணைக்கின்றேன் என்ற சொல்லாடலானது என்னை மனம் நோகச் செய்கின்றது . நன்றி .
   நேசமுடன் கோமகன்

   Delete
 2. உங்களை மனம் நோக அந்த வார்த்தையை உபயோகிக்கவில்லை நண்பரே ... உங்களின் மன வருத்தத்திற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன் ..

  நீங்கள் யாழ் தளத்தில் வெற்றி என்பவரின் பதிவை எடுத்து வெளியிட்டிர்கள் மிக்க சந்தோஷம் ... ஆனால் அதே பதிவை தான் இங்கும் வெளியிட்டு இருக்கிறிர்கள் இருப்பின் யாழ் தளத்தை முதலிலும், இரவின் புன்னகை தளத்தை இரண்டாமாக பதிவு செய்து இருப்பது எனக்கு சரியாக படவில்லை ... எங்கிருந்து முதன்மையாக எடுத்து கையாண்டிர்களோ அவரின் தளத்தை முதன்மை படுத்துவதில் தவறில்லை நண்பா ... மேலும் அவரின் பெயரையும் பயன் படுத்தி இருந்தால் அவருக்கு மேலும் ஊக்கமாக இருக்கும் .. (நீங்களே உங்களின் அனுமதியும், வலைப்பூ முகவரியும் கொடுக்கவேண்டும் என்றல்லவா தலைப்பிலேயே கொடுத்து இருக்கிறிர்கள் ... ) உங்களை வருந்தச் செய்ய நான் பதியவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன் ..

  தோழமையுடன்

  அரசன் ...

  ReplyDelete
  Replies
  1. அரசன் சேSeptember 20, 2013 at 6:55 AM

   உங்களை மனம் நோக அந்த வார்த்தையை உபயோகிக்கவில்லை நண்பரே ... உங்களின் மன வருத்தத்திற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன் ..

   நீங்கள் யாழ் தளத்தில் வெற்றி என்பவரின் பதிவை எடுத்து வெளியிட்டிர்கள் மிக்க சந்தோஷம் ... ஆனால் அதே பதிவை தான் இங்கும் வெளியிட்டு இருக்கிறிர்கள் இருப்பின் யாழ் தளத்தை முதலிலும், இரவின் புன்னகை தளத்தை இரண்டாமாக பதிவு செய்து இருப்பது எனக்கு சரியாக படவில்லை ... எங்கிருந்து முதன்மையாக எடுத்து கையாண்டிர்களோ அவரின் தளத்தை முதன்மை படுத்துவதில் தவறில்லை நண்பா ... மேலும் அவரின் பெயரையும் பயன் படுத்தி இருந்தால் அவருக்கு மேலும் ஊக்கமாக இருக்கும் .. (நீங்களே உங்களின் அனுமதியும், வலைப்பூ முகவரியும் கொடுக்கவேண்டும் என்றல்லவா தலைப்பிலேயே கொடுத்து இருக்கிறிர்கள் ... ) உங்களை வருந்தச் செய்ய நான் பதியவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன் ..

   தோழமையுடன்

   அரசன் ... ///////


   வணக்கம் அரசன் சே ,

   உங்கள் அன்பான பதிலுக்கு மிக்க நன்றி . நீங்கள் என்மீது கொண்ட அக்கறையினாலேயே என்மீது சரியான விமர்சனத்தை வைத்துள்ளீர்கள் . எனது நோக்கம் சரியாக இருந்தாலும் நான் இந்தப் பதிவின் படைப்பாளியின் முன் அனுமதியைப் பெற்றரிருக்க வேண்டும் . அதுதான் அறமும் கூட . எனது தவறை நான் உணர்கின்றேன் . எனது தவறுக்கு மனம் வருந்துகின்றேன் . வெற்றிவேலின் இந்தப் படைப்பில் வேண்டிய திருத்தங்களைச் செய்துள்ளேன் . நாம் இருவரும் நாட்டால் வேறுபட்டாலும் மொழியாலும் இனத்தாலும் இரண்டறக் கலந்தவர்கள் . உங்கள் போன்றோரின் ஆகபூர்வமான விமர்சனங்களே என்னை மேலும் வழி நடத்தும் . என்மீதான உங்களின் அக்கறைக்கு மீண்டும் நன்றிகள் .

   நேசமுடன் கோமகன்

   Delete
 3. வணக்கம் தியாகராஜா,

  முதலில் எனது பதிவினைப் பகிர்ந்ததற்கு நன்றி. ஆனால் தாங்கள் தங்கள் வலையின் மேற்ப்பகுதியில் வலையின் பதிவுகளை பிரதி செய்யுமுன் முன் அனுமதி அவசியம் என்று குறிப்பிட்டுள்ளீர்களே, தாங்கள் என்னிடம் எவ்வகையில் அனுமதி பெற்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா???

