Skip to main content

Posts

Showing posts from August, 2013

வாங்கோ வாழைக்குலை பழுக்கப் போடுவம்!-பத்தி.

செயற்கையான இராசயனப் பசளைகள் மூலம் உருவாக்கப்படும் காய் கறி வகைகளை விட; இயற்கைப் பசளை மூலம் உருவாக்கப்படும் காய் கறிகள் தான் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது நீண்ட காலம் வாழுகின்ற ஆயுளைக் கொடுக்கும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு. இதனை நன்கு உணர்ந்த எம் முன்னோர்கள் தம் வீட்டில் சின்னதாக ஒரு வீட்டுத் தோட்டம் வைத்து,தமக்கு வேண்டிய காய் கறிகளை பெற்றுக் கொண்டார்கள். சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வியாபார நோக்கில் இராசயனப் பதார்த்தங்களின் மூலம் பயிரிடப்பட்டவையாக இருக்கும்.
நம்மூர்களில் கிராமப் புறங்களில் வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றிலிருந்து நாம் குளிக்கும் போதும், ஆடைகளைத் துவைக்கும் போதும் வெளியேறுகின்ற கழிவு நீரானது விரயமாகாத வண்ணம் கிணற்றடிக்கு அருகாக ஒரு சிறிய வீட்டுத் தோட்டத்தினை வைத்திருப்பார்கள் எம்மவர்கள். இது இலங்கை, இந்தியா மற்றும் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கிணறு உள்ள வீடுகளில் பொதுவான ஓர் விடயமாகவும் இருக்கும். இந்த வீட்டுத் தோட்டத்தில் வாழை, கத்தரி,வெண்டிக்காய்,பயற்றங்காய், பூசணிக்காய், மரவள்ளி, பச்சைமிளகாய், பசளிக் கீரை ஆகியவற்றினை அதிகளவில…

தாலாட்டுப் பாடத்தெரியுமா?-பத்தி.

தாயின் கருவறையில் இருக்கும்போது அவளின் இதயத்துடிப்பையே தாலாட்டாகக் கேட்டுவந்த குழந்தை மண்ணுலகிற்கு வந்தவுடன் அந்த பாட்டுக் கேட்காமல் திருதிருவென விழிக்கிறது. சில நேரம் அழுகிறது. குழந்தையைத் தாய் தூக்கியவுடன் அழுகை நின்றுபோகிறது. குழந்தையைத் தூக்கிக்கொண்டே வைத்திருக்கமுடியுமா? அதனால் தான் பழந்தமிழர் கண்டறிந்தனர் தாலாட்டு என்னும் சீராட்டை!
நான் சிறுவனாக இருந்தகாலத்தில் பல வீடுகளிலும் தாலாட்டுப் பாடும் ஓசை கேட்டிருக்கிறேன்.. நான் வளர வளர தாலாட்டின் பரிணாமமும் வளர்ந்துவந்திருக்கிறது.
முதலில் திரைப்படப்பாடலைத் தாலாட்டாகப் பாடினார்கள்.. அடுத்து வானொலி...தொலைக்காட்சி...சிடி..டிவிடி..அலைபேசி... என இந்தக் காலத்துக் குழந்தைகளும் 'இவர்கள் பாடும் தாலாட்டுக்கு இதுவே பரவாயில்லை' என்று எண்ணித் தூங்கிப்போகின்றன.
இதோ நானறிந்த தாலாட்டு..
ஆராரோ ஆரிராரோ என் கண்ணே உறங்கு..
ஆரடித்தார் ஏனழுதாய் அடித்தாரைச் சொல்லி அழு கண்ணே, என் கண்மணியே
அடிச்சாரைச் சொல்லி அழு ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..
கொப்புக்கனியே, கோதுபடா மாங்கனியே வம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே …

ஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்

ஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள் 

01 கத்தரி வெருளி

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா! - நின்று
காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்?

கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
காவல் புரிகின்ற சேவகா!
எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்?

வட்டமான பெரும் பூசினிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!

தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!

பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ?
வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோ…

மனிதனின் மரணத்திற்குப் பின் நடப்பவை -கட்டுரை.

மரண விளிம்பில் 9 அனுபவங்கள் 
ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.
1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்:
ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.
2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம் :
கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.
3) அமைதியும் வலியின்மையும் :
மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்…

மிருகக் காட்சி சாலை-சிறுவர் இலக்கியம்.

