இந்து மதம் எங்கே போகிறது? - மெய்யியல் - பாகம் - 62 - 70.


பாகம் 62 பிராமணர்கள் அனுபவித்த‌ ராஜபெண்கள். யாகங்கள் ஏன்? கூலி எவ்வளவு?

மன்னர்களுக்காக யாகம் நடத்திவிட்டு சம்பளமாக‌ ராணிகளையும் ராஜகுமாரிகளையும் அழைத்துச் சென்று ராஜசுகம் அனுபவித்து விட்டு திரும்ப அரண்மனைக்கு அனுப்பிய‌ பிராமணர்கள். 

யாகங்களின் பட்டியல். பிராமணர்களுக்கு யாகங்களுக்கான‌ சம்பளம் என்னென்ன?

பாவம் என்றால் என்ன? நாம் ஒரு பதார்த்ததை வாங்கி சாப்பிடுகிறோம் என்றால்... அந்த பதார்த்தம் வேறு எவனோ வாங்கி சாப்பிட வேண்டியது. அதை அவனுக்கு கிடைக்காமல் நாம் சாப்பிட்டு விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.

நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்று... வேறு யாருக்கோ கிடைக்க வேண்டியது. அதை நாம் சுவாசித்து விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.

இந்த லோகத்தில்.. நீங்கள் பஸ் பிரயாணம் மேற்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்து பயணம் செய்கிறீர்கள். இது ஒருவகை பாவம்தான்.பக்கத்தில் பலபேர் நின்று கொண்டிருக்கும்போது நீங்கள் உட்கார்ந்திருப்பது பாவம்தானே. நின்று கொண்டே வந்தாலும் அதுவும் பாவம்தான். ஏனென்றால் நீங்கள் இன்னொருவர் நிற்க இருந்த இடத்தில்தானே நிற்கிறீர்கள்?

பாவத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், பிராமணன் இடத்தில் போய் யாகம் செய் என்கிறது வேதம் .

தினாறும் (ஆயுதங்களும்) பெற்று பெருவாழ்வு வாழ்ந்து வரும் பகவானின்... ஆயுதப்பட்டியலை தரிசித்தோம்.

எல்லாம் வல்லவனான அன்பால் ஆகப்பெற்ற... வேதத்திலேயே சாந்தவடிவம் கொண்டவன் என சொல்லப்பட்ட விஷ்ணுவுக்கு ஏன் இத்தனை ஆயுதங்கள்?

விஷ்ணுவை விடுங்கள்... மற்ற எல்லா தெய்வங்களும் அன்பை போதிக்கின்றன என்றால் ஏன் ஆயுதங்களுடன் சேவை சாதிக்கின்றன.

இங்கேயும் Humanistic Worship தான் காரணமாகிறது. அதாவது... முதன் முதலில் பயம் வந்த பிறகுதான் மனிதன் கடவுளை நம்பினான். நம்மை யாராவது அழித்து விடுவார்களோ என இருதயத்துக்குள் துடித்த அந்த முதல் படபடப்புதான் கடவுளைப் படைத்தது. ஏனென்றால் Primitive Culture அதாவது காட்டுமிராண்டி காலத்துக்கு, நாகரிகத்துக்கு முந்தைய மனிதர்கள் idol worship உருவ வழிபாடு செய்யும் போது வெறும் உருவத்தோடு கடவுளை விட்டுவிடவில்லை.

நம்மை பாதுகாக்க வேண்டும் என்றால்... இவர் வெறும் கையோடு இருந்து என்ன பயன்? அதனால் அவர் கையில் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களைக் கொடுப்போம். அதை அவர் வைத்திருந்தால் நம்மை பாதுகாப்பார் என்று நினைத்தார்கள்.

சக்கராயுதம் வேதத்தில் அக்னியாக சொல்லப்பட்டிருக்கிறது. சங்கு முதலான மற்ற எல்லா ஆயுதங்களுமே மக்கள் பயன் படுத்தியவைதான். கடவுளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தவர்கள் நாகரிகமடையாத Primitive காலத்து மனிதர்களே.

புராணங்களில் இந்த ஆயுதங்கள் அதிக அந்தஸ்து பெற்றன. தீயவர்களை அழிப்பதற்காக பகவான் பற்பல ஆயுதங்களைப் பயன்படுத்துவார். இந்த இடத்தில் இன்னொரு முக்கிய விஷயத்தை உங்களுக்குச் சொல்லவேண்டும்.ஆரம்பகால ஆயுதங்கள் எல்லாமே தங்கத்தினால் செய்யப்பட்டவை. தங்கம் அன்று தங்கு தடையின்றி கிடைத்ததாம்.

வேதத்திலேயே தங்கத்தின் முக்கியத்துவம் நிறைய சொல்லப் பட்டிருக்கிறது. `வேதத்தில் பெண்கள்’ பகுதியிலேயே... பெண்கள் உடல் முழுவதும் தங்க நகைகள் தகதகக்க வந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

அதேபோல... வேதத்தில் தங்கம் இன்னொரு பெரிய விஷயத்துக்கும் பயன்படுத்தப்பட்டது.என்ன விஷயம்? அதற்கு முன்...

வேதத்தில் யாகங்கள் முக்கியமானவை. இந்த யாகங்களை பிராமணர்கள் பண்ணி வைக்கவேண்டும். பிராமணர்கள் Manthra labours. அதாவது மந்திரத் தொழிலாளர்கள்.

வேதத்தில் 6 அங்கங்கள் இருக்கின்றன.

வேத சொற்களின் உச்சரிப்பைப்பற்றி சொல்லும் சிக்ஷா என்பது முதல் அங்கம். மொழியியலைப் பற்றி சொல்வது வ்யாகரண அங்கம். யாப்பு இலக்கணம்பற்றி கூறுகிறது சந்தஸு அங்கம். சொற்பிறப்பு பற்றி சொல்வது நிருப்தம். ஜோதிஷம் பற்றி சொல்லாது ஜோதிஷ அங்கம். வேதத்தில் கூறப்பட்ட யாகங்களை எப்படி எப்படி செய்யவேண்டும் என்று சொல்வது கல்பம் என்னும் அங்கம்.

இப்படியாக யாகங்களை அனல் முன் நின்று மந்த்ரங்களை ஓதி சும்மாவா சொல்லிக் கொடுப்பார்கள். அதற்கு Charge வேண்டாமா? Fees வேண்டாமா? சம்பளம் கொடுக்கவேண்டும் அல்லவா? இதற்குப் பெயர்தான் தட்சணை. அதாவது யாகங்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம்தான் தட்சணை!

அசுவமேத யாகம் பற்றி இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியில் நான் சொல்லியிருந்தேன். அதில் மன்னர்களுக்காக அஸ்வமேத யாகம் நடத்திவிட்டு... அதன் பின்னர் மன்னர் வீட்டுப் பெண்களான ராணிகளையும், ராஜகுமாரிகளையும் தங்களோடு அழைத்துச் சென்று விடுவார்கள். ராஜ பெண்களோடு ராஜ சுகம் அனுபவித்து விட்டு திரும்ப அரண்மனைக்கு அனுப்புவார்கள் யாகம் நடத்துபவர்கள். 

இப்படியாக...ஒவ்வொரு யாகத்துக்கும் தட்சணை இன்னது என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்... வித்தியாசமான யாகம் சத்திரயாகம்.அதென்ன சத்திரயாகம்?

பலர் கூடிப் பல நாள்கள், பல வருடங்கள் லோக சேமத்துக்காக செய்யப்படுகிற வேள்வி. ஒவ்வொரு யாகத்துக்கும் அக்னி குண்டம் வளர்த்து அதில் பல பொருள்களை ஆகுதி செய்வார்கள். அதுபோல... இந்த யாகம் பண்ணும் எஜமானர்கள் என்னென்ன பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும்?

வீடு, ஆஸ்ரமம், இருப்பிடம் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும். யாகம் பண்ணுபவருக்கு கொடுக்கும் தட்சணையையும், நன்கொடையையும் யாகத்துக்கே அர்ப்பணிக்கவேண்டும்.

இந்த யாகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட வீடுகள், ஆஸ்ரமங்கள், மாளிகைகள்தான் எல்லோராலும் உபயோகப்படுத்தப்படும். யார் வேண்டுமானாலும் அங்கு வசிக்கலாம். சத்திர யாகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட வீடுகள், இருப்பிடங்கள், ஆஸ்ரமங்கள்தான் சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த சத்திர யாகத்துக்கு மட்டும்தான் தட்சணை கிடையாது.

சரி... தங்கம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்... எதற்கு திடீரென்று தட்சணைபற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என நீங்கள் நினைக்கலாம்.சம்பந்தம் இருக்கிறது. வேதத்தில் தங்கத்தின் முக்கியத்துவம்பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா?

யாகங்களுக்கும் அந்த முக்கியத்துவம் உண்டு. யாகம் செய்பவர்களுக்குத் தட்சணையாக தங்கம் மட்டும்தான் கொடுக்கவேண்டும். மற்ற உலோகங்களை கொடுக்கக் கூடாது.

