Skip to main content

Posts

Showing posts from June, 2015

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்-அறிவியல் - பாகம் 09.

பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்

பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெருவெடிப்பு, ஒரு அசாத்திய நிகழ்வு. மிக மிக சக்திவாய்ந்த, மிகப்பிரகாசமான ஒரு வெடிப்பாக அது இருந்தது. அவ்வளவு பெரிதாக அது வெடித்திருப்பினும், இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பெரும்பாலும் ஒரு நுட்பமான அம்சமாகவே இருக்கிறது.
பெருவெடிப்பின் பின்னர், நீண்ட காலத்திற்கு இந்தப் பிரபஞ்சம் இருளிலேயே இருந்தது, அங்கே விண்மீன்கள் இல்லை, ஒளியில்லை. அந்த ஆரம்பக்காலப் பிரபஞ்சம், இருண்ட, சத்தமற்ற ஒரு வெறுமையாக இருந்தது. இந்தப் பிரபஞ்சம் தோன்றி அதில் முதல் விண்மீன்கள் உருவாக அண்ணளவாக 100 மில்லியன் வருடங்கள் எடுத்து! அதுவரை பிரபஞ்சத்தில் இருந்ததெல்லாம் வெறும் வாயுக்கள் மட்டுமே.
பிரபஞ்சத்தில் முதன்முதலில் உருவாகிய விண்மீன்களை நாம் பார்த்ததில்லை. அவை நாம் தோன்ற முன்னரே பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. இருந்தும் பல வானியலாளர்கள் இந்த விண்மீன்கள் பற்றி ஆய்வு செய்துள்ளனர். பெருவெடிப்பின் போது உருவாகிய பருப்பொருளைக் கொண்டே இந்த விண்மீன்கள் உருவாகியிருக்கவேண்டும் என அவர்கள் கருதுகின்றனர்.
விண்மீன்கள் உருவாக முன்னர், இந்தப் பிரபஞ்சத்தில் ஹைட்ரோஜன்…

பார்த்திபன் கனவு 40 -புதினம் - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 03 - மாரப்பன் புன்னகை .

மூன்றாம் பாகம் - அத்தியாயம் 03 - மாரப்பன் புன்னகை .
விக்கிரமன் செண்பகத்தீவில் இருந்த காலத்தில் தாய் நாட்டையும், தாய்நாட்டில் உள்ளவர்களைப் பற்றியும் அடிக்கடி சிந்தனை செய்வான். அருள்மொழி, சிவனடியார், பொன்னன், வள்ளி, காஞ்சி நகர்ப் பெண் ஆகியவர்கள் அவனுடைய உள்ளத்தில் இடைவிடாமல் தோன்றுவார்கள். அவர்களுக்கிடையில் மாரப்ப பூபதியும் சில சமயம் அவனுடைய நினைவுக்கு வருவான். அப்போது விக்கிரமனுடைய உள்ளமும் உடலும் அருவருப்பினாலும் அவமானத்தினாலும் சுருங்கிப்போகும். சித்தப்பா தன்னை வஞ்சித்து நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாரென்று சிராப்பள்ளி மலையில் அவன் புலிக்கொடியை உயர்த்த முயன்ற அன்றைத் தினமே வெளியாகிவிட்டது. அந்த முயற்சிக்கு மாரப்ப பூபதி பூரண உதவி செய்வதாய் வாக்களித்திருந்ததற்கு மாறாக அவர் அச்சமயம் அருகில் வராமலே இருந்துவிட்டது மாத்திரமில்லை - அவரே முன்னதாகப் பல்லவ சேனாதிபதிக்குத் தகவல் தெரிவித்தவர் என்பதும் அவனைச் சிறைப்படுத்திக் காஞ்சிக்குக் கொண்டு போன வீரர்களின் பேச்சிலிருந்து தெரிந்துவிட்டது.
ஆகையால், மாரப்ப பூபதியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் விக்கிரமனுடைய உள்ளம் கசந்ததோடு, நாவும் கசந்தது. சோ…

தெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர்- பாகம் 21 ஆட்டிசம் : அடுத்து என்ன?

இன்று உலக அளவில் குழந்தைகளைப் பாதிப்புக்குள்ளாக்கும் குறைபாடுகளில் ஆட்டிசமும் ஒன்று. ஆட்டிசம் என்பது ஒரு நிலை என்று இப்போது சொல்கிறார்கள். அதாவது, இந்த நிலைக்குள் இருப்பவர்கள் வெளியேயும் வரலாம், வராமலும் போகலாம். ஆனால், ஆட்டிசம் ஏன் வருகிறது? எப்படி இதை வராமல் தடுப்பது அல்லது கர்ப்ப காலத்திலேயே கண்டறிய முடியுமா என்று அப்பாவியாக நாம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருக்கிறோம். மருத்துவ உலகில் ஒரு பகுதியினர் இதுமாதிரியான நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ‘இப்படியாக இருக்கலாம்’ என்றும் ‘அப்படியாக இருக்கலாம்’ என்றும் அறுதியிட்டுச் சொல்லமுடியாத பல ஆய்வுகளின் முடிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால் நாம், இப்படியான விவாதத்திற்குள் போகாமல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகப்பட்டுச் சொல்லும்போது, அடுத்ததாக பெற்றோரான நாம் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் இங்கே பார்ப்போம்.
ஒப்புக்கொள்ளுதல் அவசியம்!
எந்தவொரு பெற்றோருக்கும் தன்னுடைய குழந்தைக்கு ஒரு குறை இருக்கிறது என்று அறிய வரும்போது, பெருவாரியானவர்களின் மனம் ஒப்புக்க…

பார்த்திபன் கனவு 39 -புதினம் மூன்றாம் பாகம் - அத்தியாயம் 02 - சந்திப்பு .

