Friday, May 31, 2013

பிரான்ஸை அச்சுறுத்தும் கொடூரமான பயங்கரவாதம்!

பிரான்ஸை அச்சுறுத்தும் கொடூரமான பயங்கரவாதம்!


 மிக அதிகளவிலான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக ஃபிரான்ஸ் இருந்துவருகிறது. பல தசாப்தகாலமாகவே, ஃபிரான்ஸை பயங்கரவாதிகள் அச்சுறுத்தி வருகின்றனர்! அத்தோடு பல நாசகாரவேலைகளையும் செய்துவருகின்றனர். உண்மையில், பயங்கரவாதம் எனும் நோய் பீடிக்கப்பட்ட நாடாகவே நாம் ஃபிரான்ஸைக் கருத வேண்டும்!
ஃபிரெஞ்சு மக்கள் மட்டும் அன்றி, உலக மக்கள் அனைவரதும் இதயங்களிலும், நீங்கா இடம்பிடித்திருக்கும், உலக அதிசயங்களில் ஒன்றாகிய ஈஃபில் டவரை தகர்ப்போம் என்று, பல தடவைகள் பயங்கரவாத கூட்டம் அச்சுறுத்தியுள்ளதோடு, பல தடவைகள் அதற்கு முயன்றும் உள்ளது. எதையாவது தகர்ப்பது, அடித்து நொறுக்குவது, நாசமாக்குவது...... இதைவிட்டால் வேறு என்ன தெரியும் அவர்களுக்கு?

இதுவரை பயங்கரவாதத்தால், ஃபிரான்ஸ் எதிர்கொண்ட நெருக்கடிகள், சவால்கள் ஏராளம்! அவற்றில் இருந்து சில உங்கள் பார்வைக்காக....!

01. எயார் ஃபிரான்ஸ் விமானக்கடத்தல் -1994: 

1994 டிசம்பர் 24 ம் தேதி, 220 பயணிகளுடன் அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட ஏர் ஃபிரான்ஸ் 8969 விமானத்தை, ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் கடத்தினர். அந்த விமானத்தை ஈஃபில் டவர் நோக்கி, தாழப் பறந்து சென்று மோதுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் திறமை மிக்க, ஃபிரென்சு வீரர்கள், அந்த விமானக் கடத்தலை முறியடித்துவிட்டனர்! இதில் மூன்று பயணிகள் கொல்லப்பட்டனர்! இது பற்றிய முழுமையான தகவலை கிளிக் இங்கே செய்து படியுங்கள்!

02. அபு தோஹா, ஸ்லிமன்ஸ் கல்ஃபோயி, ரபா காதர்:

இந்த மூன்று பன்னாடைகளும் யார் என்றால், அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த மூன்று இஸ்லாமிய பயங்கரவாதிகள்! இப்போது ஃபிரெஞ்சு சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்! காரணம் இவர்கள் செய்த புனிதமான ஒரு செயல்! - அது என்னவென்றால், ஃபிரான்ஸின் ஸ்டாஸ்பேர்க் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தைக் குண்டு வைத்துத்துத் தகர்க்க முயன்றதுதான்! அதுமட்டும் தான் இவர்கள் செய்த குற்றம்

என்றில்லை! இவர்களின் வண்டவாளங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள் - லிங்

03. கலீத் கெல்கல்: 