விலை மதிப்பற்ற... தங்கம்தான் தட்சணைக்கு தகுந்தது என `சொர்ண’த்தை மட்டுமே தட்சணையாக வரையறுத்திருக்கிறது வேதம்.அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பிரம்மா ருத்ரனை படைத்தபோது....

முதன் முதலில் உலகத்துக்குப் பிரவேசித்த அந்தக் குழந்தை `ங்ஙே...’ என அழுததாம். சாதாரண அழுகையல்ல. பயங்கரமான அழுகை. ரோதனம் என்றால் அழுவது. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் அவனுக்கு ருத்ரன் என பெயர்.

அந்த ருத்ரனின் கண்ணீர் இருக்கிறதே...

00000000000000000000000000000

பகுதி – 63.

ருத்ரன் பிறந்ததிலிருந்தே அழுது கொண்டிருப்பதை பற்றி சொன்னேன். யஜூர் வேதத்தின் முதல் காண்டத்தின் 5-ஆம் பட்சத்தில்தான் ருத்ரனின் கண்ணீர்த் துளிகள் காட்டப்பட்டிருக்கின்றன.

ருத்ரன் அழுதால் என்ன சிரித்தால் என்ன என சும்மா விட்டுவிட்டு போய்விட முடியாது. தட்சணையைப்பற்றி சொன்னீர்கள். பிறகு தங்கத்தைப்பற்றி சொன்னீர்கள்? இப்போது திடீரென ருத்ரனின் கண்ணீர் எதற்கு...? என்று நீங்கள் கேட்கலாம். ருத்ரன் அழுதது ஒரு வகையில் பிராமணர்கள் சிரிக்கத்தான்.

ஏன்...? எப்படி...? ருத்ரன் அழுது அந்த கண்ணீர் வருகிறது இல்லையா...? அது அப்படியே உறைந்து உலோகமாக மாறிவிட்டது. என்ன உலோகம்...? வெள்ளியாக மாறிவிட்டது. அதாவது ருத்ரனின் கண்ணீர் தான் வெள்ளி.

ருத்ரன் எப்படிப்பட்டவன் என்பதை நாம் முதலிலேயே பார்த்தோம். `கொடூரமானவன், வம்புகள் செய்பவன், வதம் பண்ணுபவன், ஆக அவன் அயோக்கியன்’ என்று சொன்ன வேதம்.

ருத்ரனின் கண்ணீர்தான் வெள்ளி. அதனால் அந்த வெள்ளியை யாகம் செய்து வைக்கும் பிராமணர்களுக்கு தட்சணையாக கொடுக்கக் கூடாது. வெள்ளியை தட்சணையாக வாங்கவும் கூடாது. அதனால் தங்கத்தை மட்டுமே தட்சணையாக வாங்குவது என்றது வேதம்.

இன்றும் யாக, ஹோமங்களுக்கு வெள்ளிப் பொருள்களை பிராமணர்கள் தட்சணையாக வாங்குவதில்லை. பணம் அல்லது தங்கம். இப்போது புரிகிறதா... ருத்ரனின் அழுகை யாகம் செய்யும் பிராமணர்களை சிரிக்க வைத்தது எப்படி என்று.

வெள்ளியை விட தங்கத்தின் மதிப்பு அதிகம் என்று அறிந்தே வேதக்காரர்கள் தங்கத்தை தாங்கிப் பிடித்து வெள்ளியை ஓரங்கட்டினார்கள். வெள்ளி கொடுக்காதே, தங்கம் மட்டுமே கொடு என சும்மா சொன்னால் கேட்பார்களா? அதனால்தான் ருத்ரனை அழ வைத்தார்கள். அப்போது விழிகளில் இருந்து கண்ணீரை வெள்ளியாக விழ வைத்தார்கள்.

தட்சணைக்கு இன்னும் ஒரு அந்தஸ்து உண்டு... பாகவதத்தில் ஒரு மேற்கோள் சொல்லப்படுகிறது.

அதாவது பகவான் யக்ஞயம் என்றால் தட்சணை என்பது பகவானின் பத்தினி போன்றது. இன்னும் சொல்லப் போனால்... யாகம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த யாகம் தான் பகவான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால் பகவானின் பத்தினி இருக்கிறாளே அவள்தான் தட்சணை.

இன்னும் விஸ்தாரமாக சொல்லப்போனால்... பத்தினியின்றி பகவான் எப்படியோ, அதுபோல்தான் தட்சணை இல்லாத யாகம். தட்சணையை எப்படியாவது வாங்கியே தீரவேண்டும் என்பதால்... `பகவானின் பத்தினி’ என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.

இதைத்தான் ப்ரம்ம சூத்திரக்காரர்.... யாகத்தின் சம்பளம் என்று குறிப்பிட்டார். யாகம் முடிந்துதான் தட்சணை கொடுக்கவேண்டும். ஆனால், நான் தட்சணை பற்றிய தகவல்களை முன்கூட்டியே கொடுத்துவிட்டேன்.

யாகங்களின் முக்கியத்துவம் என்ன? பிராமணர்கள் ஆயுள் முழுதும் செய்து கொண்டே இருக்கவேண்டிய தொழில்தான் யாகம். யாக சாலையில்தான் பிராமணர்கள் நடந்து செல்லவேண்டும்.

நாட்டின் ராஜாவிலிருந்து... அன்று கடையனாக மதிக்கப்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் வரை அனைவருக்காகவும் பிராமணன் தட்சணை வாங்கிக் கொண்டு யாகம் செய்வான்.

யாகத்தின்போது ராஜாவே, ப்ராம்மணனைப் பார்த்து பணிந்து அமர்ந்திருப்பான். ஏன் என்றால்...

``தஸ்மாது சோமராஜா னாஹா
ப்ராம்மணாஹா...’’ இப்படியென்றால் என்ன?

``உங்களுக்கெல்லாம் என்று ஒரு ராஜா இருப்பான். அவன் உங்களை கட்டியாண்டு வருவான். ஆனால்... எங்களுக்கு ராஜா இவன் அல்ல. இந்த க்ஷத்ரிய ராஜாவுக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் ப்ராமணர்கள். இந்த ராஜாவை விட மேலானவர்கள்.

அதனால் உங்கள் ராஜா எங்களுக்கு கீழே தான். எங்கள் ராஜா, சோமராஜா தான்’’ என்றுதான் அந்த சின்ன மந்த்ர வாக்கியத்துக்கு அர்த்தம்.

இப்படியாக ராஜாவே கீழ்ப்படிந்தவன் என்றால்... மற்றவர்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள்.

யாகம் நடத்தும்போது என்ன எதிர்பார்க்கிறார்கள்? உலக நன்மைக்காக நடத்துவார்கள். புத்ர பாக்யம் வேண்டுமென்று சில யாகங்கள் உண்டு.

யாகங்களின் பெரும்பாலான முக்கியத்துவம்... நமது பாவங்களை தொலைக்கத்தான். (பாவங்களை பற்றி உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டியுள்ளது. அடுத்து சொல்கிறேன்).

அக்னி ஹோத்ரம் என்னும் யாகம் தனக்காக பண்ணிக் கொள்வது. இதற்கு தட்சணை தனக்குத்தானே கொடுத்துக் கொள்வதுதான்.

தர்ஷம்பூர்ணமாசம் எனப்படும் ஒரு யாகம் அமாவாசை, பவுர்ணமியை அடிப்படையாக வைத்து செய்யவேண்டிய ஒரு யாகம்.

தர்ஷம் என்பது அமாவாசை. பூர்ணம் என்றால் பவுர்ணமி. இந்த யாகத்து தட்சணை என்ன தெரியுமா?

அன்வாஹார்யம். அதாவது சாப்பாடு தான் தட்சணை.
இதுபோல் இன்னும் பல யாகங்கள். இன்னும் பல தட்சணைகள்.

யாகங்களை ஒரே ஒரு ஆள் மட்டும் நடத்த முடியாது. குழுக்குழுவாய் தான் நடத்துவார்கள். அதனால் தட்சணையும் ‘க்ஷரடம’ ஆகத்தான் இருக்கும்.

100 பசுக்கள், 1000 பசுக்கள், 100 கன்றுக்குட்டிகள், 1000 கன்றுக்குட்டிகள் என தட்சணைகள் தங்கத்தைத் தவிரவும் நிறைய உண்டு.யாகம் முடிந்ததா...? அவருக்கு 1000 நிஷ்கத்தை கொடப்பா. நிஷ்கம் என்றால்...

000000000000000000000000

பகுதி – 64. நிஷ்கம் என்றால்?

நாணயம் தங்க நாணயம் Vedic மற்றும் Post Vedic கால கட்டங்களில் புழக்கத்திலிருந்த தங்க நாணயத்துக்கு பெயர் தான் நிஷ்கம்

யாகம் முடிந்த உடன் தங்கத்தாலான பொருள்களை மட்டுமல்ல.. இதேபோன்ற நிஷ்கங்களையும் வாங்குவார்கள்.

