Skip to main content

Posts

Showing posts from August, 2015

பார்த்திபன் கனவு 47 - புதினம் - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 10 - காட்டாற்று வெள்ளம்.

அத்தியாயம் 10 - காட்டாற்று வெள்ளம்


சென்ற அத்தியாயங்களின் சம்பவங்களும், சம்பாஷனைகளும் வாசகர்களில் சிலருக்கு விசித்திரமாய்த் தோன்றுவதுடன், சில விஷயங்கள் விளங்காமலும் இருக்கலாம். நரபலியாவது, மண்டையோடாவது, இதென்ன அருவருப்பான விஷயம்! - என்று தோன்றலாம். ஆனால் நமது தமிழகத்தின் அந்தக் காலத்துச் சரித்திரத்தை ஆராய்ந்தவர்களுக்கு வியப்பு ஒன்றும் இராது. அருவருப்பாயிருந்தாலும், உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா?"
மகேந்திர பல்லவர் காலத்திலும் நரசிம்மவர்மரின் காலத்திலும் தமிழ்நாட்டில் சைவமும் வைஷ்ணவமும் தழைத்து வளர்ந்தன. இவ்விரண்டு சமயங்களும் அன்பையும் ஜீவகாருண்யத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அப்போது தேய்ந்து போய்க் கொண்டிருந்த ஜைன, பௌத்த சமயங்களின் நல்ல அம்சங்களெல்லாம் சைவ - வைஷ்ணவ மதங்களில் ஏற்கப்பட்டிருந்தன. அவற்றுடன் சிவபக்தியும், கண்ணன் காதலும் சேர்ந்து தமிழ் நாட்டைத் தெய்வத் திருநாடாகச் செய்து வந்தன. அப்பர், சம்பந்தர் முதலிய சைவ சமயக் குரவர்களும், வைஷ்ணவ ஆழ்வார்களும் தெய்வீகமான பாடல்களைப் பாடி நாடெங்கும் பக்தி மதத்தைப் பரப்பி வந்தார்கள். சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும்…

தெரிய வேண்டும் ஆட்டிசத்தை -மருத்துவ தொடர்- பாகம் 22-சந்துருவுக்கு என்னாச்சு? – நூலுக்கான முன்னுரை.

எங்கள் மகன் ஒரு சிறப்பியல்புக் குழந்தை என்பது உறுதிபடத் தெரிந்ததுமே, இச்சமூகம் அவனை எப்படி எதிர்கொள்ளும் என்று கொஞ்சம்அனுமானித்திருந்தோம். அதற்கு மனதளவில் எங்களைத் தயார்படுத்திக் கொண்டுமிருந்தோம். சில நாட்களுக்கு முன்பு எங்கள் உறவினர் குடும்பம் ஒன்றுவீட்டிற்கு வந்திருந்தது. என் மகனுடன் விளையாடிக்கொண்டிருந்த அவர்களின் ஏழு வயது மகன், அவன் அழைத்தபோதில் திரும்பிடாத என்மகனைப்பார்த்து “டேய் லூசு..” என்றான். நேரடியாக இப்படி ஒர் அழைப்பை எதிர்கொண்டபோதில் அத்தனை தயாரிப்புகளையும் தாண்டி கொஞ்சம் மனம்கலங்கித்தான் போனோம்.
அவன் தனது சொற்களின் பொருள் அறிந்ததுதான் சொல்லி இருப்பானா? அச்சொற்களின் வரையரை தெரிந்துகொண்டு, எங்கள் மகனின் செயல்களை எடை போட்டு அதை வைத்து அவனாகவே, அப்படி அழைத்திருக்க முடியாதென்பது நிச்சயம். பெரியவர்களின் பேச்சில் தெரித்த ஒரு சிறுதுளியே அவன்வாயிலும் புழங்கியது என்பதும் வெளிப்படை. எனவே அவனை ஒன்றும் சொல்லவோ அவனது பெற்றோரிடம் இது குறித்துப் பேசவோ முயற்சிக்கவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் மட்டும் அடுத்து வந்த சில நாட்களுக்கு மனதுள் நெருடிக் கொண்டே இருந்தது.
என் சிறுவயதில் இதுபோன்ற மாற்…

பார்த்திபன் கனவு 46 -புதினம்- மூன்றாம் பாகம் - அத்தியாயம் 09 - விபத்தின் காரணம்.