இந்த அறிஞர் யார் என்றால், இவரும் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதிதான்! 1971 ஏப்ரல் 28 ல் பிறந்த இவரின் வீர வரலாறு கேட்டால், உங்களுக்குப் புல்லரிக்கும்! 1995 ம் ஆண்டில் பாரிஸ் நகரில் மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்து, பலர் கொல்லப்பட்டார்கள்! ஏராளமானோர் காயமுற்றார்கள்! - இந்த பாதக செயலைச் செய்தது / செய்வித்தது இவரே தான்! முதலாவது குண்டு - நிலக்கீழ் ரெயில் நிலையமாகிய பாரிஸ், சென் மிஷல் ரெயில்வே நிலையத்தில் 1995 ஜூலை 25 ல் வெடித்தது - இதில் 8 பேர் கொல்லப்பட 75 க்கு மேற்பட்டோர் காயமுற்றனர். அடுத்ததாக “வெற்றி வளைவு” எனப்படும், நெப்போலியன் கட்டிய இராணுவ நினைவுச் சின்னம் அருகே, ஆகஸ்ட் 17 ம் தேதி, அதே ஆண்டில் வெடித்த குண்டு காரணமாக 17 பேர் வரையில் காயமடைந்தனர். மூன்றாவது குண்டு லியோன் நகருக்கு அருகில் வெடித்து, அதில் 14 பேர் காயமடைந்தனர்! இந்த அரிய சாதனைகளைச் செய்தவர்தான் கலித் கெல்கல்! அவருக்கும் லிங் தருகிறேன்! படியுங்கள் - லிங்

04. நிஸார் த்ராபெல்ஸி:

இவர் யார் என்றால், இவர் ஒரு ஃபுட் பால் ப்ளேயர்! பேசாம ஃபுட் பால் விளையாடிக்கிட்டு இருக்கவேண்டியதுதானே? எதுக்கு உடம்புல குண்டைக் கட்டிக்கிட்டு, பாரிஸ் நகரில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை தாக்கப் போகணும்? அதான் பயங்கரவாதி ஆச்சே? சும்மா இருப்பானா என்ன? இவரு அடிக்கடி ஆஃப்கானிஸ்தான் போயி, ஒசாமா பின்

லாடனையும் சந்திச்சாராம்! இப்ப பெல்ஜியம் சிறையில் கம்பி எண்ணிக்கிட்டு
இருக்காரு! இவன பத்தி படிக்கணுமா? கிளிக்குங்கோ - லிங்

05, பள்ளிச் சிறார்களுக்கு கொள்ளி வைத்த பாவி - முஹம்மது மெஹ்ரா:மேலே படத்தில் இருக்கும் பன்னாடை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்! கடந்தவருடம் ஃபிரான்ஸின் தூலிஸ் நகரில் உள்ள குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குள் புகுந்து, ஈவு இரக்கமே இல்லாமல் 7 பேரை சுட்டுக் கொன்ற வெறியன்! இவனது பேரைப் பாருங்கள் “முஹம்மது மெஹ்ரா” ! - இந்த கொலை வெறி தாக்குதல் பற்றி இங்கே படியுங்கள் - லிங்

மேலே இருப்பவை வெறும் ட்ரெயிலர்தான்! மெயின் பிக்‌ஷர் அல்ல! இப்படி ஃபிரான்ஸ் நாட்டை இஸ்லாமிய பயங்கரவாதம் எந்தளவுக்கு அச்சுறுத்துகிறது என்று பாருங்கள்!

பிரான்ஸிலே பல உலகப் பெறுமதி மிக்க சொத்துக்கள் உள்ளன! அவற்றையெல்லாம் இந்தப் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பது உண்மையிலேயே மிகப் பெரும் சவாலாகும்! எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே தெரியாத நிலை! அதுமட்டுமல்ல, போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல் ஆட்கடத்தல் என்று இன்னும் பல சமூக குற்றங்களை இந்த பயங்கரவாதிகள் ஃபிரான்ஸிலே இழைத்துவருகிறார்கள்! - அதிலும் எம்மவர்களிடம், கையடக்கத்தொலைபேசிகளை, பணத்தைப் பறிப்பதில் இவர்களை விஞ்ச யாராலும் முடியாது! இந்த பயங்கரவாத கும்பல்களிடம் எம்மவர்கள் பறிகொடுத்த நகைகள், பணங்கள், கையடக்கத்தொலைபேசிகளுக்கு அளவே இல்லை!அதுபோக, இங்கே இஸ்லாமிய பெண்கள் விபச்சாரம் பற்றி தனி பதிவுதான் எழுத வேண்டும்! விபச்சார உலகில் கொடிகட்டிப் பறப்பது - பல ஆயிஷாக்களும், பல ஷாகிராக்களும் தான் - தனிப்பதிவு விரைவில் வரும்!! இவ்வாறு ஃபிரான்ஸை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை ஒடுக்க, ஃபிரென்சு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது! - ஃபிரெஞ்சு அரசின் இந்த நடவடிக்கைகக்கு நாமும் கைகொடுப்போமாக!