ஸ்வாமிக்கு 1000 நிஷ்கம் கொடுங்கோ என குரல் வரும் அரசர்கள் நடத்தும் யாகம் என்றால் நிறைய நிஷ்கம்கள் கிடைக்கும். மற்றவர்களின் யாகம் என்றால்... நிஷ்கத்தை கூட்டிக் குறைத்துக் கொள்வார்கள்.

சரி... யாகங்கள் பாவத்தை தொலைக்க நடைபெறுகின்றன என்று சொல்லி இதைப்பற்றி விரிவாகவே பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன்.

பாவம் என்றால் என்ன? பகவானை போல இதுவும் நம்மை சூழ்ந்திருக்கிறது. அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே பாவம்தான்.

நாம் ஒரு பதார்த்ததை வாங்கி சாப்பிடுகிறோம் என்றால்... அந்த பதார்த்தம் வேறு எவனோ வாங்கி சாப்பிட வேண்டியது. அதை அவனுக்கு கிடைக்காமல் நாம் சாப்பிட்டு விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.

நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்று... வேறு யாருக்கோ கிடைக்க வேண்டியது. அதை நாம் சுவாசித்து விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.

இந்த லோகத்தில்.. நீங்கள் பஸ் பிரயாணம் மேற்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்து பயணம் செய்கிறீர்கள்.

இது ஒருவகை பாவம்தான். பக்கத்தில் பலபேர் நின்று கொண்டிருக்கும்போது நீங்கள் உட்கார்ந்திருப்பது பாவம்தானே. நின்று கொண்டே வந்தாலும் அதுவும் பாவம்தான். ஏனென்றால் நீங்கள் இன்னொருவர் நிற்க இருந்த இடத்தில்தானே நிற்கிறீர்கள்?

இப்படி பாவம் பலவகைப்படும். நம்மை சுற்றி பாவசக்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த பாவத்தை போக்க நாம் யாகம் செய்யவேண்டும்.

யாகத்தை பிராமணர்கள் செய்யும்போது பாவம் அக்னியாகும் . அதில் யாகம் செய்கையில் பாவங்கள் எல்லாம் யாகம் செய்கின்ற பிராமணன் இடத்திலே வரும். கூடவே தட்சணை வாங்குகிறார்களல்லவா, அதுவும் பாவம்தான். இப்படிப்பட்ட பாவங்கள் எல்லாம் வேத மந்தரங்களை உச்சரிக்கும்போது அழிந்துவிடும்.

அதனால்தான்... பாவத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், பிராமணன் இடத்தில் போய் யாகம் செய் என்கிறது வேதம்.

கிறிஸ்தவமும் கிட்டத்தட்ட இப்படித்தான். கிறிஸ்தவத்துக்கு பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே வேதம் பாவ மன்னிப்பை பாவ நிவர்த்தியை வழங்கியிருக்கிறது. இந்த விஷயம் தெரியாமல் இப்போதைய பெரியவர் ஜெயேந்திரர்....

கிறிஸ்தவம் என்ன கிறிஸ்தவம்?... பாவத்தை செய்துவிட்டு என்ன பாவத்தை வேண்டுமானாலும் செய்துவிட்டு, அதை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொல்கிறது. அப்படியென்றால் பாவம் செய்யலாம் என சொல்கிறதா? என்று கேள்வி கேட்டவர்.

பிராமணர்கள் சந்தியா வந்தனம் என்று ஒரு சடங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று முன்பு பிராமணர்களின் தொழில்பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். ஞாபகம் இருக்கிறதா? அதற்கு யாகங்களுக்கும் பெரிய தொடர்பு உண்டு. சந்தியா வந்தனம் காலை மதியம் மாலை 3 வேளையும் செய்யவேண்டும் என்பது பிராமணர்களின் அனுஷ்டானம்.

காலையில் செய்கிறார்கள். பிறகு மாலையில் தான் செய்கிறார்கள். அப்போது மதியம்? அதை காலையிலேயே சேர்த்துச் செய்துவிடுகிறார்கள். ஏனென்றால் மதியம் அவர்கள் ஆபிஸ் போய்விடுகிறார்கள். அல்லது வேலை நிமித்தம் இருந்து விடுகிறார்கள். இதில் காலையில் `அஸ்னம்’ எனப்படும் மந்த்ரத்தை கவனியுங்கள்.

`ஸுர்யச்ச மாமன்யுச்ச மன்யு
பதயச்ச மன்யுக்ரு தேப்ய:
பாபேப்யோ ரக்ஷந்தாம்
யத்ராத்ரியா பாபம் அகார்ஷம்
மனஸா வாசா
ஹஸ்தாப்யாம் பதப்யாம்
உதரேண சிச்ஞாராத்திரி
ஸ்த தவலும்பது யத்கிஞ்ச துரிதம்மயி
இதமஹம் மாம் அம்ருதயோனௌ
ஸுர்யே ஜ்யோதிஷி ஜுஹோபி ஸ்வாஹா...’’

இதிலே காலையிலே விரைவில் எழுந்து சூரிய உதயத்துக்கு முன் சூரியனை வேண்டும் காட்சி.

அப்படி என்ன வேண்டுகிறார்கள்...
சூர்ய தேவனே நான் உலகத்தின் சட்டதிட்ட சம்ப்ரதாயங்களை மீறி செய்த பாவங்களை நீதான் ரட்சிக்க வேண்டும்.

ராத்திரி பொழுது போயிற்று. அந்த போதிலே நான் நிறைய பாவங்கள் செய்திருக்கலாம். மனஸா மனதால் பிறருக்கு தீங்கு நினைத்திருந்தால் அறுவும் பாவம். வாசா வாக்குகளால் பிறரை புண்படுத்தி பாவம் செய்திருக்கேன். ஹஸ்தாப்யாம் கைகளால் அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுத்து பாவம் செய்திருக்கலாம். பத்ப்யாம் கால்களால் உயிர்களை மிதித்து வயது முதிர்ந்தவர்களை தீண்டி பாவம் இழைத்திருக்கலாம்.

உதரேண ராத்திரி வேறு யாராவது சாப்பிட வேண்டிய சாப்பாட்டை நான் அபகரித்து வயிற்றால் பாவம் செய்திருக்கலாம்.

சிச்ஞா என்னுடைய ஆணுறுப்பால் ஸ்திரிகளுக்கு ஏதாவது இடைஞ்சல்கள் கொடுத்து, ஒழுக்கத்தை மீறி தேக ஸம்பந்தம் வைத்துக் கொண்டு அதனால் பாவம் செய்திருக்கலாம். கடந்துபோன ராத்திரியில் நான் இத்தனை பாவங்களை செய்திருக்கலாம். அப்படி செய்த பாவங்களை நீ ரட்சித்து எனக்கு பாவ நிவர்த்தியை தரவேண்டும்.

இதுதான்... காலையில் எழுந்ததும் சூர்ய தேவனிடத்தில் பிராமணன் வைக்கும் முதல் விண்ணப்பம். அடுத்து...

00000000000000000000000000

பாகம் 65 : பிராம‌ணர்களின் பாவமன்னிப்பு வேண்டுதல். தெரியுமா?

என் ஆண் உறுப்பு, கை, கால், வாய், மனசு... வரை ராத்திரி செய்த பாவங்களையெல்லாம் பனித்துளியை எப்படி போக்குவாயோ அதேபோல போக்கிவிடு...’ என்று வேண்டினான்.

புத்தி கெட்டு நான் பாவம் பண்ணி விட்டேன். சூதாட்டம் போன்ற பாவங்களைக் கூட பண்ணிவிட்டேன். என் பாவங்களையெல்லாம் நிவர்த்தித்து என்னை ரட்சிப்பாய் வர்ணா...”

எச்சில் பொருள்கள், புனிதம் கெட்டவர்களிடமிருந்து வாங்கி வந்த தானங்கள் ஆகியவற்றால் எனக்கு வரும் பாவங்களை நிவர்த்தி செய்யவேண்டும்...” என வேண்டுகிறான் பிராமணன்.

என் ஆண் உறுப்பு, கை, கால், வாய், மனசு... வரை ராத்திரி செய்த பாவங்களையெல்லாம் பனித்துளியை எப்படி போக்குவாயோ அதேபோல போக்கிவிடு...’ என்று வேண்டினான்.

புத்தி கெட்டு நான் பாவம் பண்ணி விட்டேன். சூதாட்டம் போன்ற பாவங்களைக் கூட பண்ணிவிட்டேன். என் பாவங்களையெல்லாம் நிவர்த்தித்து என்னை ரட்சிப்பாய் வர்ணா...”

எச்சில் பொருள்கள், புனிதம் கெட்டவர்களிடமிருந்து வாங்கி வந்த தானங்கள் ஆகியவற்றால் எனக்கு வரும் பாவங்களை நிவர்த்தி செய்யவேண்டும்...” என வேண்டுகிறான் பிராமணன்.

00000000000000000000000000

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 65.

பாவ மன்னிப்பு பற்றி பார்த்து வருகிறோம்.


சந்தியா வந்தனத்தில் காலையில் எழுந்திருந்து சூரியதேவனிடம் என்ன வேண்டினான்...?