  மேலும் பதிவின் கீழே நன்றி என்று கூறி யாழ் தளத்தின் இணைப்பை முதலிலும் பின்பு எனது தளத்தின் இணைப்பை கொடுத்துள்ளீர்கள். எனது பதிவின் பிரதியை தாங்களே தான் அங்கும் போட்டுள்ளீர்கள், அப்படி இருக்க இரண்டு இணைப்புகளும் எப்படி இங்கே தங்களால் கொடுக்க இயலும். பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், யாழ் தளத்திலிருந்து நான் பிரதிஎடுத்தது போல் தானே கருதுவார்கள். இது சரியா...?

  என் பெயர், தளத்தின் பெயர் என எதுவும் குறிப்பிடாமல் இருப்பது, என் தள இணைப்பை விட யாழ்க்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

  நல்ல பதிவுகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற தங்கள் எண்ணம் போற்றுதலுக்குரியது. ஆனால் அவர்களுக்கு உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி, வணக்கம்...

  ReplyDelete
  Replies
  1. வெற்றிவேல்September 20, 2013 at 7:26 AM

   வணக்கம் தியாகராஜா,

   முதலில் எனது பதிவினைப் பகிர்ந்ததற்கு நன்றி. ஆனால் தாங்கள் தங்கள் வலையின் மேற்ப்பகுதியில் வலையின் பதிவுகளை பிரதி செய்யுமுன் முன் அனுமதி அவசியம் என்று குறிப்பிட்டுள்ளீர்களே, தாங்கள் என்னிடம் எவ்வகையில் அனுமதி பெற்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா???

   மேலும் பதிவின் கீழே நன்றி என்று கூறி யாழ் தளத்தின் இணைப்பை முதலிலும் பின்பு எனது தளத்தின் இணைப்பை கொடுத்துள்ளீர்கள். எனது பதிவின் பிரதியை தாங்களே தான் அங்கும் போட்டுள்ளீர்கள், அப்படி இருக்க இரண்டு இணைப்புகளும் எப்படி இங்கே தங்களால் கொடுக்க இயலும். பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், யாழ் தளத்திலிருந்து நான் பிரதிஎடுத்தது போல் தானே கருதுவார்கள். இது சரியா...?

   என் பெயர், தளத்தின் பெயர் என எதுவும் குறிப்பிடாமல் இருப்பது, என் தள இணைப்பை விட யாழ்க்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

   நல்ல பதிவுகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற தங்கள் எண்ணம் போற்றுதலுக்குரியது. ஆனால் அவர்களுக்கு உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

   நன்றி, வணக்கம்... ////////

   வணக்கம் வெற்றிவேல் ,

   முதலில் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் . உங்கள் முன் அனுமதியின்றி உங்கள் பதிவை யாழ் இணையத்தில் தரவேற்றியதிற்கு மிகவும் மனம் வருந்துகின்றேன் . உங்கள் ஆக்கத்தில் எனக்கு ஏற்பட்ட அடங்கா ஆவலும் , இதை உலகெங்கிலும் அறியத் தரவேண்டும் என்ற ஆர்வக் கோளாறினால் தான் நான் யாழ் இணயத்தில் உங்கள் வலைப் பதிவின் மூல இணைப்பைக் கொடுத்துப் பதிந்தேன் . தயவு செய்து நான் உங்களை அவமானப் படுத்தியதாக எண்ணாதீர்கள் . எது எப்படியானாலும் நான் உங்கள் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் , அதுதான் அறமும் கூட . எனது தவறுக்கு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன் . இந்தப் பதிவு சம்பந்தமாக வேண்டிய திருத்தங்களை 3 தொடரிலும் செய்து விட்டுள்ளேன் . நீங்கள் விரும்பினால் மேலும் இந்தத் தொடரை யாழ் இணையத்தில் தொடர உங்கள் முன் அனுமதி கோருகின்றேன் . அதே வேளையில் யாழ் இணையத்தில் நீங்கள் கருத்துக் கள உறவாகச் சேர்ந்து உங்கள் படைப்புகளைக் கொண்டுவரவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் . நாம் இருவரும் நாட்டால் வேறுபட்டாலும் , இனத்தாலும் மொழியாலும் இரண்டறக் கலந்தவர்கள் . உங்கள் போன்றோரது ஆரோக்கியமான விமர்சனங்களே என்னை மேலும் வழி நடத்தும் .

   நேசமுடன் கோமகன்


   Delete

Post a Comment