Skip to main content

Posts

Showing posts from 2014

எல்லோருக்குமிருக்கும் வானம்

எல்லோருக்குமிருக்கும் வானம்


இன்றைக்குத்தான் இப்பிடியொரு கண்றாவிக்குள்ள மாட்டுப் பட்டிருக்கிறன். இதைக் கருமம் என்று சொல்லவும் ஏலாதுதான். சிலர் சொர்க்கமென்று சொல்லுகினம். சரி ஏதோ ஒரு கண்றாவியென்று வைப்பம். அப்பிடியொரு சங்கதி பஸ்சுக்கு வெளியில நடந்து கொண்டிருக்குது. பஸ் யன்னலுக்குள்ளால வெளியில பார்க்கவே சங்கடமாயிருக்குது. எப்பவுமே யஸ் பயணங்களில நான் யன்னல்கரையோடதான் இருப்பன். நல்ல காற்றும் விழும். நாலு புதினத்தை பார்த்ததாகவும் முடியும். முக்கியமாக இன்னொரு காரணமுமிருக்குது. பஸ்சை இடையில மறிச்சு குழந்தைப் பிள்ளையயோட ஏறுற பொம்பிளையளுக்கு சீற் குடுக்க தேவையில்லை. ஆனால் யன்னல்கரையுடன் இருந்ததினால் இன்றைக்கு இந்த கண்றாவியை பார்க்க வேண்டியிருக்கிறது.
உண்மையில நான் ஒரு இரண்டும் கெட்டான் நிலைமையிலதானிருந்தன்.வெளியில நடக்கிற கூத்தைப் பார்க்கவுமேலாமல் கிடக்குது. சரி. பார்க்காமலிருப்பமென்றால் அதுவும் முடியாமலிருக்குது. இருபது இருபத்திரண்டு வயசு மதிக்கத்தக்க ஒரு பொடியனும் பெட்டையும் கீழே நிற்கினம். பஸ் ஸ்ராண்டின் கடைசிக் கட்டடத்துடன் ஒட்டியபடி இந்த பஸ் நிற்கிறது. பஸ்சுக்கும் கட்டடத்திற்குமிடையிலிருந்த …

தெரிய வேண்டும் ஆட்டிசத்தை ( மருத்துவ தொடர் , பாகம் 10)

ஆட்டிசம் – பத்தியமும், ஒவ்வாமையும்


பொதுவாகவே ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சில பத்திய முறைகளை பலரும் சொல்லி வருகிறார்கள். அதே போல, ஒவ்வாமை என்பதும் இக்குழந்தைகள் சந்திக்கும் பெரிய சவால்களில் ஒன்று. அவற்றைப் பற்றி சிறு அறிமுகத்தை எளிமையாக கொடுக்க முயன்றிருக்கிறேன்.
GFCF டயட்

சில ஆய்வாளர்கள் ஆட்டிசத்திற்கும் ஜீரணக்கோளாறுகளுக்குமான தொடர்புகளை ஆய்ந்து வருகிறார்கள். க்ளூட்டின் (gluten) மற்றும் கேசின் (casein) எனப்படும் இரு வகைப் புரோட்டீன்களை ஜீரணிக்க சிரமப்படும் இவர்களின் குடல் அப்புரோட்டீன்களை சரியாக ஜீரணமாகாத நிலையில் ரத்தத்தில் கலக்க விடுவதால் அது மூளையை பாதிக்கிறது என்பது ஒரு சாராரின் வாதம். இது எல்லாத் தரப்பு ஆராய்ச்சியாளர்களாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. ஆனால் நிறைய் பெற்றோர்கள் இவ்வகை டயட்டின் பின் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் இருப்பதாகக் கூறுகின்றனர். க்ளூட்டின் என்பது கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புரோட்டீன். கோதுமையை வாயில் வைத்து மென்று இருக்கிறீர்களா? சவ்வு மிட்டாய் மாதிரி ஒரு பதம் வருமே, அப்படி ஆன நிலையில் வெளிப்பட…

பார்த்திபன் கனவு 24 ( இரண்டாம் பாகம், அத்தியாயம் 14, "வயதான தோஷந்தான்!")

அத்தியாயம் 14, "வயதான தோஷந்தான்!"