மாமல்லபுரத்தில் கலைத் திருவிழா வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. இவ்வருஷம் சக்கரவர்த்தி திருவிழாவுக்கு விஜயம் செய்யவில்லை. சில காலமாகச் சக்கரவர்த்தி ஏதோ துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகவும், அதனால் தான் கலைவிழாவுக்கு வரவில்லையென்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். வேறு சிலர், சக்கரவர்த்தி கொஞ்ச காலமாகப் பல்லவ நாட்டிலேயே இல்லையென்றும், அவருடைய குமாரன் இலங்கையிலிருந்து திரும்பிய பிறகு அவனிடம் இராஜ்ய பாரத்தை ஒப்புவித்துவிட்டு மாறுவேஷத்துடன் தேச யாத்திரை போயிருக்கிறார் என்றும் சொன்னார்கள்.
ஆனால், சக்கரவர்த்தியின் குமாரன் மகேந்திரனும், குமாரி குந்தவி தேவியும் இவ்வருஷம் கலைவிழாவுக்கு விஜயம் செய்திருந்தபடியால், மாமல்லபுர வாசிகள் சிறிதளவும் உற்சாகம் குன்றாமல் விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள். கலைவிழாவின் காட்சிகளையும், கற்பாறைகளில் செதுக்கிய அற்புதமான சித்திரங்களையும், ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இசை விருந்து, நாட்டியம், கூத்து ஆகியவைகளையும் பார்த்து அனுபவித்துக் கொண்டு கப்பலிலிருந்து இறங்கிய நமது இரத்தின வியாபாரி குறுக்கும் நெடுக்குமாகப் போய்க்கொண்டிருந்தான்.
அவனுடைய முகத்தில் அபூர்வமான கிளர்ச…

கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்தகுடி தமிழனா?-கட்டுரை.

தமிழகத்தில் கற்காலம் என்பது சுமார் கி.மு. 15,10,000 தொடங்கி கி. மு 1,000 வரை நீடித்த காலமாகும். தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் சுமார் 130 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகள், மேற்பரப்பாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றின் காலங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் செய்யப்பட்ட பல அகழ்வாய்வுகளிலிருந்து வெளி வந்த செய்திகள் இக்கால அளவுகளின் முறையை மாற்றி அமைக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளன. இப்பணியில் வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். முதலில் புரூஸ்புட் என்ற நிலவியல் ஆய்வாளர் 1863ல் சென்னையில் பல்லாவரம் அருகே சில கற்கருவிகளைக் கண்டெடுத்து, இவை கற்கால மக்களின் ஆயுதங்கள் என்று கருத்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து உள்நாட்டு ஆய்வாளர்களும் களஆய்வு மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டனர். புரூஸ்புட், பர்கிட், எச்.டி. சங்காலியா, வி.டி. கிருஷ்ணசாமி போன்ற பலர் இப்பணியில் ஈடுபட்டனர். 1916ல் புரூஸ்புட் தருமபுரி பகுதியிலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் சில கற்கருவிகளை கண்டெடுத்தார். இதன் பின்னர் வந்தவர்கள் இவற்றைக் கல்லாயுதங்கள் என்று கருத்து தெரிவித்தனர்.…

தெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் - பாகம் 20 -ஆட்டிஸம் எனும் குறைபாடு.

ஐக்கிய நாட்டு சபை 2007-ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2-ஆம் தேதி உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கோடிக்கணக்கானோரைப் பாதிக்கும் இந்தக் குறைபாட்டைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும், இந்தக் குறைபாட்டை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்கும்படியும் உலக நாடுகளை ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது.
அன்றைய தினம் சிகாகோ, நியூயார்க் போன்ற முக்கிய நகரங்களின் சரித்திரப் புகழ் பெற்ற கட்டடங்கள், புராதனச் சின்னங்களில் நீல நிற விளக்குகள் ஏற்றப்படுகின்றன. தில்லியில் ஹுமாயூன் கல்லறை, குதுப்மினார் போன்ற இடங்களில் நீல நிற விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காகப் பாடுபடும் தொண்டு நிறுவனங்கள் ஆட்டிஸத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்க பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன.
ஆட்டிஸம் என்பது பிறவியிலேயே தோன்றி, பாதிக்கப்பட்டவரின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் மூளை சம்பந்தப்பட்ட குறைபாடு. ஆட்டிஸத்தின் அறிகுறிகள் பிறந்த உடனேயே காணப்படலாம் அல்லது சிறிது காலம் சாதாரண வளர்ச்சிக்குப் …