அம்மா அப்பா அழைத்துச் சென்றார் அங்கே ஓரிடம் அங்கிருந்த குயிலும் மயிலும் ஆடத் தொடங்கின பொல்லா நரியும் புனுகுப் பூனையும் எல்லாம் இருந்தன குட்டி மான்கள் ஒட்டைச்சிவிங்கி கூட நின்றன குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்து குர் குர் என்றது யானை ஒன்று காதைக் காதை ஆட்டி நின்றது முதலைத் தலையைத் தூக்கிப் பார்த்து மூச்சு விட்டது கரடி கூட உறுமிக் கொண்டே காலைத் தூக்கிற்று சிங்கம் புலி எல்லாம் கண்டேன் கண்டும் பயமில்லை சூரனைப் போல் நின்றிருந்தேன் சிறிதும் அஞ்சவில்லை சென்று வந்த இடம் உனக்குத் தெரியவில்லையா? மிருகக் காட்சி சாலைதானே வேறு ஒன்றுமில்லை!

நன்றி : http://paadal.blogspot.fr/
தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம்-வரலாறு .

அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி கோயில்.
இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது.
கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும் சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் கோயிலின் பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன.
இது முதலாம் இராஜசிங்கன் (1581-1592) கட்டிய கோயில் எனக் கூறப்படுகிறது. கண்டி இராச்சியத்தை ஆண்ட இராஜசிங்க மன்னன் இந்து தெய்வங்களில் நம்பிக்கை கொண்டிருந்தான். குறிப்பாக சிவ வழிபாட்டில் தன்னைக் கூடுதலாக ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
தனது இராச்சியத்தை தக்க வைத்துக்கொள்ளவும் பாதுகாப்புக்காகவும் கிராமிய தெய்வ வழிபாட்டு முறைகளையும் செய்துள்ளான். இந்நிலையிலேயே சீதாவாக்கை ஆற்றை அண்மித்ததாக பைரவர் கோயிலை அமைக்கத் திட்டமிட்டான்.
மக்களின் ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும் மட்டுமல்லாது காவல் தெய்வத்தின் அவசியமும் இந்தக் கோயில் கட்டப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.
அதற்காக இந்தியாவிலிருந்து நிபுணர் ஒ…

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்?-கட்டுரை.

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன..
பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்? உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்?
பெண் இல்லாத உலகை நினைத்துக் கூடப் பார்க முடியாது. தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக என ஒவ்வொருவர் வாழ்விலும் பெண் தவிர்கமுடியாதவளாகவே இருக்கிறாள் ஆயினும்…
ஏன் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற கூறினர்..?
சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஓர் சான்று,
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கர்க்கு உரைத்தது.
(தலைவியை இயல்பாக ஓரிடத்தல் தலைவன் பார்தலுக்கு இயற்கைப் புணர்ச்சி என்று பெயர்.)
“சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை கான யானை அணங்கி யாஅங்கு இளையள், முளைவாள் எயிற்றள் வளையுடைக் கையள் - எம் அணங்கியோளே“
(குறுந்தொகை- 119- சத்திநாதனார்.)
சிறிய வெண்மையான பாம்பின் குட்டியானது, காட்டு யானையை வருத்தியது போல இளமையுடையவளும், மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களைக் கொண்டவளும், வளையைக் கையில் அணிந்த ஒருத்தி என்னை வருந்தச் செய்தாள் என்று தலைவன் ப…

இந்து மதம் எங்கே போகிறது?மெய்யியல் - பாகம் 07 - 10.

07 பிராமணர்கள் உருவாக்கிய கல்யாண சடங்குகள்.

`தாலி’ வந்த கதை. கல்யாணங்களில் பிராமணர்கள் எக்கச்சக்கம் சடங்குகளை கொண்டு வந்தனர்.
"நிச்சயதாம்பூலம்” “காசியாத்திரை” “ஊஞ்சலாட்டுதல்” “திருஷ்டி சுத்தி போடுவது” “ஆரத்தி எடுப்பது” “குளிப்பாட்டு” “புடைவைச் சடங்கு” ..... இன்னும் இருக்கு!!!
கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?
`இதோ பாரடா... நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன். அதனால் அவள் உனக்குரியவள் தான். உன்னுடன் தான் வாழ வேண்டும் அவள்’ என இரண்டு பேரையும் சேர்த்து வைத்தது தீர்ப்பு. இஃது களவியல் என்றால்... தமிழர்களின் இன்னொரு சிறப்பு, சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள்.
காதலை அஃதாவது கற்பியலை.``யாயும் ஞாயும் யாராகியரோஎந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...’’நானும் நீயும் யார் யாராகவோ இருந்தோம். என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள் என்றும் தெரியாது. நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது தெரியவில்லை.
ஆனாலும்... இந்த அற…