அந்த நாளில் தமிழகத்தில் சைவ சமயமும் வைஷ்ணவ சமயமும் புத்துயிர் பெற்றுத் தளிர்க்கத் தொடங்கியிருந்தன. இவ்விரு சமயங்களிலும் பெரியார்கள் பலர் தோன்றி, திவ்ய ஸ்தல யாத்திரை என்ற விஜயத்தில் தமிழ் நாடெங்கும் யாத்திரை செய்து, பக்திச்சுடர் விளக்கு ஏற்றி, ஞான ஒளியைப் பரப்பி வந்தார்கள். அமுதொழுகும் தமிழில் கவிதா ரஸமும் இசை இன்பமும் ததும்பும் தெய்வீகப் பாடல்களை இயற்றி வந்தார்கள்.
அந்நாளில் தமிழகத்தில் வாழ்ந்து வந்த சைவப் பெரியார்களுக்குள்ளே திருநாவுக்கரசர் இணையற்ற மகிமையுடன் விளங்கினார். மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்திலேயே பிரசித்தி அடைந்து, தமிழகத்தின் போற்றுதலுக்கு உரியவராகிவிட்ட அப்பர் சுவாமிகள் விக்கிரமன் நாடு கடத்தப்பட்டபோது, முதிர்ந்த மூப்பின் காரணமாக அதிகமாய் நடமாடவும் இயலாத தள்ளாமையை அடைந்திருந்தார். அந்தத் தள்ளாத பிராயத்திலும் அவர் ஸ்தல யாத்திரை சென்றிருந்து சமீபத்தில் திரும்பி வந்திருக்கும் செய்தியைக் குந்தவிதேவி அறிந்தாள். அப்பெரியாரைத் தரிசிப்பதற்காகக் காஞ்சியில் பிரசித்தி பெற்று விளங்கிய சைவ மடாலயத்துக்கு ஒருநாள் அவள் சென்றாள்.
முதிர்ந்து க…

" வேங்கையின் மைந்தன் " முன்னுரை

" வேங்கையின் மைந்தன் " முன்னுரை 


“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தைய ராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதிலிருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ”
- பாரதி 


ஆம்; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தமிழ்த் திருநாடு
பெற்றிருந்த பேற்றை நினைக்கும் போது நம்முடைய மனம் பொங்கிப்
பூரிக்கின்றது. நெஞ்சு பெருமிதத்தால் விம்முகின்றது. ‘எந்தாய் வாழ்க!
எந்தாய் வாழ்க!’ என்று உள்ளம் குளிர வாய் வாழ்த்தத் துடிக்கின்றது.
கங்கை வளநாட்டிலே தமிழரின் புகழ் மண்டி வளர்ந்தது. கடல் கடந்த
கடாரத்திலும், ஸ்ரீவிஐயத்திலும், பழந்தீவு பன்னீராயிரத்திலும், ஈழத்தின்
எண்திசையிலும் அவர் பெருமையே பேசப்பெற்றது. தமிழகத்தின் தனிக்
கொடியாகச் சோழர்களின் புலிக்கொடி இந்தப் பாரெங்கும் பட்டொளி வீசிப்
பறந்த நம்முடைய மாபெரும் பொற்காலம் அது.
பிற்காலச் சோழர்களில் தனித்தன்மை பெற்றுத் தன்னிகரில்லாமல்
திகழ்ந்த மாவீரர் இராஜராஜ சோழர், வீரத்தில் வேங்கையாகவும் அரசியல்
பெருந்தன்மையில் சிங்கமாகவும் விளங்கியவர். வேங்கையின் மைந்தன்
இராஜேந்திரரோ தம் தந்தை அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் மிக
உயர்ந்த மாளிகையை எழுப…

பார்த்திபன் கனவு 22( இரண்டாம் பாகம், அத்தியாயம் 12, ராணியின் துயரம்)

அத்தியாயம் 12, ராணியின் துயரம்


சிவனடியார் படகிலிருந்து இறங்கியதும் அருள்மொழி அவரை நமஸ்கரித்து விட்டு நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்களில் நீர் ததும்பிற்று.
"சுவாமி! விக்கிரமன் எங்கே?" என்று சோகம் நிறைந்த குரலில் அவள் கதறி விம்மியபோது, சிவனடியாருக்கு மெய்சிலிர்த்தது. பொன்னன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். மரங்களின் மீதிருந்த பறவை இனங்களும் அந்தச் சோகக் குரலைக் கேட்கச் சகிக்காதவை போல் சிறகுகளை அடித்துக் கொண்டு பறந்து சென்றன.
"அருள்மொழி! இது என்ன பைத்தியம்? உன்னுடைய பதி உனக்கு என்ன சொல்லிவிட்டுப் போனார்? நீ வீரத்தாயாக இருக்க வேண்டுமென்று அவர் சொன்ன கடைசி வார்த்தையை மறந்துவிட்டாயா? இப்படியும் தைரியத்தை இழக்கலாமா? வா, அரண்மனைக்குப் போய்ச் சாவகாசமாகப் பேசலாம்" என்றார் சிவனடியார்.
மாஞ்சோலைகளுக்கிடையே அமைந்திருந்த அழகிய பாறை வழியாக எல்லாரும் வசந்த மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். ஒரு காலத்தில் எவ்வளவு குதூகலமும் கொண்டாட்டமுமாகயிருந்த வசந்த மாளிகை இப்போது பொலிவிழந்து சூனியமாகக் காணப்பட்டது. அரண்மனை ஊழியர்களின் முகங்களும் கலையின்றிச் சோகம் நிறைந்து தோன்றின.
மாளிகை முன் மண்டப…

