பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்
வரைந்து முடிந்ததும்
அது பறந்து விட்டது
மீண்டும் ஒரு பறவையை
வரைந்தேன்
அதுவும் பறந்து விட்டது
நான் வரைந்துகொண்டே இருந்தேன்
அவைகள் பறந்து கொண்டே இருந்தன
இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைகளும் வந்து
அமர்ந்து கொண்டன...........
நன்றி:
தென் பாண்டியன் கவிதை ஒன்று இந்த டிசெம்பர் மாத 'உயிரெழுத்து' பத்திரிகையில். http://rprajanayahem...og-post_29.html
Comments
Post a Comment