அத்தியாயம் 09 - விபத்தின் காரணம்சக்கரவர்த்தியைக் குந்தவி வியப்புடன் நோக்கினாள். அவளுடைய மைதீட்டிய பெரிய கண்கள் அதிசயத்தினால் விரிந்து மலர்ந்தன. "இது என்ன அப்பா, இது? கூத்தாடிகள் அல்லவா வேஷம் போட்டுக் கொள்வார்கள்? இராஜாக்களுக்கு எதற்காக வேஷம் போடும் வித்தை தெரிய வேண்டும்" என்று கேட்டாள்.
"ஒரு தேசத்தைப் பரிபாலிப்பவனுக்குப் பல கலைகளும் தெரிந்திருக்க வேண்டும் குழந்தாய், முக்கியமாக வேஷம் போட்டுக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பிரஜைகளின் மனோபாவங்களை அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். இன்னும் சத்துருக்களைப் பற்றிய இரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாம். நாட்டில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம்...." என்று சக்கரவர்த்தி சொல்லி வருகையில் குந்தவி குறுக்கிட்டாள்.
"இப்போது எந்தக் குற்றத்தைத் தடுப்பதற்காக இந்த வேஷம் போட்டுக் கொண்டீர்கள்? நான் ஏதாவது குற்றம் செய்யப் போவதாகச் சந்தேகமா?" என்று சொல்லி முல்லை மலர்வதுபோல் பல்வரிசை தெரியும்படி நகைத்தாள்.
"சந்தேகமில்லை. குந்தவி! நிச்சயமாகப் பெரிய குற்றம் ஒன்று நீ செய்திருக்கிறாய். உன்னால் நேற்று இராத்திரி நாலுப…

கடைசிச் சடலம் -கதையல்ல-சிறுகதை.

எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளது-ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாளை. எனக்கு அப்போது ஆறு வயது. இலங்கை இராணுவத்தின் வாகன ரோந்து அணியினரால் சுடப்பட்டு வீதியில் கிடந்த அம்பி மாமாவை அப்பாவும் இன்னும் சிலருமாக வீட்டுக்கு கொண்டு வந்திருந்தனர். அவரது வயிறு பிளந்திருந்தது. பெரிய உடம்புக்காரனான அவர் ஒரு விலங்கைப்போல துடித்துக் கொண்டிருந்தார். வாகனம் பிடித்து மருத்துவமனை கொண்டு போகும் போது வழியிலேயே இறந்து போனார். அம்பி மாமாவின் முகம் மங்கலாகவே நினைவில் உள்ளது. எப்போதும் எனக்கு இனிப்பு வாங்கித் தருவதும்,பிளந்த வயிறும்,மரண ஓலமும், அவரிலிருந்து பெருகிய இரத்தத்தையும் தவிர வேறெதுவும் நினைவில் இல்லை. நான் வளரவளர நாட்டில் யுத்தமும் இனச் சிக்கலும் என்னைவிட வேகமாக வளர்ந்தன.
அவை மரணங்களை வளர்த்தபடியேயிருந்தன. மரணத்தின் சுவடுகள் என்னுடன் பயணித்தபடியேயிருந்தன. இதற்கு இரண்டு வருடங்களின் பின்னொருநாள் எங்கள் வீட்டுக்கருகில் இருந்த இந்தியன் ஆமி செக் பொயின்றுக்கு போராளிகள் குண்டெறிந்துவிட்டனர்.காலையிலிருந்து மாலைவரை ஊரை சல்லடை போட்டும் ஒருவரும் அகப்படவில்லை. இறுதியில் போராளிகளிற்கு சாப்பா…

பார்த்திபன் கனவு 45 புதினம் - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 08 - வேஷதாரி.

ஒற்றர் தலைவன் அவ்விதம் இராஜ, பரிவாரங்கள் வருவதைப் பொருட்படுத்தாமல் முன்னால் காஞ்சிப் பாதையில் சென்றதைக் குந்தவி, மகேந்திரன் இருவரும் கவனித்தார்கள்.
குந்தவியின் பல்லக்கும், மகேந்திரனுடைய குதிரையும் ஒன்றையொன்று ஒட்டியே சென்று கொண்டிருந்தன.
மகேந்திரனுடைய தோற்றத்தில், குந்தவியின் மென்மையும் வனப்பும், நரசிம்மவர்மரின் கம்பீரமும் வீரமும் கலந்து பொலிந்தன. அண்ணனும் தங்கையும் அச்சாலையில் பவனி வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.
ஓர் ஆண்டு காலமாக நரசிம்மவர்மருடைய ஸ்தானத்தில் யுவராஜா மகேந்திரன் இராஜ்ய பரிபாலனம் செய்து வந்தான். அப்படியிருந்தும், மேற்கூறிய குதிரை வீரன் இராஜ பரிவாரங்களைக் கண்டு ஒதுங்கி நிற்காமலும் மரியாதை செய்யாமலும் முன்னால் விரைந்து சென்றது எல்லாருக்குமே வியப்பை அளித்தது.
"அண்ணா! அதோ குதிரைமேல் போகிறானே அந்த வீரனைப் பார்த்தாயா? என்ன கம்பீரமான வடிவம்! அவன் யார் தெரியுமா?" என்று குந்தவி கேட்டாள்.
"எனக்குத் தெரியவில்லையே, தங்காய்! அவனுடைய தோற்றத்தில் இராஜ வம்சத்தின் களை காணப்பட்டது. நல்ல ஆஜானுபாகுவாவும் தோன்றினான். அவன் குதிரையைப் பார்! இதற்குள் எவ்வளவு தூரம் போ…

