Skip to main content

Posts

Showing posts from February, 2016

பார்த்திபன் கனவு 55 புதினம் -மூன்றாம் பாகம் - அத்தியாயம் 18 - பராந்தக புரத்தில்.

சூனியமான அந்த மகேந்திர மண்டபத்தைப் பொன்னன் உள்ளும் புறமும் பலமுறை சுற்றிச் சுற்றித் தேடினான். மகாராஜா எப்படி மாயமாய்ப் போயிருப்பார் என்று சிந்தனை செய்தான். நேற்றுச் சாயங்காலம் காட்டு வெள்ளத்தில் கரை சேர்த்தது முதல் நடந்தனவெல்லாம் ஒருவேளை கனவோ, என்றுகூட அவனுக்குத் தோன்றியது. இதற்கிடையில் வைத்தியனும் வண்டிக்காரனும் அவனைத் தொந்தரவு செய்யத் தொடங்கினார்கள். தன்னிடம் ஆபத்துக் காலத்தில் செலவுக்காக வைத்திருந்த பொற்காசுகளில் ஒன்றை அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினான்.
இளவரசருக்கு ஜுரம் முற்றி ஜன்னியின் வேகத்தினால் எழுந்து ஓடிப் போயிருப்பாரோ என்று பொன்னன் மனத்தில் தோன்றிய போது, பகீர் என்றது. அவனும் பித்தம் கொண்டவனைப் போல் அங்குமிங்கும் அலையத் தொடங்கினான். குடுகுடுவென்று நதிக்கரைக்கு ஓடுவான். மறுபடியும் மகேந்திர மண்டபத்துக்கு வந்து ஆசையுடன், நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொள்ள, உள்ளே எட்டிப் பார்ப்பான். மனம் கலங்கியிருந்த படியால் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் விக்கிரமன் படுத்திருந்த வைக்கோலை எடுத்து உதறுவான். பிறகு வெளியிலே வந்து, உறையூர் சாலையோடு கொஞ்ச தூரம் போவான், மறுபடியும் திரும்பி வருவா…

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்-அறிவியல் - பாகம் 15- கருந்துளைகள் 01 - 04.

கருந்துளைகள் 01 – முரண்படும் இயற்கை விதிகள்
பூமியில் இருந்து ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு விண்வெளியை அடையவேண்டுமெனில் அது ஒரு செக்கனுக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கவேண்டும். அவ்வாறானா வேகத்தில் பயணித்தே நமது விண்கலங்கள் விண்வெளியை அடைகின்றது.
ஒரு கல்லை எடுத்து, வான்நோக்கி வீசி எறிந்தால், அக்கல் சிறிது தூரம் மேலெழும்பி, மீண்டும் கேழே விழுந்துவிடும். நாம் எறியும் வேகத்தைப் பொறுத்து அது மேலெழும்பும் தூரம் வேறுபடும். ஆக நீங்கள் எறியும் கல் மீண்டும் திரும்பி விழாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதை ஒரு செக்கனுக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு எறியவேண்டும். இவ் வேகமானது விடுபடு திசைவேகம் (escape velocity) என அழைக்கப்படும்.
கோள்களின் திணிவுக்கு ஏற்ப அவற்றின் விடுபடு திசைவேகம் மாறுபடும், உதாரணமாக நமது சந்திரனின் விடுபடு திசை வேகம் செக்கனுக்கு 2.4 கிலோமீட்டர் ஆகும். இதையே சூரியனது விடுபடு திசைவேகத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தல், அதன் விடுபடு திசைவேகமானது ஒரு செக்கனுக்கு 617.5 கிலோமீட்டர் ஆகும்.
ஜான் மிச்சல் என்ற ஆசாமி 1783 இல் ஹென்றி காவன்டிஷ் என்ற ராயல் சொசைட்ட…

தேங்காய் மகத்மியம் - பத்தி - லெ முருகபூபதி.

மக்களுக்கும் தேசத்தின் பொருளாதாரத்திற்கும் வழிபாட்டிற்கும் பயன்பட்ட தேங்காய் சாபமிடும் பொருளாய் அரசியல்வாதிகளின் கையில் சிக்கிவிட்டதா ? தெருத்தேங்காய் வழிப்பிள்ளையாருக்கு ! திருட்டுத்தேங்காய் சாபத்திற்கா ?
முருகபூபதி
00000000000000000000000000000
பயன்தரும் மரங்களின் பெயர்களையும் எழுதி, அதில் ஒன்றைத்தெரிவுசெய்து , அது தரும் நல்ல பயன்களைப்பற்றி எழுதச்சொன்னார் ஆசிரியர். இந்தச்சம்பவம் நான் ஐந்தாம் வகுப்பு படித்த காலத்தில் நடந்தது. எனது வகுப்பில் பெரும்பாலான மாணவ மாணவிகள் தென்னை மரம் பற்றியே எழுதியதற்குக்காரணம், எங்கள் ஊரில் அந்த மரங்கள்தான் அதிகம். நாம் பனைமரத்தை படங்களில்தான் பார்த்திருந்த காலம். தென்னையின் பயன்பாடு பற்றி நிறையச் சொல்லமுடியும். ஆனால், அந்த பால்யகாலத்தில் எமக்குத் தெரிந்ததையே எழுதினோம்.
தெங்கு ஆராய்ச்சி நிலையம், தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை, தேங்காய் துருவல் (Desiccated Coconut) தொழிற்சாலை என்பன எங்கள் ஊரில் இருந்தன. தென்னந்தோட்ட உரிமையாளர்கள் பலர் தமக்குள் சங்கமும் வைத்திருந்தனர். ஆனால் , இவைபற்றிய எந்த ஞானமும…