‘கை, கால், வாய், மனசு... ஆண் உறுப்பு வரை ராத்திரி செய்த பாவங்களையெல்லாம் பனித்துளியை எப்படி போக்குவாயோ அதேபோல போக்கிவிடு...’ என்று வேண்டினான். இது காலை நேரத்து வழக்கம். சரி... ராத்திரி செய்த பாவங்களை காலையில் போக்கிக் கொள்ள இந்த மந்த்ரம். சந்தியா வந்தனத்தில் அடுத்து மதியானம் ஒரு ‘அஸனம்’ பண்ண வேண்டும்.

இதை இப்போது தீவிர வைதீகத்தில் இருக்கும் ஒரு சிலர்தான் உச்சி வேளையிலேயே பண்ணுகிறார்கள். மற்ற பெரும்பாலான பிராமணர்கள், இதை காலையிலேயே சேர்த்து ‘two in one’ பாணியில் பண்ணிவிட்டுப் போய்விடுகிறார்கள். சரி... மதிய மந்த்ரம் என்ன சொல்கிறது...

“ஆப புநந்து ப்ருதிவீம் ப்ருத்வீ
பூதா புநாதுமாம் புநந்து ப்ரஹ்மணஸ்
பதி ப்ரஹ்மபூதா புநாது மாம்
யதீச்சிஷ்டம் அபோஜ்யம் யத்வா
துஸ்சரிதம் மம ஸர்வம் புனந்துமாம்
ஆப அஸதாம்ச ப்ரதிக்ரஹம் ஸ்வாஹா”

இதற்கென்ன அர்த்தம்...?
“அய்யா தேவதைகளே... நான் (பிராமணன்) காலை கிளம்பி பல இடங்களுக்கும், கிரகங்களுக்கும் (வீடு) ஹோமம் பண்ணி வைக்கப் போகிறேன். யாகம் பண்ணி வைக்கப் போய் வருகிறேன்.

அப்போது... எனக்கு முன்பின் தெரியாதவர்கள் கொடுக்கிற சாமான்களையெல்லாம் தானமாக வாங்கிக் கொள்கிறேன். அவர்களில் சிலர் எனக்குக் கொடுத்த தானங்கள் எச்சில் படுத்தப்பட்டதாக இருக்கலாம்.

ஒருவேளை அவர்கள் புனிதம் கெட்ட கீழ் வர்ணத்தவர்களாக இருக்கலாம். அவர்களிடமிருந்து தானம் வாங்கினால் எனக்கு பாவம் ஆயிற்றே... நானும் தெரியாமல் வாங்கி வந்து வீட்டில் போட்டிருப்பேன். அதனால்... அந்த எச்சில் பொருள்கள், புனிதம் கெட்டவர்களிடமிருந்து வாங்கி வந்த தானங்கள் ஆகியவற்றால் எனக்கு வரும் பாவங்களை நிவர்த்தி செய்யவேண்டும்...” என வேண்டுகிறான் பிராமணன்.

அதாவது ஒரே நாளில் இரண்டாவது முறையாக பாவ மன்னிப்பு கோருகிறான். அடுத்து... மாலை....

மறுபடியும் காலையில் சொன்ன பாவ மன்னிப்பு மந்த்ரத்தையே.... கொஞ்சம் மாற்றி திரும்பச் சொல்கிறான்.

அதாவது....‘அக்னி தேவா... காலையில் கேட்டதைத்தான்’ இப்போதும் கேட்கிறோம். காலையிலிருந்து மாலைவரை நான் கையால், காலால், வயிறால், வாக்கால், என் ஆணுறுப்பால் ஏதேனும் அறிந்தும், அறியாமலும் பாவம் செய்திருந்தால் என்னை அப்பாவங்களில் இருந்து நிவர்த்தி செய்வாயாக...’ என்கிறான்.

இப்படியாக ஒரு நாளைக்கு மூன்று முறை அஸனம் செய்து மன்னிப்பு கேட்கிறான். அதாவது... அஸனம் என்றால் நீரை சிறிது சிறிதாக எடுத்துக்கொண்டு... அதில் வேத மந்த்ரங்களை சொல்லி புனிதப்படுத்தி அந்தத் தண்ணீரை உட்கொண்டு வேண்டுவது.

இதுபோல காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் மன்னிப்பு கேட்பதோடு... உபஸ்தானம் என்ற வேண்டுதலும் உண்டு. சந்தியாவந்தனத்தில் வருண உபஸ்தானம் முக்கியமானது.

அதாவது... மழைக்கு பொறுப்பு வகிக்கும் தேவதையான வருணனிடம் வேண்டுவது. அதென்ன...?கொஞ்சம் பெரிய மந்த்ரம்

“இமம்மே வருண ச்ருதீஹவம்
அத்யாச ம்ருடய த்வாமவஸ்யு:
ஆசகே தத்வாயாமி
ப்ரஹ்மணா
வந்தமானது ததாசாஸ்தே
யஜமான ஹவிர்பி:
அஹேட
மான: வருணேஹபோதி
உருசம்ஸமான: ஆயு:
ப்ரமோஷீ:
யச்சித்திதே விசோயதா
ப்ரதேவ வருண
வ்ரதம் மினீமஸி
த்யவித்யவி யத்கிஞ்
சேதம் வருணதைவ்யே ஜனபித்ரோஹம்
மனுஷ்யா: சரமாஸி அசித்தீயத்வ
தர்மா யுயோபிம மானஸ்தஸ்மாத்
ஏனஸோ தேவரீரிஷ: கிதவாஸ:
யத்ரிரிபு நதீவி யத்வாஹா ஸத்யம்
உதயந் நவித்ம ஸர்வாதா விஷ்ய
சிதிரேவ தேவ அதாதேஸ் யாம
வருணப் ரியாஸ.”

ஹே... வர்ணா நான் ரொம்ப கஷ்டப்படறேன். like ordinary people I am also committed sins. சாதாரண மக்களைப் போல நானும் தவறு செய்துட்டேன். நீ லோக வாழ்க்கைக்குனு ஒரு கோட்பாடு வைத்திருக்கிறாய். நான் அதை மீறிவிட்டேன். புத்தி கெட்டு நான் பாவம் பண்ணி விட்டேன்.

சூதாட்டம் போன்ற பாவங்களைக் கூட பண்ணிவிட்டேன். என் பாவங்களையெல்லாம் நிவர்த்தித்து என்னை ரட்சிப்பாய் வர்ணா...”

இந்த சந்தியா வந்தன மந்த்ரங்கள் எல்லாம் வேத மந்த்ரங்கள். வேதங்களில் யாகத்தின் போது சொல்லப்படும் மந்த்ரங்கள். பிராமணர்கள் வேத கர்மாக்களை பெருமளவு குறைத்துக் கொண்டு விட்டதால் தான், அந்த மந்த்ரங்களை சந்தியா வந்தனத்தில் வைத்தார்கள். அதனால் இவ்வேத மந்த்ரங்களை சொல்லும்போது பாவங்கள் அகலும் என்பது நம்பிக்கை. இது வேதம் சொன்னது.

பாவ மன்னிப்பு நமது வேதத்திலேயே பல்லாயிரம் வருஷங்கள் முன்பு சொல்லப்பட்டிருக்கும் போது... கிறிஸ்தவர்களின் பாவ மன்னிப்பு பழக்கத்தை ஜெயேந்ததிரர் போன்றவர்கள் தூற்றுகிறார்கள் என்றால்... அவர்கள் வேதம் தெரியாதவர்கள்.

000000000000000000000000000000000

பாகம் 66 ஏன்சாமி! வீட்லபேசற தமிழ்லயே பகவான்ட்டயும் பேசுங்களேன்

“ஏங்காணும்... இப்படி திடீர்னு தமிழ்ல அர்ச்சனை பண்ணுன்னா எப்படி? எங்களுக்குனு சம்ப்ரதாயங்கள் இருக்கு. அனுஷ்டானங்கள் இருக்கு. அது எல்லாத்தையும் தமிழ்ல பண்ண முடியாதே...” என குரல் கொடுத்தனர்.

“ஏன் சாமி... வீட்ல பேசும்போது உங்க மனைவிகிட்ட மகள்கிட்டயெல்லாம் சமஸ்கிருதத்துலயா பேசறீங்க. அதுபோல... பகவான்ட்டயும் தமிழ்லயே பேசுங்களேன்...”

அவனை வழிபடும் முறைகள் பலவிதம் என்றாலும் எல்லாம் சரியே.... அதனால் அவன் பெயரால் யாரும் யாரையும் தூஷிப்பதோ, நிந்திப்பதோ கூடாது...”

வேதம் அறியாதவர்கள் மற்ற மதத்தை துவேஷிப்பார்கள் என்பதை பாவ மன்னிப்பு மந்த்ரங்கள்மூலம் பார்த்தோம். இதை நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது தமிழ் பேப்பர்களையும், இங்கிலீஷ் பேப்பர்களையும் உற்றுப் பார்த்தேன். பெரிய பெரிய எழுத்துகளில் ஒரு செய்தியை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் பண்ணியிருந்தார்கள்.

அது என்னவென்றால், சிறீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாவத்தைப் போக்க ராமேஸ்வரத்துக்குப் போய் வந்தார் என்று ஒரு செய்தியைப் படித்தேன்.

