Skip to main content

Posts

Showing posts from June, 2014

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ?-மெய்யியல் - பாகம் 10.

பௌத்த மதத்தைப் பரப்ப இலங்கையிலிருந்து வந்த மகேந்திரர்!

மகேந்திரர் தமிழ் நாட்டில் வந்து பௌத்த மதத்தைப் போதித்ததாக இலங்கை நூல்கள் கூறவில்லை. பண்டைக் காலத்தில் தமிழர் இலங்கைமேல் படையெடுத்துச்சென்று அடிக்கடி அந்நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தபடியாலும், அடிக்கடி தமிழருக்கும் சிங்களவரான இலங்கையருக்கும் போர் நிகழ்ந்துவந்தபடியாலும், மகேந்திரர் தமிழ் நாட்டில் பௌத்தமதத்தைப் போதித்த செய்தியை இலங்கை நூல்கள் பகைமை காரணமாகக் கூறாமல் விட்டன என்று உவின்சென்ட் ஸ்மித் என்னும் ஆசிரியர் தமது பழங்கால இந்தியா என்னும் நூலில் கூறுகின்றார். இவர் கருத்தையே ஆராய்ச்சியாளரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். வட இந்தியாவிலிருந்து தென் இலங்கைக்கு வந்த மகேந்திரர் கடல் வழியாகக் கப்பலில் பிரயாணம் செய்திருக்கவேண்டும் என்றும், அவ்வாறு கடல் பிரயாணம் செய்தவர் இலங்கைக்குச்செல்லும் வழியில் உள்ளதும் அக்காலத்துப் பேர் பெற்று விளங்கியதுமான காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருக்கக் கூடுமென்றும், அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் கட்டப் பட்டவைதாம் அந்நகரத்தில் இருந்தனவாகத் தமிழ் நூல்களில் கூறப்படும் இந்திர விகாரைகளென்றும் மேல் நாட்டுக் கீழ் ந…

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்- அறிவியல் - பாகம் - 07 - பிரபஞ்சவியல் -பாகம் 16 -பாகம் 20.

சென்ற தொடரில், ஒளி வெற்றிடத்தில் பயணிப்பது நியூட்டனின் முதலாவது இயக்க விதிக்கு புறம்பாக இருப்பதனால் பிரபஞ்சம் முழுதும் ஈதர் (Ether) எனும் ஊடகம் கண்ணுக்குத் தெரியாமல் நிரம்பியிருப்பதாகவும் ஒளி அதனூடாக அல்லது அதன் சார்பாக பிரபஞ்சத்தில் பயணிக்கிறது என்று கருத்துருவாக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தோம். மேலும் இந்த ஈதர் சார்பாக வெளியில் வெவ்வேறு இடங்களில் பயணிக்கும் ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒளி வித்தியாசமான வேகங்களில் அவர்களை நோக்கி வரும் என்றும் எனினும் ஈதர் சார்பாக எப்போதும் ஒளியின் வேகம் நிலையானது என்றும் கருதப்பட்டது. இதேவேளை பூமி இந்த ஈதர் ஊடகம் சார்பாக சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் பயணிக்கும் போது, சூரிய ஒளி பூமியை நோக்கி நேராக வரும் திசையில் அளக்கப் படும் அதன் வேகம் சூரிய ஒளி நேரடியாக அல்லாமல் வலது புறமாக குறிப்பிட்ட கோண வித்தியாசத்தில் பூமியை நோக்கி வரும் போது அளக்கப் படும் அதன் வேகத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
ஈதர் (கணணி வடிவமைப்பு)
1887 ஆம் ஆண்டு அல்பேர்ட் மிக்கெல்சன் (Albert Michelson) மற்றும் எட்வார்ட் மோர்லே (Edward Morley) எனும் இரு பௌதிகவியலாளர்களும் இணைந்து …

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா? மெய்யியல் - பாகம் -09 .

மணிமேகலை இயற்றப்பட்ட காலம் : ஓர் சர்ச்சை

மணிமேகலை நூலின் காலம்:
மணிமேகலையின் காலத்தை ஆதாரத்துடன் ஆராய்ந்து எழுதுவதென்றால் அது பெரியதோர் தனி நூலாக முடியும். ஆதலின், மிகச் சுருக்கமாக எழுதுவோம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை என்பதே பலரின் கொள்கை. ஆயினும், சிலர் மட்டும், ஐயப்பாட்டிற்கிடமான சில ஆதாரங்களைக் காட்டி, இதனைப் பிற்காலத்து நூல் என்று கூறுவர். ஈண்டு, கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மணிமேகலை எழுதப் பட்டதென்பதற்கான ஆதரங்களை முதலில் எடுத்துக்காட்டிப் பின்னர், இதனைப் பிற்காலத்து நூல் என்று கூறுவோரின் கூற்று ஆதாரமற்றதென்பதை விளக்குவோம்.
1. ‘மணிமேகலை’யை இயற்றிய ஆசிரியர் சீத்தலைச்சாத்தனாரும் ‘சிலப்பதிகார’த்தை இயற்றிய இளங்கோ அடிகளும் நண்பர்களென்பதும், சிலப்பதிகாரக் காவியத்தின் தொடர்ச்சியே மணிமேகலைக் காவியம் என்பதும் யாவரும் ஒப்புக்கொண்ட உண்மை. அன்றியும், இளங்கோ அடிகளின் தமையனான சேரன் செங்குட்டுவனுக்கும் சீத்தலைச் சாத்தனார் உற்ற நண்பர். கண்ணகியின் வரலாற்றினைச் சீத்தலைச்சாத்தனார் சொல்லக் கேட்டுக் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி அவளுக்குக் கோயி…

இந்து மதம் எங்கே போகிறது?- மெய்யியல் - இறுதிப்பாகம்.

வணக்கம் வாசகர்களே !! இத்துடன் இந்த நீண்ட தொடரை நிறைவுக்கு கொண்டுவருகின்றேன். இறை எதிர்ப்புக்கு நான் ஆதரவானவனா ? என்றால் "இல்லை" என்பதே எனது பதில். அடிப்படையில் நான் இறைபக்தி உடையவன் . ஆனால் எதையும் கண்ணை மூடிக்கொண்டு இறைவனை வழிபடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இங்கு இறைவன் என்பதை "காலம்" என்றும் பொருள் கொள்ளலாம் . சமயம் , இறைவன் என்ற எனது தேடலில் தாத்தாச்சாரியார் ஐயாவின் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எனக்குக் கைகொடுத்தன. இந்த தொடரில் தாத்தாச்சாரியார் சொல்கின்ற எல்லா கருதுத்துக்களிலும் நான் உடன் படவில்லை . ஆனால் அவர் இந்துசமயத்தில் கூறுகின்ற வர்ணாசிரமத்தையும் , பெண்ணடிமையையும் , பூராணக் கதைகள் கூறுகின்ற ஆபாசச் செய்திகளிலும் , கடல் கோளினால் உள்வாங்கப்பட்ட லெமூரியா கண்டத்தின் ஆதிக் குடிகளான திராவிடர்களின் (சைவர்களின்) முழுமுதல் கடவுளான சிவன் எப்படி வடக்கிற்கு ஆரியர்களால் மாற்றப்பட்டார் என்பதிலும் முற்றுமுழுதாகவே உடன் படுகின்றேன் . அவர் கூறிய ஏனைய கருத்துக்களை அவர் வாழ்ந்த கட்டங்களில் இருந்த சமய அரசியலில் விட்டு விடுகின்றேன். இந்த தொடருக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங…