Skip to main content

Posts

Showing posts from April, 2013

‘கப்டன்’ -சிறுகதை- ஷோபாசக்தி.

மனுவேல் பொன்ராசாசாவிற்கு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூற்றோராம் வருடம் ஜனவரி மாதம் ‘கப்டன்’ பட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது. அந்தச் சம்பவம் பின்வருமாறு நிகழலாயிற்று:
ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூறாம் வருடம் ஜுன் மாதம் யாழ்ப்பாணக் கோட்டை விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. கோட்டைக்குள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர்கள் சிக்கியிருந்தார்கள். கோட்டைக்கான அனைத்து வழங்கல்களும் புலிகளால் துண்டிக்கப்பட்டன. சிறியரகக் ‘கிரேன்’களின் உதவியுடன் புலிகள் கோட்டை மதில்களில் ஏற முயன்றுகொண்டேயிருந்தார்கள். கடலிலிருந்து கோட்டைக்குள் படகில் செல்வதற்கான இரகசிய வழியொன்றுமிருந்தது. புலிகள் அந்த வழியால் சிறிய வள்ளங்களில் சென்று கோட்டைக்குள் புக முயன்றார்கள். புலிகளின் ஆட்லரிகள் கோட்டை மதில்களில் ஓட்டைகளைப் போட்டுக்கொண்டேயிருந்தன. இராணுவத்தினருக்கு அது சீவமரணப் போராட்டம். அவர்கள் கோட்டையைப் பாதுகாக்க இரவுபகலாகப் போராடிக்கொண்டிருந்தார்கள். ஜுலை மாதத்தில் கோட்டைக்குள் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும் வீச முயன்ற இராணுவ உலங்குவானூர்திகள் இரண்டு புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஓகஸ்ட் மாதத்தின…

தமிழ் ஒலிப்புமுறை - கட்டுரை.

தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. அதாவது தமிழில் எழுதுவதற்கும் உச்சரிப்பது அல்லது பலக்குவதற்கும் நேரடியான, வரையறை செய்யப்பட்ட, இயல்பான தொடர்பு இருக்கின்றது. ஆகையால் தமிழை ஒலிப்பியல் மொழி என்றும் வகைப்படுத்துவர். தமிழ் ஒலிப்புமுறை கட்டுரை தமிழ் மொழியில் இருக்கும் தனித்துவ ஒலி இயல்புகளை, வரையறைகளை விளக்குவதற்கும், தமிழைத் தெளிவாக உச்சரிப்பதில் இருக்கும் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதற்கும், தமிழைப் பேசுவதில் இருக்கும் பன்முகத் தன்மையைப் பட்டியலிடுவதற்கும், பிறமொழி ஆள் இடப் பெயர்களைப் பலக்குவதில் இருக்கும் சிக்கல்களை விளக்குவதற்கும் ஒர் அறிமுகக் கட்டுரையாக இருக்கும்.
தமிழ்ச் சொற்களில் இன்ன எழுத்துக்கள் முதலில் வராதவை, இன்ன எழுத்துக்கள் இறுதியில் வராதவை, இன்ன இன்ன எழுத்துக்கள் கூடி நிற்காதவை என்று பற்பல விதிகள் உள்ளன. பெருமுயற்சி இல்லாமலே சொற்களை ஒலிப்பதற்கு உதவும் விதிகள் தமிழில் உள்ளன. பாக், வீச், பாட், பத், துப், காற் என்று வல்லொலிகள் இறுதியில் அமைந்தால், ஒலிக்கும் முயற்சி அரிதாகின்றது. குற்றியலுகரம் சேர்த்து, பாக்கு, வீச்சு, பாட்டு, பத்து, காற்று என முயற்சியை எளிதாக்குவது தமிழ்…

கர்ணன்: பார்ப்பனீய சூழ்ச்சிகளின் அம்புகளைத் தன் மார்பில் தாங்கியவன்-வரலாறு.

ஒரு பேருந்துப்பயணம். பொழுதைக்கழிக்க பேருந்து வீடியோவில் எந்தப்படத்தைப் பார்க்கலாம் என்ற பலரின் பலவித ஆலோசனைகளுக்குப் பிறகு கர்ணனைப் பார்க்கலாம் என்ற ஒரு மனதான முடிவுக்கு வந்தோம். புதிய வண்ணங்கள் ஏறிய கர்ணன் திரைப்படம். 1964 - ல் வெளிவந்த திரைப்படம். சிவாஜி கணேசன், சாவித்திரி, தேவிகா, என்.டி.ராமாராவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
மிகவும் முக்கியமான விடயம், முழுப்படமும், கர்ணன் என்ற முழு குணச்சித்திரமும் பார்ப்பனர்களுக்கு எதிராக, எந்தவிதத் தயக்கமுமின்றி சொல்லப்பட்டிருப்பது தான்! பார்ப்பனீய மனம் எத்தகைய தந்திரமான சூழ்ச்சியான அமைப்புகளைக் கொண்டு இயங்கும் என்பதைத் தெளிவாகவும், நேர்த்தியான திரைக்கதை அமைப்பாலும் சித்திரித்திருக்கின்றார், படத்தின் இயக்குநர், பி. ஆர். பந்துலு. சமீபத்தில் அந்த படம் மீண்டும் திரைக்கு ஏறி, நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது! இவ்வெற்றிக்கு நிறைய காரணங்களைப் படத்தில் காணமுடிகிறது.
கர்ணன் என்னும் கொடையாளன், என்பவன் இம்மண்ணின், மக்களின் குறியீடாக இருக்கிறான். செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் நன்றியுணர்வு, இல்லையெனாது கொடுத்தல், மான உணர்வு, துன்பம் தாங்குதல், மதிநுட்பம், வெளி…

வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் றலி சைக்கிளும்--பத்தி.

என் தாத்தாவிடம் ஒரு வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் ஒரு றலி சைக்கிளும் இருந்தன என்று சாதாரணமாகக் கூற முடியாது. என் இரண்டு தாத்தாமாரிடமும் ஒவ்வொன்று இருந்தன என்பது மட்டுமல்ல ஊரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொன்று இருந்திருக்கும்.
எண்பதுகளின் ஆரம்பம்வரை இதுதான் ஊரில், எண்பதுகளின் நடுவில் றொபின் மிசினும் லுமாலா சைக்கிளும் வரத்தொடங்கியதும் வில்லியர்ஸ்/றலி கூட்டணி கொஞ்சம் ஆட்டம் காணத்தொடங்கியது உண்மைதான் என்றாலும் 80 களின் ஆரம்பத்தில் சிறுவனாக இருந்த என் ஞாபகத்தில் உறைப்பாக நிற்பது வில்லியர்ஸ்/றலி கூட்டணிதான்.
படத்தில் இருப்பதுதான் ஊரில் பாவனையிலிருந்த இறைப்பு மிசினின் அண்ணளவான படம். உள்ளூர்த் தொழில்நுட்பத்தில் இரண்டு சில்லுடன் கூடிய ஒரு சின்னத் தள்ளு வண்டியில் இதைப் பொருத்தியிருப்பார்கள். மேற்பக்கத்தில், நீளமான ஒரு (தண்ணீர்க்) குழாயை ஒரு சுருட்டுச் சுருட்டி பெரிய வட்டவடிவாகக் கட்டி வைத்த்ருப்பார்கள். குழாயைத் தாங்கி நிற்க அடியில் (base)இல் இருந்து சரியான விதத்தில் ஆக்கிய இரும்புக் கம்பிகளை இணைத்திருப்பார்கள். இத்தோடு உடன்பிறவாச் சகோதரம் மாதிரி ஒரு சின்ன வாளியும் பயணப்படும். வாளிக்கு…

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை-கட்டுரை .

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.
இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்கு…

கத்தரிக் குழம்பும் கருத்து முரண்பாடும்-பத்தி.

நான் கனடாவுக்கு வந்த புதுசு.
அவரும் நானும் தற்செயலாகவே அறைஞர்கள் ஆனோம்.
அவர் என்னைவிட ஒரு வருடம் முந்திக் கனடாவுக்குள் வந்து தரைதட்டியவர். அந்தத் தராதரம் மிக்க தகுதியின் அடிப்படையில் – அவரது பரிபாஷையில் – அவர் ஒரு பழைய காய்.
கனடா பற்றிய கற்கைநெறியில் அவரோடு தங்கி வாழ்ந்த ஆரம்பகால வாழ்க்கை எனக்கு ஒருவகையில் குருகுல வாசந்தான்! கண்ணைக் கட்டிக் கனடாவுக்குள் விடப்பட்டது போன்ற எனது பரிதாபகரமான அந்த நாட்களில் அவரது ஆலோசனைகளும் புத்திமதிகளும் – ஏன் குயுக்திகளும்கூட – எனது காதுக்குள் வேதமாய் ஓதப்பட்டன.
ஒரு கொஞ்ச நேரம் பேசக் கிடைத்தால் போதும், ‘ஐசே’ என்ற முகமனுடன் உபநியாசம் ஆரம்பமாகும். கனடிய அரசு, கனடிய மக்கள், கலை கலாசாரம், வாழ்க்கை முறை இத்தியாதிகளுடன் இந்த நாட்டு இமிகிறேஷன், வெல்ஃபெயர் சட்ட திட்ட வளைவு சுளிவுகள் யாவும் அந்த மனிதருக்கு அத்துப்படி! உலக நடப்புகளையெல்லாம் உப்புப் புளியிட்டுச் சுவைபடச் சொல்வார்.
‘உலகம் ஒரு பல்கலைக் கழகம். உலக அனுபவம்தான் ஐசே, பட்டப்படிப்பு.’ இதை ஒரு நாளில் குறைந்தது ஐந்து தடவையாவது அடித்துச் சொல்லி, என்னை அடிக்கடி பயமுறுத்துவார்.
பேசப்படாத வார்த்தைகளின் பெருமதி…