ஒன்று பாவ மன்னிப்பையே துவேஷித்த ஸ்வாமிகள் இன்று தனக்காகவே பாவ நிவர்த்தி செய்யப் போகிறார் என்றால் அதை என்னவென்று சொல்வது.

இன்னொன்று... இந்த நேரத்தில் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது ப்ரம்மசூத்திரக்காரர் படைத்த ப்ரம்ம சூத்திரத்தில் முக்கியமான வரி வருகிறது.

“பஹிஸ்து உபயதாபி ஸ்பிரு தேஹே ஆசாரஸ...” 

என்று போகும் இந்த சூத்திரம் சொல்வது என்ன?

ரிஷிகள், சந்நியாசிகள், யதிகள், ஞானிகள் பாவம் பண்ணினால் அவர்களுக்கு அந்தப் பாவத்திலிருந்து விமோசனம் கிடையாது. ப்ராயசித்தம் கிடையாது. அவர்கள் செய்த பாவம் பாவம்தான். அது தீராது, போகாது என்கிறார் ப்ரம்ம சூத்ரக்காரர்.

மூத்தோர் சொல் அமிர்தங்கள் இப்படியிருக்க பாவ மன்னிப்பை அடிப்படையாக வைத்து மற்ற மதங்களை தூஷிப்பது வேதத்துக்கே அடுக்கவில்லை அதர்வண வேதம் சொல்கிறது பாருங்கள்:

“சமேத விஷ்வா வசஸா
பதிந்திவிபு யயேஹ
விபுஹீ யயேஹ
விபுஹீ அதிதிஹி தனனாம்
சபூர்யஹா நூதனம் ஆளவாசதீ
திம்வர்த்தனிஹி அனுவாவ்ருத்தே
ஏகையித் பூரி...” 

மக்களே ஒன்று கூடுங்கள். கடவுள் ஒருவன்தான். அவனை யார் கூப்பிடுகிறார்களோ... அவர்களின் வீட்டுக்கு போவான். அவன் பழைமைக்கும், பழைமையானவன். புதுமைக்கும் புதுமையானவன். கடவுள் ஒருவன் என்றாலும், அவனை வழிபடும் வழிகள் லோகத்தில் பல்வேறு பட்டதாக இருக்கின்றன.

அவனை வழிபடும் முறைகள் பலவிதம் என்றாலும் எல்லாம் சரியே.... அதனால் அவன் பெயரால் யாரும் யாரையும் தூஷிப்பதோ, நிந்திப்பதோ கூடாது...”

இது அதர்வண வேதம் சொல்லும் அறிவுரை.
இந்த வேத மந்த்ரம் அறியாதவர்கள்தான் அல்லது அறிந்தும் அறியாததுபோல இருப்பவர்கள்தான் பிற மதங்களை தூஷிப்பார்கள். பாவத்தை சம்பாதிப்பார்கள்.

பாவம் பற்றி விஸ்தாரமாகவே பார்த்தாயிற்று. அடுத்து உங்களுக்கு ஒரு சம்பவத்தை சொல்கிறேன். அதிலிருந்து நாம் அடுத்துப் பார்க்கப் போகும் தலைப்பு என்னவென்று உங்களுக்கும் புரிந்துவிடும்.

சுமார் 30 - 40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்துக்கு பக்கத்திலேயே உள்ள நாச்சியார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திடீரென இந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை. அந்தக் காலத்தில் கோயில்களில் முழுக்க முழுக்க சமஸ்கிருத மந்த்ரங்களே அனுஷ்டானத்தில் இருந்து வந்ததால்... தமிழும் ஒலிக்க வேண்டும். வழிபாடுகள் தமிழிலும் நடைபெறவேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

அப்போது அறநிலையத்துறை ஆணையராக கே.எஸ். நரசிம்மன் இருந்தார் என்று ஞாபகம் (தொண்ணூறை கடந்துவிட்ட போதிலும் வேதத்தில் உள்ளவற்றையே ஞாபகப்படுத்தி விட முடிகிறது. ஆனால், மிகச் சமீபத்தில் நடந்தது சட்டென ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கிறது).

முக்கியமான அதிகாரிகள் நாச்சியார் கோயிலில் கூடியிருந்தனர்.கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலிலிருந்து சிறீ ராமதேசிகாச்சார் ஸ்வாமிகளும் மற்ற அர்ச்சகர்களும் வந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் அடியேனும் அமர்ந்திருந்தேன். துணை ஆணையர்தான் கூட்டம் கூட்டப்பட்ட காரணத்தை விளக்கினார்.

“தமிழ்லயும் அர்ச்சனை பண்ணணும்னு முடிவெடுத்திருக்கோம். அதனால தமிழ்ல எப்படி எப்படி அர்ச்சனைகள் செய்யலாம்னு எழுதிக் கொடுங்கோ” என கேட்கிறார்.

இதைக் கேட்ட உடனேயே... அர்ச்சகர்கள் தரப்பில்...
“ஏங்காணும்... இப்படி திடீர்னு தமிழ்ல அர்ச்சனை பண்ணுன்னா எப்படி? எங்களுக்குனு சம்ப்ரதாயங்கள் இருக்கு. அனுஷ்டானங்கள் இருக்கு. அது எல்லாத்தையும் தமிழ்ல பண்ண முடியாதே...” என குரல் கொடுத்தனர்.

அப்போது அதிகாரிகளில் ஒருத்தர்...
“ஏன் சாமி... வீட்ல பேசும்போது உங்க மனைவிகிட்ட மகள்கிட்டயெல்லாம் சமஸ்கிருதத்துலயா பேசறீங்க. அதுபோல... பகவான்ட்டயும் தமிழ்லயே பேசுங்களேன்...” என்று இடைச்செருகல் செய்தார்.

துணை ஆணையர் என்னிடம் கேட்டார். அப்போது நானும் தமிழ் அர்ச்சனைகளை ஆதரித்து... ஒரு பேப்பரை எடுத்து அவர்களிடம் கொடுத்தேன்.அவர்கள் படித்துப் பார்க்கத் தொடங்கினார்கள்.

0000000000000000000000000000000

பகுதி – 67.

`நாச்சியார்கோவிலில் நடந்து கொண்டிருக்கும் மீட்டிங்பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லையா?

சம்பவத்தைச் சொல்கிறேன். நீங்கள் அடுத்து பார்க்கப்போகும் `சப்ஜெட்டை முடிவு செய்துகொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தேன்.ஆம்... நாம் பார்க்கப்போவது வழிபாட்டில் தமிழ் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறது என்பதைத்தான்.

மறுபடியும், நாச்சியார் கோயில் மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம் வாருங்கள். துணை ஆணையர் `நாங்கள் கோயில்களில் தமிழில் அர்ச்சனை பண்ணுவதென்று முடிவெடுத்துள்ளோம். அதனால் நீங்கள் இனிமேல் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என கூற...எப்படி? எப்படி? தமிழில் அர்ச்சனை செய்வது எப்படி? என மொழிப் போர் நடத்த ஆரம்பித்தார்கள் சில பட்டாச்சார்யார்கள்.

ஆனால், அதிகாரிகளோ... ஏன்? தமிழில் அர்ச்சனை நடத்த முடியாதா? தமிழில் அர்ச்சனையை இதுவரை யாரும் எழுதவில்லையா? அப்படியானால் நீங்களே எழுதிக் கொள்ளுங்கள். இதை நாங்கள் கூட்டம் கூட்டும் முன்பே சொல்லியிருந்தோமே... எழுதி வந்துள்ளீர்களா என கேட்டனர்.

சில பட்டாச்சார்யார்கள் தாங்கள் எழுதி வந்ததை எடுத்துக் கொடுத்தனர். தமிழில் அர்ச்சனை செய்வது நடைமுறை சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தும் வகையில் அவர்கள் எழுதி வைத்திருந்ததை கொடுத்தனர். இது அதிகாரிகளுக்கு திருப்தியை தரவில்லை.

நானும் அந்த மீட்டிங்கில் இருந்தேன் அல்லவா, என்னிடம் தமிழ் அர்ச்சனை கேட்டார்கள். நானும் எழுதி வைத்திருந்ததை எடுத்துக் கொடுத்தேன். என்னவென்றால்...

`உயர்வு அற உயர் நலம் உடையவன் போற்றி...
மயர்வு அற மதிநலம் அருளினன் போற்றி...
அயர்வு அற அமரர்கள் அதிபதி போற்றி...

இப்படியாக செந்தமிழில் நாராயணனை போற்றும் நாமங்கள் 108 எழுதிக் கொடுத்தேன். இது நானாக யோசித்து எழுதவில்லை. தமிழ் அர்ச்சனை என்றதுமே என் நினைவுக்கு வந்தவர்கள் ஆழ்வார்கள்.

நான் எழுதிக் கொடுத்தது நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழியில் தொடங்கி சில பாசுரங்களை `சஹஸ்ரநாமம் பாணியில் எடுத்துக் கொடுத்ததுதான்.

சஹஸ்ரநாமம் என்றால்...?