பார்த்திபன் கனவு 23 ( இரண்டாம் பாகம், அத்தியாயம் 13, சிவனடியார் கேட்ட வரம்)

அத்தியாயம் 13, சிவனடியார் கேட்ட வரம்

ராணி மூர்ச்சித்து விழுந்ததும், சற்று தூரத்தில் நின்ற தாதிமார் அலறிக் கொண்டு ஓடி வந்து அவளைச் சூழ்ந்தனர். சிவனடியார் "நில்லுங்கள்" என்று அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, தமது கமண்டலத்திலிருந்து தண்ணீர் எடுத்து அவளுடைய முகத்தில் தெளித்தார். உடனே மந்திர சக்தியால் எழுந்தது போல், அருள்மொழி கண்விழித்துச் சிவனடியாரைப் பார்த்தாள்.
"சுவாமி! எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?" என்று மெலிவான குரலில் கேட்டாள்.
"உனக்கு ஒன்றுமே நேரவில்லை அம்மா! உன் மகனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவனுக்கு ஒரு குறைவும் நேராது என்றும், நிச்சயம் திரும்பி வருவான் என்றும் சொன்னேன்" என்றார் சிவனடியார்.
அருள்மொழி சற்று சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு, "இல்லை; ஏதோ ரொம்பவும் வேதனை தரும் செய்தி ஒன்றைச் சொன்னீர்கள்!" என்றாள்.
"சக்கரவர்த்தியின் மகளை உன் மகன் பார்க்க நேர்ந்தது என்று கூறினேன். அந்தச் செய்தி உனக்குச் சந்தோஷம் அளிக்குமென்று எண்ணினேன்..."
"ஆமாம் நினைவு வருகிறது, ஆனால் அது சந்தோஷச் செய்தியா? சோழநாட்டின் மிகப்பெரிய விரோதி யாரோ, எ…

பார்த்திபன் கனவு 21( இரண்டாம் பாகம், அத்தியாயம் 11, பொன்னனின் சந்தேகம்)

( இரண்டாம் பாகம், அத்தியாயம் 11, பொன்னனின் சந்தேகம்)


பொன்னி ஆற்றின் வெள்ளத்தின் மீது மற்றொரு நாள் பாலசூரியனின் பொற் கிரணங்கள் படிய, நதி பிரவாகமானது தங்கம் உருகி வெள்ளமாய்ப் பெருகுவது போலக் காட்சி தந்தது. அந்த பிரவாகத்தைக் குறுக்கே கிழித்துக் கொண்டும், வைரம், வைடூரியம் முதலிய நவரத்தினங்களை வாரித் தெளித்துக் கொண்டும், பொன்னனுடைய படகு தோணித் துறையிலிருந்து கிளம்பி வசந்த மாளிகையை நோக்கிச் செல்லலாயிற்று. படகில் ஜடா மகுடதாரியான சிவனடியார் வீற்றிருந்தார். கரையில் பொன்னனுடைய மனைவி நின்று, படகு போகும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


நதியில் படகு போய்க் கொண்டிருந்தபோது, பொன்னனுக்கும் சிவனடியாருக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது.
"பொன்னா! கடைசியில் இளவரசருடன் எவ்வளவு பேர்தான் ஓர்ந்தார்கள்?" என்று சிவனடியார் கேட்டார்.
"அந்த அவமானத்தை ஏன் கேட்கிறீர்கள், சுவாமி! ஆகா! அந்தக் கடைசி நேரத்தில் மகாராணிக்குச் செய்தி சொல்லும்படி மட்டும் இளவரசர் எனக்குக் கட்டளையிடாமற் போயிருந்தால்...."
"என்ன செய்து விட்டிருப்பாய், பொன்னா? பல்லவ சைன்யத்தை நீ ஒருவனாகவே துவம்சம் செய்திருப்பாயோ?"
&qu…