பெண்ணுக்குள் என்ன உண்டு -சிறுகதை -தமிழ்க்கவி.

எல்லையற்றுப் பரந்திருக்கும் இந்தப் பிரபஞ்சம் முழுதும் பெண்ணே உயர்ந்தவள் எனப் பறை சாற்றிய போதும்,
அதை நான் ஒரு போதும் நம்ப மாட்டேன்.
“ பெண் எனப்பட்டதே பெருமாயம்”
இன்றுவரை எந்தப் பெண்ணும் தன் மனதைத்திறந்ததில்லை. அதை ஒரு ஆண்தான் திறந்துபார்க்கிறான். காதலனாகவோ கணவனாகவோ உள்ள ஒருவரிடம் தன் அந்தரங்கத்தை வெளிவிட்டுவிடும் பெண்ணை, அவர்களது வாக்குமூலங்களை வைத்தே தானே அதுவாக எழுதியோ பேசியோ விடுகிறார்கள். யாரா?…ஆண்கள்தான்“ நான்தான் சொல்கிறேனே ஒரு பெண்ணாகப்பட்டவள் ஆசாபாசங்களும் கோப தாபங்களும்இச்சை கிரியை யோகம் ஞானம் எல்லாம் வாய்க்கப்பட்டவள்தான். .அதை அவள் வெளியே சொல்லவோ காட்டவோ முடிவதில்லை .அப்படி எக்குத்தப்பாக காட்ட முயன்றாலும் ஊரே அவளைத் தள்ளி வைத்துவிடும்.
முதலில் பெற்றோரே அவளைத் துாற்ற ஆரம்பிக்கிறார்கள். இப்ப எதுக்கு இந்தப் புராண மெல்லாம் என்றா கேட்டீங்க பின்ன சின்னப்பிள்ளை சின்னப்பிள்ளை யென்று எந்தக்கதையச் சொன்னாலும் காது கொடுத்துக் கேக்கிறீங்களா? இல்ல சொல்லத்தான் விடுறீங்களா? எத்தின நாளுக்கென்று தான் நாங்களும் அடக்கி வைக்கிறது. நானப்ப நாலாம் வேப்புக்கு வந்திட்டன் . பக்கத்துக் கடையில என்ன பொர…

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்- அறிவியல் - பாகம் 10.

பிரபஞ்சத்தின் எல்லையில் ஒரு புகைப்படம்

இரவு நேர வானை நீங்கள் அவதானித்து இருந்தால், பல உடுக்களை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ஒரு தெளிவான இரவு வானில், உங்களால் அண்ணளவாக 3000 தொடக்கம் 4000 வரையான உடுக்களை பார்க்கலாம். இந்த உடுக்கள் எல்லாம் எமது பால்வீதியில் இருப்பவைதான். கொஞ்சம் உன்னிப்பாக அவதானித்தால் அன்றோமீடா உடுப்பேரடையையும் வெறும் கண்ணால் பார்க்கலாமாம். அன்றோமீடா உடுப்பேரடை நமது பால்வீதியில் இருந்து கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. இதுதான் நமது பால்வீதிக்கு மிக அருகில் இருக்கும் உடுப்பேரடை.
இந்த இரவு வானம் ஒரு அற்புதமான விடயம், நீங்கள் இரவு வானில் பார்ப்பது வெறும் உடுக்கள் அல்லது பொருட்கள் மட்டுமல்ல, நேரத்தையும் தான். உண்மையிலேயே நீங்கள் பார்ப்பது ஒரு இறந்தகால வானத்தை. நமக்கு மிக அருகில் இருக்கும் புரோக்சிமா சென்ட்டரி என்னும் உடு, அண்ணளவாக 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அப்படியென்றால் இன்று நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது தெரியும் ப்ரோக்சிமா சென்ட்டரி உடு, 4.2 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். ஏனென்ற…