இன்னும் பல பிராமணர்களின் வீடுகளிலும் விஷ்ணு பக்தர்களின் வீடுகளிலும் டேப் ரெக்காடர்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது சஹஸ்ரநாமம். பல பிராமணர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சஹஸ்ரநாமம் சொன்னால் புண்ணியம் என்ற கொள்கை முடிவில் இருக்கிறார்கள்.

அதாவது பகவானின் ஆயிரம் பெயர்களைக் கூறி அவனைப் போற்றிச் சொல்வதுதான் சஹஸ்ரநாமம். ஆயிரம் நாமங்கள். அதாவது சமஸ்கிருத நாமங்கள். அதுதான் சஹஸ்ரநாமம்.

``சுக்லாம் ப்ரதரம் விஷ்ணும்'' என்ற தனியனோடு ஆரம்பமாகி...
``விஸ்வம் விஷ்ணும் வஷட்காரோ பூத பவ்ய பவத் பிரபுஹு...''

என ஆரம்பிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் `பல ஸ்ருதி' என்ற சஹஸ்ரநாமத்தைப்பற்றி மற்ற க்ரந்தங்கள் சொல்லியுள்ள புகழுரையோடு முடிகிறது. இதைத்தான் பெருமாள் கோயில்களில் அர்ச்சனைக்காக பயன்படுத்துகிறார்கள்.

இதற்கு... தமிழ் அர்ச்சனை, தமிழ் பூஜை செய்யவேண்டும் என்றுதான் நான் ஆழ்வார்களில் தலைமையும் பெருமையும் உடையவரான காரிமாறன் என இலக்கிய பக்தர்களால் அழைக்கப்படும் நம்மாழ்வாரின் பாசுரங்களை தமிழில் நாம அர்ச்சனைக்கு எழுதிக் கொடுத்தேன்.

இதைப் படித்துப் பார்த்த அதிகாரிகளுக்கு பரம இன்பம். தமிழில் இவ்வளவு இனிமையான கருத்து அடர்த்தியுள்ள பக்தி கானங்கள் இருக்கும்போது ஏன் சமஸ்கிருத பாஷையை கட்டிக்கொண்டு நாம் அழவேண்டும்?

இதுபோல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தரும் நல்ல தமிழ் சொற்கோவைகளுடன் தமிழிலேயே இறை பூஜைகள் செய்யலாமே என்றனர். அப்படியே ஆகட்டும் என பணித்தனர்.

அதன்படி ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் அடிப்படையில் நான் எழுதிக் கொடுத்த 108 தமிழ் நாம வழிபாட்டு மொழிகள்... அப்போதே அர்ச்சகர்களின் எதிர்ப்போடு... 30-40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயிலில் அரங்கேற்றப்பட்டது.

சமஸ்கிருத சஹஸ்ரநாமம் கேட்டே பழக்கப்பட்டுப்போன சாரங்கபாணி பெருமாள்... அன்றுதான் தன் இனிய தமிழ் நாமங்களை - அர்ச்சனை போற்றி பாணியில் கேட்டு மகிழ்ந்தார்.

தாத்தாச்சாரியாரே... இப்ப திருப்தியா? என கேட்டார் என்னிடம் ஒரு அதிகாரி. நான் சொன்னேன், ``பெருமாளைக் கேட்டுப் பாருங்கோ, டபுள் திருப்தினு சொல்வார்'' என்று. அவர் மகிழ்ந்து சிரித்தார். இது ஒன்றும் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. மொழி விளையாட்டைப் பற்றித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்று சாரங்கபாணி கோயிலில் அரங்கேறிய தமிழ் அப்போதே பல கோயில்களிலும் அரங்கேறியதா? இன்னும் பல கோயில்களில் தமிழில் அர்ச்சனை பண்ணுங்கோ என்றால் நம்மை ஏற இறங்க பார்க்கிறார்களே. இவ்வளவு இனிமையான கருத்து அடர்த்தியுள்ள பக்தி கானங்கள் தமிழில் இருந்தும்... ``தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்'' என்று கோயில்களில் போர்டு வைத்திருக்கிறார்களே.... இந்த `உம்' ஏன் வந்தது? உம்...?

000000000000000000000000000

பாகம் 68 தமிழை கட்டிப்போட்ட சமஸ்கிருதம். பூசையில் சூழ்ச்சி.

தமிழன் வெளியே நிறுத்தப்பட்டான். சமஸ்கிருதர்கள் உள்ளே சென்றார்கள்.

சமஸ்கிருதம் எப்படி தமிழை கட்டிப் போட்டது?.. அந்த காலத்தில். வேதம் தமிழ் தேசத்தையே ஆக்கிரமித்தது. எங்கும் வேதம். எதிலும் வேதம்.

இந்த சிலைக்கு ஏன் வெறும் பூ போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?... இந்த சிலையில் வேதம் சொன்ன தேவதைகளை நாங்கள் வர வைத்து காட்டுகிறோம். அவர்கள் கண்ணுக்கு தெரியாத தேவதைகள். அஸரீரிகளாக இருப்பார்கள். அவர்களின் காதில் விழுமாறு வேத மந்த்ரங்களை நாம் உரத்து உச்சரித்தால் இந்த சிலைக்குள் எங்கள் வேதத்தின் தேவதை வரும்...''

நாலாயிர திவ்ய பிரபந்தம். இந்த சொற்களிலிருந்தே தமிழை அந்த காலத்தில் சமஸ்கிருதம் எப்படி கட்டிப் போட்டிருந்தது என்பதை அறியலாம்?

ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் தமிழ் ஆழ்வார்களின் அருளிச் செயலான நாலாயிரம் இறைப் பாட்டுகளை திவ்யம் - (தூய்மை) ப்ரபந்தம் - (திரட்டு) என்ற இரு சமஸ்கிருத சொற்களால்தான் நாம் இன்றளவும் அழைத்து வருகிறோம்.

இனிமேலாவது... "அழ்வார்களின் நாலாயிர அருளிச் செயல்' என இந்த புனித நூலுக்கு தமிழ் தலைப்பு கொடுக்கலாம். சரி...

சமஸ்கிருதம் எப்படி தமிழை கட்டிப் போட்டது?...அந்த காலத்தில்... வேதம் தமிழ் தேசத்தையே ஆக்கிரமித்தது...

எங்கும் வேதம்... எதிலும் வேதம். அதாவது இங்கே உள்ள சிலைகள், நுட்பமான சிற்பங்களை பார்த்த பிராமணர்கள்...

"இந்த சிலைக்கு ஏன் வெறும் பூ போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?.. இந்த சிலையில் வேதம் சொன்ன தேவதைகளை நாங்கள் வர வைத்து காட்டுகிறோம். அவர்கள் கண்ணுக்கு தெரியாத தேவதைகள். அஸரீரிகளாக இருப்பார்கள்.

அவர்களின் காதில் விழுமாறு வேத மந்த்ரங்களை நாம் உரத்து உச்சரித்தால் இந்த சிலைக்குள் எங்கள் வேதத்தின் தேவதை வரும்...'' என்றார்கள்.

தமிழன் முதலில் சிலைக்கு பூ தான் போட்டுக் கொண்டிருந்தான். அதுதான் நமது வழிபாடு என்று முன்பே நான் சொல்லியிருந்தேன்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி (2940) தமிழ்ச் செய்யுளைப் பாருங்கள்."நாடாத மலர் நாடிநாள்தோறும் நாராயணன் - தன்வாடாத மலர் - அடிக்கீழ்வைக்கவே வகுக்கின்று...வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ?...ஊடாது பனி வாடாய்...! உரைத்து ஈராய் எனது உடலே...''

அதாவது... இறைவனிடம் தனது எண்ணத்தை தெரிவிக்கும்படி... நாரைகள், அன்னங்கள், குயில்கள், மகன்றில்கள் (மரங்கொத்தி இனத்தைச் சேர்ந்த வளைந்த மூக்குடைய கடற்கரை பறவை), சிறிய குருகுகள் (கொக்குகள்), வரி வண்டுகள், இளங்கிளிகள், நாகணவாய் பறவைகள் ஆகியவற்றிடம் தூது செல்ல கேட்டுக் கொண்டே வரும் ஆழ்வார்...அடுத்து தூதாய் அனுப்ப பனிக்காற்றை தேர்ந்தெடுக்கிறார். வாடைக்காற்று வீசும் வேளையில்... அவ்வாடையிடம் வேண்டுகோள் வைக்கிறார்.

அதாவது பாட்டு தான் ஆழ்வாருடையது. பறவைகளையும், வண்டுகளையும், பனிக்காற்றையும் இங்கு தூதாக அனுப்புவது தலைமகள்.

அதாவது இறைவனைப் பிரிந்த தலைமகள். "வாடைக்காற்றே... வாடைக் காற்றே... இங்கே வா. என் பெருமானிடம் எனக்காக நீ போய் அவனிடம் ஒன்று சொல்வாயாக. இப்படி என்னைப் பிரிந்து அவனும், அவனைப் பிரிந்து நானும் இருப்பது நல்வினையாகாது என்று சொல்லு...உலகில் இத்தனை உயிர்களை, ஜீவன்களை, மனிதர்களை அவன்தான் படைத்தான்.

