Skip to main content

Posts

Showing posts from March, 2016

பார்த்திபன் கனவு -புதினம் - 56 -மூன்றாம் பாகம் - அத்தியாயம் 19- பொன்னனின் சிந்தனைகள்.

பொன்னன் பராந்தக புரத்தின் வீதியில் போய்க் கொண்டிருந்தபோது, எதிரில் இராஜ பரிவாரங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டு ஒதுங்கி நின்றான். பல்லக்கில் அமர்ந்திருந்த குந்தவிதேவியைத் தீவர்த்தி வெளிச்சத்தில் பார்த்தான். இதற்கு முன் அவன் மனதில் என்றும் தோன்றாத பக்தியும் மரியாதையும் அவளிடம் அவனுக்கு உண்டாயிற்று. தெய்வீக சௌந்தரியம் பொருந்திய இந்தத் தேவியின் உள்ளமும் தெய்வத் தன்மை கொண்டதாக வல்லவா இருக்கிறது? வழியில் அநாதையாய்க் கிடந்தவனைக் தூக்கித் தன்னுடைய பல்லக்கில் ஏற்றிக் கொண்டு வருவதற்கு எவ்வளவு கருணை, தயாளம், பெருந்தன்மை வேண்டும்?
அன்றிரவு பொன்னன் அவ்வூர்க் கோயில் பிராகாரத்தில் படுத்துக் கொண்டே மேலே செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தனை செய்தான். இளவரசரோ சரியான சம்ரக்ஷணையில் இருக்கிறார். குந்தவி தேவியைக் காட்டிலும் திறமையாக அவரைத் தன்னால் கவனிக்க முடியாது. இளவரசர் எங்கே போக விரும்பினாரோ அவ்விடத்துக்கே குந்தவிதேவி அவரை அழைத்துப் போகிறார். ஏதோ சோழ வம்சத்தின் குலதெய்வமே இவ்விதம் ஏற்பாடு செய்ததென்று சொல்லும்படி எல்லாம் நடந்திருக்கிறது. எப்படியும் இளவரசருக்கு உடம்பு நன்றாய்க் குணமாகச் சில தினங்கள் ஆகும்…

வட்டம்பூ - அ .பாலமனோகரன் -இலங்கை -தொடர்நாவல் - முடிவு -பாகம் 14 -21

வட்டம்பூ அத்தியாயம் 14  அந்த அகலமான நதியில் முழங்காலளவு நீரில் இறங்கி வருகையிலேயே கே.பி. அக்கரையில் பாலையடி இறக்கத்து வெண்மணல் மேட்டையும், அதன் பின்னணியில் பூத்துநின்ற வட்டம்பூ செடிகளையும் மிகவும் இரசித்தவராய், அது என்ன பூ என சேனாதியிடம் வினவினார். 'அதுதான் சேர் வட்டம்பூ!" என்று சேனாதி பதிலளித்ததும், அவர் சிரித்துக்கொண்டே 'இதற்கு வட்டம்பூ என்ற பெயரைக் காட்டிலும் இரத்தம் பூவென்று பெயர் வைத்திருக்கலாம்!" என்று சொன்னவர் நடப்பதை நிறுத்தி, 'இந்தப் பூவையும் இரத்தம்போன்ற அதன் நிறத்தையும் பார்த்ததுமே நான் படித்து ரசித்த கதையொன்று எனக்கு ஞாபகம் வருகின்றது!" என்றார். காந்தி ஆவலுடன் 'சொல்லுங்கோ சேர்!" எனக் கேட்டபோது, ஆற்றினூடாக மெல்ல நடந்தபடியே அவர் அந்தக் கதையைக் கூறலானார்.
'ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னே கடலாலும், உயர்ந்த மலைகளினாலும் வளைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பிரதேசத்தில் ஒரு கூட்டம் மக்கள் வாழ்ந்திருந்தார்களாம். நாளடைவில் அங்கு உணவு, நீர் ஆகியவற்றுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. நீண்ட வறட்சியின் காரணமாக இந்த அவலநிலை ஏற்பட்டபோது அங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் அ…