Skip to main content

Posts

Showing posts from November, 2015

காணாமல் போகும் குருவிகள் - தைலஞ்சிட்டுகள்-கட்டுரை.

பருவ மழையால் இந்தியாவே, குறிப்பாக நம் தமிழகம் தற்போது நனைந்து நடுங்குகிறது. தெருவெல்லாம் தண்ணீர் ஓட, குறுகிய உடலும் குடையுமாய் இல்லம் நோக்கி விரைகின்றனர். ஒழுகும் வீட்டையும், ஒடிந்து போன மரக்கிளைகளையும், அறுந்து விழுந்த மின்சார வயரின் மறு இணைப்புக்காக மின்வாரிய ஊழியரை வேண்டிய வண்ணம் சலிப்புடன் காத்திருக்கின்றனர்.
தாய்மார்கள் ஈரத்துணியைக் காய வைக்க முடியவில்லை என்ற கோரிக்கையில் துவங்கி இன்னும் ஏதேதோ பட்டியலிடுகின்றனர். மழையே காரணமாய் அமைந்து பள்ளிகளுக்கு விடுமுறை என்ற இனிய செய்தி தொடர் செய்தியாய் காதுகளுக்குள் பாயாதா என ஏங்கிய வண்ணம் குழந்தைகள்.
என்னைப்போல் வெகுசிலரே கொட்டும் மழையிலும், உடைந்து ஓடும் கண்மாய்க் கரையோரமும், கம்பீரமாய் நுங்கும் நுரையுமாய் வெளியேறும் மறுகா வாயிலிலும் கால்களை நனைத்தவாறு உள்ளோம். கூட்டமும், குடும்பமும் விநோதமாய் பார்க்கிறது...........
எங்களைப்போலவே புள்ளினங்களும் என் வீட்டுக் கூரை மீது மகிழ்வுடன் பறந்து போகின்றன. ஏதேதோ பெயர் தெரியாத செடி கொடிகள் மிக அழகாய் பூத்துக் குலுங்கின்றன.
தீபாவளி தினத்தன்று குன்னூர் பாலம் கீழே ஓடும் வைகை ஆற்றைப் பார்ப்பதற்குச் சென்றே…

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்- அறிவியல்- பாகம் 14.

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3 - பகுதி 4 
இந்தப் பிரபஞ்சம் மிக மிக பெரியது, அதுவும், இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி ஒளியாண்டுகள் தூரத்தில் அளவிடப்படுகிறது. அதுமட்டும் அல்லாது, அதிகமான நட்சத்திரத்தொகுதிகள், உயிரினம் வாழ தகுதியற்ற கோள்களையே கொண்டுள்ளன. ஆகவே மூன்றாம் வகையை சேர்ந்த நாகரீகமானது, எண்ணிலடங்கா நட்சத்திர, கோள்த் தொகுதிகளை ஆய்வு செய்ய மிகச்சரியான முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி எவ்வாறான முறையைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும், கோள்களையும் ஆராய முடியும்?
நாம் அடிக்கடி அறிவியல் புனைக்கதைகளிலும்,திரைப்படங்களிலும் பார்த்திருப்போம், ஒரு விண்கப்பல், அதில் ஒரு ஐந்து பேர்கொண்ட குழு, அவர்கள் எதோ ஒரு கோளை நோக்கி பயணிப்பார்கள். ஆனால் இந்த முறை நடைமுறைக்கு ஒத்துவராது. பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும் கோள்களையும் ஆராய இப்படி பெரிய பெரிய விண்கலங்களையும் மனிதர்களையும் அனுப்புவதென்பது முடியாத காரியம்.
பூமியின் தற்போதைய சனத்தொகை 7 பில்லியன். நமது பால்வீதீயில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை 200 பில்லியனை விட அதிகம், ஆக, இப்போது பிறந்த கு…

திராவிடர்-கட்டுரை.

திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மத்திய இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற பகுதிகளிலும் சிறிய அளவில் பாரம்பரியமாக வாழும் திராவிடர் காணப்படுகின்றனர்.
திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. இன்று திராவிட மொழிக் குடும்பத்தில், சுமார் 85 மொழிகள் வரை இருப்பது அறியப்பட்டுள்ளது.
திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்றும் அச்சொல் திரிபடைந்தே தமி…

மறிக்கிடா -சிறுகதை- தீரன் ஆர்.எம். நௌஸாத்.

X என்கிற அகிலமக்கா பத்து ஆடுகள் வைத்திருந்தாள். எல்லாம் பெட்டைகள்தாம்.. பெட்டைகளுக்கு மறிக்காக என்று வைத்திருந்த பெரிய கிடாவை சென்ற பெருநாளைக்கு முஸ்லிம் சந்தையில் இருபத்தெட்டாயிரம் கொள்ளை விலைக்கு விற்றுவிட்டிருந்தாள். ரொக்கப்பணத்துக்கும் கல்முனை சொர்ணம் நகைமாளிகையில் கைச்செயின் வாங்கி அணிந்திருந்தாள்.
X அக்காவுக்கு வயது 45தான். இன்னும் நரைக்கவுமில்லை. சதா வேலைவாடை செய்ததில் கட்டுமஸ்தான உடம்பும்..நல்ல முகவெட்டும்… சதா வெற்றிலை போட்டுச் செக்கச்சிவந்திருந்த உதடுகளும்… முந்தானையை மீறத் துடிக்கும் மார்புகளும்….. கணவர் சின்னப்புவுக்கு அவளது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடிவதில்லை. என்றாலும் பெயருக்கு கணவர் என்ற லேபலோடு ஏதோ அவள் சொல்வதையெல்லாம் செய்து கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருந்தார். தனது 68 வயதில் அவளுக்கு தன்னால் ஈடு கொடுக்க முடியாதென்பதை தாம்பத்திய இரவுகளில் சந்தேதகமறத் தெரிந்து கொண்டிருந்தார். பிள்ளை குட்டிகளும் இல்லை.
X அக்காவின் ஆட்டுப்பட்டியில் இப்போது எல்லாமே பெட்டைகளாகவே இருந்தன. மறிக்கு ஒரு கிடாய் இல்லை. அப்படியானால் பட்டி பெருகுவது எப்படி… மறிப்படுவதற்கு பெட்டைகள் தயாராக இருந்த…