http://www.tamilaath...log-post_6.html

Wednesday, May 15, 2013

இலங்கையில் சோழர் ஆட்சி

இலங்கையில் சோழர் ஆட்சி

பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியம் 24 வருடங்கள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது.கி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராஜராஜன் எஞ்சியிருந்த ருகுணு இராச்சியத்தையும் படைகளை அனுப்பிக் கைப்பற்றினான். இதன் மூலம் முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த தாக்குதலின் போது ருகுணு இராச்சியத்தின் மன்னனான ஐந்தாம் மகிந்தன், இராணிகள் மற்றும் அரச ஆபரணங்களை சோழர்படை கைப்பற்றியது. சோழரினால் கைது செய்யப்பட்ட ஐந்தாம் மகிந்தன் 1029 இல் சோழர் சிறையில் மரணமானான்.

ஐந்தாம் மகிந்தனின் மரணத்தைத் தொடர்ந்து ருகுணுவின் சிங்களப்படையினர் சோழர்படைகளுக்கு எதிராகப் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். சோழர் ருகுணுவைத் தாக்கி ஐந்தாம் மகிந்தனைக் கைப்பற்றியபோது அவனது இளவரசனான காசியப்பன் தப்பித்து ஓடிவிட்டான். ஐந்தாம் மகிந்தனின் மறைவிற்குப் பின்னர்
றுகுணுவில் இருந்து ஆரம்பித்த சிங்கள சோழ எதிர்ப்பிற்கு 12 வயது நி்ரம்பிய காசியப்பன் தலைமை வகித்தான்.

காசியப்பன் பற்றி அறிந்து கொண்ட இராஜேந்திர சோழன் தனது மகன் இராசாத்தி இராசன் தலைமையில் கி.பி.1041-ல் ஒரு படையை அனுப்பி காசியப்பனை எதிர்த்தான். இந்தப் போரில் காசியப்பன் உயிரிழந்ததுடன் சோழர்படை பெரும் வெற்றி ஈட்டியது. இதேவேளை சூளவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட வரலாற்றுத் தகவல்கள் ஆறுமாதம் தொடர்ந்த இந்த யுத்தம் இரண்டு சிங்களத் தளபதிகள் தலைமையில் இடம்பெற்றதாகவும் இந்த யுத்தம் காரணமாக சோழர்கள் படை ருகுணுவில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது. இதன் பின்னர் முதலாம் விக்கிரமபாகு எனும் பெயரில் காசியப்பன் தனது அரசை ருகுணுவில் அமைத்துக்கொண்டான் எனவும் சூளவம்சம் கூறுகின்றது.

தொடர்ந்து தனது படைப்பலத்தைப் பெருக்கியதுடன் மக்களை தனக்கு ஆதரவாகத் திருப்பும் நோக்கிலும் விக்கிரமபாகு ஈடுபட்டான். இதேவேளை சோழருக்கு எதிரான பாண்டியர், சேரருடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டான். இதேவேளை அவ்வப்போது ருகுணு இராச்சியத்தின் மீது சோழர்படைகள் தாக்குதல் நடத்தினாலும் ருகுணுவைக் கைப்பற்றும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை.

விக்கிரமபாகுவின் படைபெருக்கும் நடவடிக்கை எதிர்பார்த்ததைவிட மிகவும் நீண்டகாலம் எடுத்து சுமார் எட்டு வருடங்கள் தொடர்ந்தது. ஆயினும் பெருக்கிய படைமூலம் சோழர்மேல் படையெடுக்க முன்னர் விக்கிரமபாகு நோய்வாய்ப்பட்டு தெய்வேந்திர முனையில் மரணமடைந்தான் . 

