Skip to main content

Posts

Showing posts from 2013

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா? மெய்யியல்.

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ??
ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த மதம் மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது. இப்போதைய தமிழர், ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததென்பதை முற்றும் மறந்துவிட்டனர்; அது இவர்களுக்குப் பழங்கதையாய், கனவாய் மறைந்துவிட்டது. எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பல நூற்றாண்டாகத் தமிழகத்தில் பரவியிருந்த பௌத்த மதம், தமிழ் மொழியிலும் தன் செல்வாக்கைச் செலுத்தியிருக்க வேண்டுமன்றோ? பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள், அல்லது உதவிகள் யாவை? பௌத்தர் தமிழ் மொழியில் இயற்றிய நூல்கள் எவை? அவற்றின் வரலாறு என்ன? இவற்றை அறியக் கருதி யாம் செய்த ஆராய்ச்சியின் பயனே இந்நூலாகும். பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினை மட்டும் ஆராய்வதே எமது முதல் நோக்கமாயிருந்தது.
பின்னர், இந்த ஆராய்ச்சி, பௌத்தம் தமிழ் நாட்டில் வந்ததும், வ…

மரணம் என்பது ஒருமுறை தானா!-பத்தி.

வாழ்க்கையில் நிச்சயக்கப்பட்ட இரு தருணங்கள் ஒன்று பிறப்பு. மற்றொன்று இறப்பு. எப்பொழுது பிறப்பு என்று நிகழ்கிறதோ அப்பொழுதே இறப்பு என்ற ஒன்று நிகழப் போவது உறுதியாகிறது. 
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நமக்கு எவ்வளவு மரண போராட்டங்கள். எனது உயிர் எனது கடமைகளைச் செய்து முடிப்பதற்குள் போய்விடுமோ! ஏதோ ஒரு விதத்தில் காலன் நமது உயிரைப் பறித்து விடுவானோ! என்ற பயம் நமக்குள் வருவது இயல்பு தான்.
எனக்கொரு கேள்வி நாம் வாழ்க்கையில் ஒருமுறை தான் மரணத்தை தழுவுகிறோமா என்பதே!
ஒருவர் ஒரேடியாகவா மரணம் அடைகிறார்?
நாம் ஒரேயடியாக மரணம் அடைவதில்லை ஒவ்வொரு நாளும் மரணம் அடைகிறோம் என்று ரோசி ஃபிலிப் என்பவர் கூறுகிறார்.
நம் காதலை ஒருவர் புறக்கணிக்கும் போது நாம் கொஞ்சம் செத்து போவதில்லையா!
நம்மை ஒருவர் அலட்சியப்படுத்தும் போது நாம் சிறிது சிதைந்து விடுவதில்லையா!
நமக்கு நெருக்கமானவர் ஒருவர் இறக்கும் போது நமக்குள் ஒரு பகுதி அவரோடு இறந்து போவதில்லையா!
ஓர் இடத்தைவிட்டுப் பிரிகிற போதும், நட்பைவிட்டு நகருகிற போதும், நெருங்கியவர்கள் தளர்கிற போதும் ஏற்படும் இழப்பு என்னும் வெற்றிடம் ”இறப்பு” எனும் வகையைச் சார்ந்தது என்று…

பட்ட மரமும் பாகல் கொடியும்- நீதிக்கதை

கொல்லைப்புறத்து வீட்டுத் தோட்டம் புதுப்பொலிவுடன் பூத்துக் குலுங்கியது.அருகிருந்த கிணற்றுநீரை அள்ளிப் பருகிய கத்தரி, தக்காளி, வெண்டி, பச்சைமிளகாய் வகைக் காய்கறிச் செடிகொடிகள் யாவும், சுத்தமான பச்சையாடை கட்டிய சுந்தரிகளாய்ச் சுடர்ந்து மிளிர்ந்தன.
பலவண்ணப் பூக்களும், பச்சையிளம் பிஞ்சுகளும், காலமறிந்து பழுக்கக் காத்திருக்கும் காய்களும் தாங்கிய தாவரங்கள் தத்தமது தாய்மையைப் பறைசாற்றியபடி!
தேன் தேடும் வண்டுகளும், மகரந்தமணி பூசும் வண்ணத்துப் பூச்சிகளும், பழம் தின்னும் பசுங்கிளிகளும், காக்கை குருவிகளும் அத்தோட்டத்தின் காலைநேர அழைப்பில்லா விருந்தாளிகள்!
கவனிப்பாரற்றுக் கிடந்த பின்வளவைக் காய்கறிக் களஞ்சியமாக்கியவன், இன்று தோட்டத்தின் வடகிழக்கு மூலையில் ஒருகணம் துயர்தோயத் தரித்து நிற்பதைக்கண்ட கத்தரிச் செடிக்கு காரணம் புரியவில்லை.
கூடநின்ற தக்காளிச் செடியொன்று குறிப்பறிந்து கூறியது – ‘ஓரிரு மாதங்களுக்கு முன்னொருநாள் – தெருக்கோடியில் தேடுவாரற்றுக் கிடந்த பால்மறவாப் பாலகன் போல் – பாகற் செடியொன்று அநாதரவாய் அவ்விடத்தே துளிர்த்து நின்றதைப் பார்த்திருந்தாயல்லவா?
அருமை பெருமையாய் வந்துமுளைத்த பாகற் செட…

தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல்-பத்தி.

நாள்தோறும் தற்கொலைகள் பெருகிவருகின்றன. பசி, நோய், பணம், காதல், ஏமாற்றம், அவமானம், மனநலபாதிப்பு என தற்கொலைக்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் எல்லோருக்குமான உயிர்வலி ஒன்றாகத்தான் உள்ளது.
மனத்தடுமாற்றம் என்பது யாவருக்கும் பொதுவானது. அப்போது மனதை தடுத்து மாற்றம் செய்யும் ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அவர் தற்கொலையைத் தடுக்கும் ஆற்றலுடையவராவார். அந்த ஆற்றல் யாருக்கெல்லாம் இருக்கும்..?
நம் எல்லோருக்கும் அந்த ஆற்றல் உண்டு. ஆனால் நாம் தான் அதனைப் பயன்படுத்துவதில்லை.
நம் மனம் தடுமாறும்போது..நாம் என்ன எதிர்பார்க்கிறோம்..? நம் குறையைக் கேட்க யாராவது இருக்கமாட்டார்களா? என்பது தானே. அதைதானே தற்கொலை செய்துகொள்பவர்களும் எதிர்பார்க்கிறார்கள்!
மனத் தடுமாற்றத்தின் போது அருகே ஒருவர் இருந்து கொஞ்சம் காதுகொடுத்து அவர்களின் மனதைத் திடப்படுத்தினால்போதும்.ஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரம் இருக்கிறதா?
தொழில்நுட்ப வளர்ச்சி....தொலைவிலிருக்கும் மனிதர்களையும் எதிரில் பார்த்துப் பேசத் துணைநிற்கிறது..ஆனால்.. அருகிலிருக்கும் மனிதர்களையோ மறக்கச்செய்துவிட்டது.
அதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் இப்போதெல…

இந்து மதம் எங்கே போகிறது????????? (23- 28)

பகுதி 23. பிராமணர்களை திருத்த‌ வேத சாஸ்திர பரிபாலன சபை

“வாரும் தாத்தாச்சாரியார்... நன்னா இருக்கீரா? உம்மைப் பத்தி சிஷ்யாளெல்லாம் சொன்னா... தர்ம பிரச்சாரம் பண்ணிண்டே இருக்கீராமே... உடம்பை பார்த்துக் கோங்காணும்....”....என முதன் முதலாய் என்னிடம் வார்த்தைகளை மென்மையாக வீசினார்
சங்கராச்சாரியார்.சனாதனத்துக்கு நம்மளால முடிஞ்சதை பண்ணணுமே ஸ்வாமி... அதான் அங்க இங்கேன்னு அலைஞ்சாலும் விடாம தர்மப் பிரச்சாரத்துலேயே இருக்கேன். என நான் பதில் சொல்ல.... எங்களது சபை சமாச்சாரங்களைப் பற்றி ரொம்ப கேள்விகள் கேட்டார் மகா பெரியவர்.

நானும் சளைக்காமல் போன, வந்த இடங்கள், பிரசங்க அனுபவங்கள் பற்றியெல்லாம் ஏற்ற இறக்கங்களோடு அவரிடம் விளக்கினேன்.

எனது அனுபவங்களையெல்லாம் சிலாகித்துக் கேட்ட மகா பெரியவர்... ‘ரொம்ப நல்லது பண்ணின்டிருக்கீர்... இன்னோர் நாளைக்கு விஸ்தாரமா பேசுவோம்’ என விடை கொடுத்தார். அவரின் பல வினாக்களுக்கு விடை கொடுத்த நானும் கிளம்பி வந்தேன்.

நான் சங்கராச்சாரியாரைப் பார்த்து விட்டு வந்ததில் எங்கள் சமூகக்காரர்களுக்கிடையிலேயே ஒரு சின்ன சலசலப்பு.