உலகில் உள்ள பல்வேறு வகை பூக்களை பறித்து நாள்தோறும் நாராயணனின் வாடாத பூமலர் திருவடிகளில் மெல்ல மெல்ல இட்டு வழிபடுவதற்காகவே அத்தனை பேரையும் படைத்தான். நான் மட்டும் அப்படி செய்யமுடியாத வகையில் பிரிவது என்ன நியாயம்?... அவனிடம் போய் நீ சொல்லு. என்னை ஏற்கவில்லையாயின்... நீ மறுபடி வந்து என் சதைகளை பிய்த்தெறி எலும்புகளை உடை... என் உடலை அறுத்தெறிந்துவிடு பனிக்காற்றே'' எவ்வளவு அழகான இலக்கியம் பாருங்கள். தலைமகள் பனிக்காற்றிடம் சொல்வதாக ஆழ்வார் அருளுகிறார்.

அந்த பனிக்காற்று இன்றும் வீசிக் கொண்டிருக்கிறது. இந்த பாடல் மூலம் நமக்கு அந்த காற்று என்ன சொல்கிறது?...

"பூக்களை பறித்து தினமும் பூ+செய் பூசை செய்வது தான் தமிழர் பண்பாடு ''என்று.

இந்தப்பண்பாட்டில்தான் குறுக்கே வந்தார்கள் பிராமணர்கள். "முதலில் நீ பூ போட்டுக் கொண்டே இரு... நான் வேதம் சொல்கிறேன்....' என்று வெளியே நின்றார்கள்.

காரணம்... நீ பகவான் பக்கத்தில் நின்று எதாவது சொன்னால் அவன் மேல் எச்சில் தெறிக்கும். அதனால் நீ பூ போட்டபடியே இரு. நான் சத்தம் போட்டபடியே இருக்கிறேன் ''

இதற்கு பெயர் அத்யயன பட்டர். கொஞ்சநாள் ஆனது. அத்யயன பட்டரே உள்ளே வந்து விட்டார். உள்ளே என்றால்?... கர்ப்ப கிரகத்துக்குள். இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீ வெளி வேலைகளைப் பார்.அடுத்து... ஆகமக்காரர்களின் ஆதிக்கம்.

அவர்கள் முழு முதல் சமஸ்கிருதக்காரர்கள் ஆனதால். தமிழன் வெளியே நிறுத்தப்பட்டான். சமஸ்கிருதர்கள் உள்ளே சென்றார்கள். தமிழ் பூக்களை தூவி சமஸ்கிருத அர்ச்சனை நடத்தினார்கள்.

இப்படி "சமஸ்கிருத சர்க்கார்' நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான்... நமது தமிழ் பக்தி இலக்கியத்தை முன்னிறுத்துவதற்காக ... ஆங்காங்கே ஆழ்வார்கள் தோன்றினார்கள்.

5-ம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலங்களில்...இவர்கள் தங்களது மிகச்சிறந்த பக்தி மற்றும் தமிழ்ப்பாசம், தமிழறிவு காரணமாக நாராயணனை போற்றி அதேசமயம் வேதக் கருத்துக்களையும், வடமொழி கதைகளையும் உள் வாங்கி தமிழிலேயே பாடல்களை இயற்ற ஆரம்பித்தனர். இந்த 12 அழ்வார்கள் தங்களது பாடல்களை குறிப்பிட்ட கோயில்களில் குடி கொண்டுள்ள பெருமாள் மீது சாற்றிப் பாட... அந்த திருத்தலங்கள் தமிழ் பாடப் பெற்றதால் புனிதமாயின. அதாவது திவ்ய தேசமாயின. அப்படியிருந்தும் 

00000000000000000000000000000000000

பாகம் 69 கட‌வுளை காலையில் எழுப்பனுமா? சுப்ரபாதம் பாடி?.

Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம். சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?...

சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம்?... அது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம்.
சமஸ்கிருத கைதிகளாக இருக்கும் சிலபேர் தமிழை நீசபாஷை என ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.

தமிழ் நீச பாஷையா?... இறைவனின் நேச பாஷையா?...

ஆழ்வார்கள் தமிழில் பாடியதால் கோயில்கள் புனிதமாகின என்று பார்த்தோம். ஆனால்... அதே ஆழ்வார்கள் பாடிய அதே கோயில்களில் கூட...

காலை வேளைகளில் ஒலிக்கிறதே வடமொழி சுப்ரபாதம்! சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம்?... அது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம். இன்னும் உங்களுக்கு மாடர்ன் ஆக சொல்ல வேண்டுமென்றால் Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம்

அதாவது "Good morning to God and wake up him...'' இன்று பற்பல கோயில்களிலும்... காலை வேளைகளில் ரம்யமான விடியல் போதில்... ஸ்பீக்கரில் போடுகிறார்கள் சுப்ரபாதத்தை. அந்த இசை கேட்கும்போதே நம்மை மயக்குகிறது. ஆனால் அதன் அர்த்தம் உங்களுக்குப் புரியுமா?... என்ன பாடுகிறார்கள் என்று தெரியாமலேயே... அதை நாம் திரும்பப் பாடி முணுமுணுக்கிறோம்.

தினமும் காலையில் அதை டேப் ரெக்கார்டரில் போட்டு விடுகிறோம். எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் வசீகர குரல் வளத்தால்..."கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்ததது..." என ஆரம்பிக்கிறார். அப்படியே விடியும்வரை கேட்கிறீர்கள்.

இது யார் எழுதியது?... இதன் அர்த்தம் என்ன?... தமிழ்நாட்டில் பற்பல பிராமணர் அல்லாதோர் வீடுகளிலும் இந்த சுப்ரபாதப் பாடல் ஒலித்து மயக்குகிறதே... இந்த சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?...

திருப்பதி வெங்கடேசனை எழுப்பும் இந்த சுப்ரபாதம் ஏன் தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட ஒலிக்கிறது?... என்றெல்லாம் உங்களுக்கு கேள்வி எழ வேண்டும்... அதற்கு பதில் உங்களில் பலருக்கு தெரியாது. இது சத்தியம்.

இந்த சுப்ரபாதத்தை அதாவது சமஸ்கிருத "Good morning' 'ஐ இயற்றியவர் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா. (மத விஷயங்களில் தன்னோடு வாதம் பண்ண வருபவர்கள் யாராக இருந்தாலும்... தன்னுடைய பயங்கரமான பிரதிவாதம் மூலம் அவர்களை தோற்கடித்து விடுவார் அண்ணா. அதனால்தான் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா என பெயர் பெற்றார்.) இவர் மணவாள மாமுனிகளின் சிஷ்யர். "ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி' என்று வாழ்த்தினாரே அதே மணவாள மாமுனிகளின் சிஷ்யர்தான் அண்ணா.

"கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்தது...'' என்ற இந்த முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்திலிருந்து உருவப்பட்டது அதாவது... விஸ்வாமித்ரர் ராமனை எழுப்புகிறார். "கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா... அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்களை வீழ்த்து...' என ராமனை எழுப்பி அழைக்கிறார்

விஸ்வாமித்ரர்.இதை முதல் வரியாக போட்டு... வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியிருக்கிறார் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா.

இவர் இந்த சுப்ரபாதத்தை 14-ம் நூற்றாண்டில் இயற்றினார் என்கிறார்கள். ஆனால்... இதே போன்ற சுப்ரபாத வடிவத்தை நாம் இப்போது கேட்கிற சுப்ரபாதம் இயற்றப்பட்டதற்கு அறுநூறு வருஷங்கள் முன்னதாகவே... அற்புதமாக இயற்றியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார் தமிழில்.

இனிய தமிழில் "திருப்பள்ளியெழுச்சி' என்றும் பெயர் கொண்ட அந்த பத்து முத்தான பாடல்களை (ஆழ்வார்கள் அருளிச் செயல் புத்தகத்தில் 917 முதல் 926 வரையிலான பாடல்கள்) சிலவற்றை மட்டும் உங்களுக்கு சொல்கிறேன்.

தொண்டரடிப் பொடியாழ்வார் காவேரிக் கரையில் படுத்திருக்கும் திருவரங்க பெருமாள் அரங்கநாதனை எழுப்புவதாக இந்த பாடல்களை இயற்றியிருக்கிறார்.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்; கனை இருள் அகன்றதுகாலை அம் பொழுதாய்மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர்திசை நிறைந்தனர். இவரொடும் புகுந்த இருங் களிற்று ஈட்டமும் பிடியொரு முரசும்அதிர்தலில் அலை-கடல் போன்றுவிது எங்கும்அரங்கத்தம்மா. பள்ளி எழுந்தருளாயே...-

இதுதான் தமிழ் திருப்பள்ளியெழுச்சியின் முதல் பாடல்.