பொலனறுவை மீதான விஜயபாகுவின் மும்முனைத் தாக்குதல்
கி.பி 1070 வரை இலங்கையில் நீடித்த சோழர் ஆட்சி பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியுற ஆரம்பித்தது. முதலாம் விக்கிரமபாகுவிற்கு நேரடி வாரிசுகள் இல்லாத காரணத்தினால் அரசாட்சிக்கான போட்டி ருகுணு இராச்சியத்தில் அரங்கேறியது. இந்த நிலமையை சோழர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். பதவிக்குப் போட்டியிட்ட ஐந்து இளவரசர்களில் மூன்று இளவரசர்கள் சோழர்படைகளினால் வெற்றிகரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.

 கி.பி 1055 இல் முதலாம் விஜயபாகு எனும் அரசன் பதவியேற்றுக்கொண்டான். பதவி ஏற்ற விஜயபாகு சோழர்களின் இலங்கைத் தலைநகரமான பொலநறுவையைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினான். கி.பி 1066 இல் தனது முதலாவது தாக்குதலை பொலன்னறுவை மேல் நடத்தினான். இதன் போது பொலன்நறுவை நகரத்தை வெற்றிகரமாகக் கைப்பற்றினாலும் சிறிது நாட்களில் தென்னிந்திய சோழ சாம்ராச்சியத்தில் இருந்து கிடைத்த மேலதிகப் படையுதவிகாரணமாக சோழர் மீளவும் விஜயபாகுவை விரட்டித் தமது தலைநகரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்.

1069-1070 காலப்பகுதியில் சோழ இராச்சியத்தில் உள்நாட்டு யுத்தம் உருவானது. இதன் காரணமாக சோழ அரசிற்கு இலங்கைபற்றி கவலைப்படும் நிலையில் இருக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய விஜயபாகு தனது இரண்டாவது தாக்குதலைப் பொலன்னறுவை மீது ஏவினான். மூன்று முனைகளில் படைகளை ஏவிய விஜயபாகு மேற்குப் பக்கமாக ஒரு படையணியை அனுப்பி மாந்தை மூலம் சோழர் உதவிப்படை அனுப்பினால் அதை எதிர்கொள்ள தயாரானான். அதேவேளை மேற்கு, கிழக்கு பகுதிகளால் இரண்டு படையணிகளையும் நேரடியாக தெற்கிலிருந்து தனது தலைமையில் பிரதான படையணியையும் கொண்டு பொலனறுவையை முற்றுகையிட்டான். சுமார் 17 மாதங்கள் தொடர்ந்த முற்றுகை விஜயபாகுவிற்கு வெற்றியாக அமைந்தது. கி.பி 1070 இல் பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டு விஜயபாகு இலங்கையின் மன்னனாக முடி சூடிக்கொண்டான்.

17 வருடங்கள் தொடர்ந்த இடைவிடாத தாக்குதல் மூலம் சோழர்படைகளை இலங்கையில் இருந்து வெளியேற்றியதுடன் இலங்கையை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தான். அண்ணளவாக ஒரு நூற்றண்டு காலத்தின் பின்னர் இலங்கையை ஒரு குடையின் கீழ் சேர்த்த பெருமை இவனைச் சாரும். இவ்வாறு சோழர் ஆட்சி இலங்கையில் முடிவடைந்தது.

Thursday, May 9, 2013

வைரம்!!!!!

வைரம்!!!!!


இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.
உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது?

பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.

வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

வைரம் ஏன் இவ்வளவு ஜொலிக்கிறது?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும். இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.

வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள்?

இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.
ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை.

சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும்?

ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.
உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.

ப்ளு ஜாகர்(Blue Jager)வைரம் என்றால் என்ன?

தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.

வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன்?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.

இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.

பெல்ஜியம் கட்டிங் என்றால் என்ன?

முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.

வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே,அதனை விளக்கவும்?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.
பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.

வைரத்தில் தோஷம் என்றால் என்ன?