என்ன ஓய்... நாமெல்லாம் சுத்த ஆச்சார்ய புருஷாள்... ஆனா இவர் சங்கராச்ச…

காதலின் எடையை அறிந்துகொள்ள...- பத்தி.

காதல் வாழ்வின் பொருளை உணரச் செய்கிறது!  காதல் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத ஓடம் !!
காதல் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெரும்பாலும் காதலின் உயரத்தையும்,அகலத்தையும், ஆழத்தையும் திருமணத்துக்கு முந்தைய காலப்பகுதியிலேயே அதிகமாகப் பாடியுள்ளனர்.
காதலித்தல் என்பது திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து வருகிறோம். இதனையே கவிஞர் கண்ணதாசனும்...
காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும் வரை கல்யாணம் என்பது எதுவரை? கழுத்தினில் தாலி விழும் வரை பெண்ணுக்கு இளமை எது வரை? பிள்ளைகள் பிறந்து வரும் வரை
கழுத்தினில் தாலி விழுந்த பின்னும் தன் மனைவியைக் காதலிப்பவர்கள் உலகில் எத்தனைபேர்?
பெண்ணின் இளமையை பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பின்னும் விரும்புபவர்கள் எத்தனை போ்..?
திருமணத்துக்கு முந்தைய காதல் : திருமணத்துக்குப் பின்வரும் காதல் ஆகிய இரண்டினுள் சிறந்தது எது? என்ற கேள்வியே காதலை எடைபோடவல்ல சிறந்த வழியாகும். இன்றைய காதல்,
“எனக்காக தாஜ்மகால் கட்டுகிறேன் என்றான் ஒரு தாலி மட்டும் கட்டு என்றேன் ஷாஜகானைக் காணவில்லை! “
என்றொரு புதுக்கவிதை உண்டு. 
இன்றைய காதல் இப்படித்தான் இருக்கிறது.
உடல் சார்ந்த காதலுக்கு, ஆ…

தமிழ் மொழிக்கு எழுத்து உருவ மாற்றம் தேவையா?- கட்டுரை.

இன்று எம்மிடையே வழக்கில் உள்ள தாய் மொழியாம் தமிழ் மொழியின் எழுத்து உருவங்களில் மாற்றங்கள் அத்தியாவசியமானவையா ?? இல்லையா ?? என்பது ஓர் விவாதத்துக்குரிய பொருளாகின்றது . பிராமி எழுத்துக்களில் தொடங்கிய தமிழின் வரிவடிவம் , வட்டெழுத்தில் ஊடறுத்து பாய்ந்து இன்று யூனிகோட்டில் வரை பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளபொழுதும் , வரிவடிவங்களில் தமிழ் தனது தனித் தன்மையை இழந்திருக்கவில்லை . அனால் வரிவடிவத்தில் மாற்றங்கள் வந்தாலே தமிழ் மொழி மேலும் வளர்ச்சி அடையும் என்ற கருத்துக்களும் இப்பொழுது எழ ஆரம்பித்திருக்கின்றன . அண்மையில் வெளிவந்த ஓர் ஆய்வுக்கட்டுரை இந்த விடையத்தைத் தொட்டுச் செல்கின்றது. அதை உங்களுடன் பகிருகின்றேன் கள உறவுகளாகிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் .
நேசமுடன் கோமகன்
0000000000000000000000000000
நாகரிகத்தின் தொடர்ச்சி , சிந்தனையோட்டங்களின் தொடர்ச்சி ஆகியன மொழியை மட்டும் சார்ந்தது அல்ல, மொழியுடன் பின்னிப்பிணைந்து இருக்கும் அதன் சொந்த வரிவடிவத்தையும் சார்ந்தது. ஒன்றாய் இருந்தத் தமிழ் , மூன்றாய் நான்காய், ஐந்தாய் , இன்று திராவிட மொழிக் குடும்பமாய் மாறியதற்கு காரணம் வெவ்வேறு காலக் க…

பிரபஞ்ச கானம்-சிறுகதை -மௌனி.

அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது.

அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான்.
சிற்சில சமயம், இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்லும் நேர்பாட்டையைக் கொள்ளும்போது, தன்னை மறந்து அவன் மனம், ஆனந்தம் அடைவதுண்டு. மற்றும் சிற்சில சமயம், தன்னால் கவலைகளைத் தாங்க முடியாது என்று எண்ணும்போது, தன்னைவிடக் காற்று அழுத்தமாகத் தாங்கும் என்று எண்ணித் தன் கவலைகளை காற்றில் விடுவான். ஆனால் சூல் கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதே போன்று, அவை காற்றில் மிதந்து பிரிந்து, உலகையே கவலைமயமாக்கிவிடும். எட்டாத …