கதிரவன் கிழக்கின் மேலே முளைத்து விட்டான். இரவின் இருள் அகன்றது... காலைப்பொழுது மலர்கள் பூத்து தேன் சொரிகின்றன. வானத்து தேவர்களும், பூமியின் மன்னர்களும், பக்தகோடிகளும் நீ பார்க்க தெற்குப் பக்கம் திரண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்த யானைத் திரள்கள் எழுப்பும் பிளிற்று ஒசையும்... யானைப் படையின் முரசு ஒலியும் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கிறதே அரங்கா... திருப்பள்ளியை விட்டு எழுக, அவர்களுக்கு காட்சி தருக...-என திருவரங்கத்து பெருமானை தமிழால் தட்டி எழுப்புகிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

இங்கே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே... -என தன் இறைவனை அம்மாவென அழைக்கிறார் ஆழ்வார். இந்தப் பாடலில் பக்தி இல்லையா?... சுவை இல்லையா?... இலக்கியம் இல்லையா?... அல்லது உங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா?...இன்னும் ஒரு தமிழ் திருப்பள்ளியெழுச்சி கேளுங்கள்.

கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன, இலையோகதிரவன் கனை கடல்முளைத்தனன், இவனோதுடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறிதுகில் எடுத்து ஏறினர். சூழ்புனல் அரங்காதொடை ஒத்த துளவமும் கூடையும் பொழிந்துதோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன்அடியார்க்கு ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்தருளாயே!-

சுற்றிலும் காவிரி நதி சூழ்ந்த அரங்கா. கடலிலே கதிரவன் தோன்ற... குளங்களில் தாமரைப் பூக்கள் சிரித்து மலர்ந்து மணக்கின்றன.சின்னச் சின்ன இடுப்புகளை பெற்ற பெண்கள் காவிரியில் குளித்து... தங்களின் நனைந்த கூந்தலை ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி உதறி... தத்தம் அடைகளை உடுத்தி கரையேறுகிறார்கள்.

இப்படிப்பட்ட இளங்காலைப் பொழுதில் தொண்டரடிப் பொடியென்னும் நான் திருத்துழாய் (துளசி) மாலையும், பூக்குடலையும் தாங்கி காத்திருக்கிறேன். இந்த அன்பனை ஏற்று அருளி ஆளாக்க வேண்டும்.இந்த தமிழ்பாடலுக்கு என்ன குறைச்சல்….

0000000000000000000000000

பகுதி – 70. 

தொண்டரடிப் பொடியாழ்வாரின் தமிழ் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் பத்தில்... முதல் மற்றும் கடைசி பாடல்களை எடுத்துக் காட்டினேன்.என்ன வர்ணனைகள்?... என்ன எதுகை மோனைகள்?... எவ்வளவு இனிமை வழிகிறது!

"கொழுங்கொடி முல்லையின் கொழுமலர்' என்ற இரண்டாவது பாடல், "சுடர் ஒளி பறந்தன சூழ்திசை எல்லாம்' என்ற மூன்றாவது பாடல், "மேட்டு இள மேதிகள்' என்ற 4-ஆம் பாடல், "புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்' என்ற ஐந்தாம் அருளிச் செயல் "இரவியர் மணி நெடுந் தேரோடும்' என்ற ஆறாவது பாசுரம்."அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள்' என ஆரம்பிக்கும் ஏழாவது பாட்டு, வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க... -என்ற எட்டாவது பாட்டு... ஏதம் இல் தண்ணுமை எக்கும் மத்தளி... - என்று ஒன்பதாவது பாசுரம்...தொண்டரடிப் பொடியாழ்வாரின் இந்த பத்து பாடல்களும்... இன்று எங்கும் ஒலிக்கிற சுப்ரபாதப் பாடலுக்கு 600 வருடங்கள் முன்னரே ரங்கனை எழுப்பிய பாடல்கள்.

சுப்ரபாதத்தில் இன்னொரு "லாஜிக்'கும் இருக்கிறது. அதிலும் தமிழ்தான் வெற்றி பெறுகிறது

திருப்பதி வெங்கடாஜலபதி நின்று கொண்டிருக்கிறார். அவரை எழுப்புவது சரியாக இருக்குமா?... இங்கே திருவரங்கத்தில் அரங்கன் படுத்துக் கொண்டிருக்கிறார் இவரை எழுப்புவது சரியாக இருக்குமா?

படுத்துக் கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை தமிழில் செய்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். நின்று கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை சமஸ்கிருதத்தில் செய்தார் அண்ணா.

ஆனால்... நாமோ logic இல்லாத சமஸ்கிருத வெங்கடேச சுப்ரபாதத்தை தினந்தோறும் காலையில் போட்டுக் கேட்கிறோம். ஆனால்... மறுபடியும் நான் அழுத்திச் சொல்வேன். இதே பொருளை 600 ஆண்டுகள் முன்கூட்டியே சொன்ன தமிழை தள்ளி வைத்து விட்டார்களே.

இன்றும் கோயில்களில் தினசரி சேவா காலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி ஒலிக்கிறது. ஆனாலும், சுப்ரபாதத்தை போல திருப்பள்ளியெழுச்சி என தமிழ் பெயரில் மாற்றி இனியாவது எவரேனும் அதற்கு நல்ல இசையமைத்து விடியற்காலையில் தமிழ் மணக்கச் செய்வார்களா?

சமஸ்கிருத கைதிகளாக இருக்கும் சிலபேர் தமிழை நீசபாஷை என ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள். தமிழ்தான் நமக்கு மட்டுமல்ல அரங்கனுக்கும் நேசபாஷை என்பதை இன்னொரு ஆழ்வாரின் வாழ்க்கையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

அவர் திருப்பாணாழ்வார்... சோழ நாட்டிலே உறையூர் என்ற திருவூரில் பாணர் வம்சத்தில் பிறந்தவர். பாணர்கள் என்றால் "பாண்' என்னும் இசைக்கருவியை வைத்துக் கொண்டு மன்னர்களைப் பாடி பரிசுப் பொருள்களை பெற்று ஜீவனம் நடத்துபவர்கள்.

ஆனால்... நமது பாணரோ... திருவரங்கத்து பெருமாளையே நினைத்துப் பாடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் காவேரி சூழ்ந்த திருவரங்கத்தில் இருக்கும் ரங்கநாதனை தனது பாண் இசைக்கருவி மூலம் "டிங்கு டிங்கு டிங் டிங்...' என இசைத்துக் கொண்டு பாடியபடி இருந்தார்.

ஆனால்... இவரைப் பார்த்த உயர் ஜாதியினர்களோ..."நீ தாழ்ந்த சாதிப்பயல் நீ எப்படியடா திருவரங்கத்துக்குள் நுழைய முடியும்... போடா' என துரத்தியடித்தார்கள். பாணரோ... நான் பெருமாளை பாடித்தான் தீருவேன் என்று செந்தமிழில் ரங்கனை உருகி ராகமிசைத்துக் கொண்டிருந்தார். இவரது தமிழிசையை... ரங்கனின் உயர்ஜாதி பக்தர்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் விரட்டியடிக்க... காவேரிக் கரையிலேயே நின்று கொண்டிருந்த பாணர் வாழ்வில் ஒரு அதிசயம் நடந்தது.

காவேரிக் கரையில் தனிமையில் நின்று அரங்கனை பாடிக் கொண்டிருந்த பாணர் முன்பு... ஒரு வைதீகர் ஆச்சாரமான வைதீகர் நின்றார். எங்களை மன்னிப்பீர் பாணரே... உங்களை இதுநாள் வரை திருவரங்கத்துள் அனுமதிக்காமல்... அரங்கனை தரிசிக்க விடாமல் பாவம் செய்தோம். உங்கள் தமிழை நாங்கள் மறுதலித்தோம்.

ஆனால்... பகவான் அரங்கநாதர் உங்கள் தமிழுக்காக தவம் இருக்கிறார்.உங்களது இனிய பாடல்களை அரங்கன் அவதானித்துக் கொண்டே இருக்கிறார். என்னை அழைத்து, "நீ போய் நமக்கு அந்தரங்கரான பாண் பெருமாளை உம்முடைய தோளிலே தூக்கிக் கொண்டு வா... அவரை ஒதுக்கி வைக்க நினைக்காதீர் உடனே செல்' என கேட்டுக் கொண்டார்.

வாருங்கள் என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள். உங்களை சுமந்து அரங்கனிடத்தில் இறக்கி விடுகிறேன்'' என்று பாணரை பார்த்து பணிவுடன் சொன்னார் அரங்கன் அனுப்பிய லோகசாரங்கர். பாணர் அதாவது திருப்பாணாழ்வார் லோகசாரங்கர் தோளில் எறி... திருவரங்கத்தை அடைய...அங்கே திருப்பாணாழ்வாரை பார்த்த அரங்கன்... அவருக்கு காட்சி தந்து இப்போது என் அருகில் தமிழ் பாடுங்கள் பாணாழ்வாரே...'' என்று கேட்கிறார்.இந்த காட்சியை பார்த்து அனுபவித்து அமலனாதிபிரான் என பத்து பாசுரங்களை (927-936) பாடினார் திருப்பாணாழ்வார். ..இப்போது சொல்லுங்கள் தமிழ் நீச பாஷையா?... இறைவனின் நேச பாஷையா?...

தொடரும்

நன்றி : http://thathachariyar.blogspot.fr/2011/01/blog-post.html


Comments