அடிப்படையில் வைரம், நன்றாக ஒருங்கிணைந்த கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. ஒரு வைரம் உருவாகும் போது, சில சமயம் இயற்கையில் முழுமையான கட்டமைப்பு இல்லாத கார்பன் மூலக்கூறுகளின் அணுக்கள் வைரத்தின் உள்புகுந்து இணைந்து அதனோடு வளர்ந்து விடும். இவை கறுப்பு நிறம் கொண்டவை. இதற்கு மற்றொரு வேதியியல் பெயர் கிராபைட்.

வைரம் பட்டை தீட்டியதும் இது உள்ளே தனியாக கறுப்பாக காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் Black Pique / Black Spot என்பார்கள். நம் நாட்டில் இதற்கு தோஷம் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது?

வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.

இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது.

இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது.

Tuesday, May 7, 2013

ஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.

ஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.


ஆண்கள் தங்களது உணர்ச்சிகளை வெளியே கொட்டாமல் அடக்கிக் கொள்கிறார்கள்.அதனால் பல பிரச்சினைகள் என்றும் ஒரு தகவலை படித்தேன்.உண்மையில் கோபமோ,ஆத்திரமோ எந்த உணர்வும் உள்ளேயே அடக்கப்படுவது நல்லதல்ல.இருந்தும் ஏன் வெளியே கொட்டுவதில்லை? காரணம் சாதாரணமானது.அள்ளிக்கொள்ள ஆளிருந்தால் கொட்டுவார்கள்.
ஆண் தனக்குள்ளேயே முடங்கிப்போவது அதிகம்.பெண்களுக்கு இந்த பிரச்சினைகள் குறைவு.பெரும்பாலும் எல்லாவற்றையும் வெளியே சொல்லி விடுகிறார்கள்.அம்மா,சகோதரிகள்,தோழிகள் என்று அவர்களுக்கு நெருக்கமான உறவுகள் அதிகம்.ஆனால் ஆணுக்கு
அப்படியெல்லாம் இல்லை.

சகோதர உறவு என்பது முக்கியமானது.பெண்களைப்போல ஆண்களுக்கு இது அமைவதில்லை.சண்டை பிடித்து கோர்ட்டுக்கு போகும் அண்ணன் தம்பிகளை நீங்கள் பார்க்க முடியும்.அண்ணன் தம்பி உறவு வலுவாக இருப்பது மிகவும் குறைவு.பெண்களைக் கவனித்துப் பார்த்தால் தெரியும்.அக்கா,தங்கை உறவு என்பது மிக நெருக்கமானது.வேறெங்கும் இவ்வளவு பாசமான உறவு நிலையை நீங்கள் காண முடியாது.

மற்றவர்களிடமும்,பொருளாதரத்திலும் அந்தஸ்து பெறுவதற்காக ஆண் வெளியுலகத்துடன் அதிக உறவு நிலைகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.போட்டி,பொறமை,துரோகம்,போட்டுக்கொடுப்பது போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கிறது.அலுவலகத்திலோ,தொழில் செய்யும் இட்த்திலோ இதெல்லாம் சகஜம்.யாரிடமும் பகிர்ந்து கொள்வதுகூட கஷ்டம்தான்.


நண்பர்களும் தெரிந்தவர்களும் ஒருவனது உணர்வுகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதை கேட்க விரும்புவதில்லை.நான்கு பேர் சந்தித்தால் ஆண்கள் ,அரசியலைப்பற்றியோ,சினிமா பற்றியோ,பெண்களைப்பற்றியோ பேசுவார்களே தவிர கஷ்ட்த்தை சொன்னால் ஓடிப்போய் விடுவார்கள்.ஜோக் சொல்லிக்கொண்டிருந்தால் வெகு நேரம் அங்கே இருப்பார்கள்.

அரசியல்,சினிமா போன்றவற்றை அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதற்கும் இதுவே காரணம்.நான்கு பேர் முன்னால் விஷயம் தெரிந்தவன் என்று காட்டிக்கொள்வதற்கு என்று ஒரு ஆசிரியர் சொன்னார்.உண்மைதான்.ஆண்கள் கூடினால் உள்ளே அரித்துக்கொண்டிருக்கும் விஷயத்தை வெளியே விடாமல் ஏதேதோ பேசிவிட்டு தவறணையைத் தேடி போய் விடுகிறார்கள்.


உள்ளே இருப்பதை வெளியே சொல்லாமல் சரக்கு உள்ளே போன பிறகு உளறிக்கொண்டிருப்பார்கள்.மனித உறவுகளில் இணக்கமோ,நெருக்கமோ இல்லாதநிலை பெரும் நெருக்கடி.இந்த நெருக்கடி ஆணுக்கு அதிகம்.மது,சிகரெட் என்று ஒளிந்து கொள்வதற்கு இவை முக்கியமான காரணம்.பல நேரங்களில் குழந்தைகள்மீதும்,பெண்கள்மீதும் பாய்கிறான்.இதனால் வீட்டு உறவுகளும் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன.

ஆண்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உறவுகளை கண்டுபிடிப்பது முக்கியமானது.பல ஆண்களும் மனைவியிடம் தங்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்வதில்லை.மனைவிக்கு போதுமான அளவுக்கு இதைப்பற்றி தெரியாது என்று நினைக்கிறான்.இது ஒரு பிரச்சினை.குறைந்தபட்சம் வெளியேவிட்ட திருப்தியாவது இருக்கும்.உணர்வு பூர்வமான ஆதரவு வீட்டில் கிடைக்க வாய்ப்புண்டு.

படித்ததில் மனதில் பதிந்தது

Friday, May 3, 2013

தமிழர்கள் ஏன் இப்படி...?

தமிழர்கள் ஏன் இப்படி...?


தானுண்டு தன்ர வேல உண்டு' என்று சொல்வார்களே.. இந்த ஐரோப்பிய மக்களை பொறுத்தவரை எனக்கு அவர்களிடம் பிடித்த விடயமே இது தான்.

பொதுவாக மனிதர்கள் என்றாலே குறை நிறைகள் இருக்க தான் செய்யும். ஆனால் நான் ஐரோப்பிய சூழலில் வாழ்ந்த வரை அவர்களிடம் கண்ட குறைகளை விட நிறைகள் தான் மிக அதிகம்.

முக்கியமாக அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்றால் அவர்கள் தனி மனித சுதந்திரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான்.

அவர்களிடம் பிடிக்காத ஒரு விடயம் என்றால் எம்மை போல உறவுகளுக்கிடயிலான நெருக்கம் அவர்களிடம் இருக்காது. அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். ஏனெண்டால் பக்கத்து வீட்டில போய் குந்தி இருந்துகொண்டு ஊர் வம்பு கதைப்பது தான் எதோ ஒருவிதத்தில குடும்ப பிரச்சனையாக வந்து நிக்கும், இந்த குடும்ப பிரச்சனையில ஊரில இருக்கிற நாலு "பெரிய மனுசனுகள்" மூக்க நுழைக்கும் போது அது ஊர் பிரச்சனையாகும், கடைசில இந்த ஊர் பிரச்சனை பெருத்து பெருத்து நாட்டில ஒரு முக்கிய பிரச்சனையாய் நாளைக்கு வந்து நிக்கும்.. இது தேவையா?

அடுத்தவனை, அடுத்தவன் வீட்டை எட்டி பார்ப்பது என்பது நம்மவர்களின் அன்றாட கருமங்களில் ஒன்றுகிப் போனது என்று சொன்னாலும் மிகை இல்லை. நம்ம ஊர்களில பார்த்தோம் என்றால் இரண்டு வீடுகளுக்கு இடையிலான எல்லையை ஓலைகளால்(வேலி) அடைத்திருப்பார்கள்; இது கூட அவர்களுக்கு வசதியாகிப்போகும்! ஒரு வீட்டில குடும்ப பிரச்சனை எண்டால், அருகில உள்ள வீதியால போற- வாற சனம் பாதி அந்த வேலிக்க தான் தலையைக்குடுத்துட்டு நிக்கும்.

அதுமட்டும் இல்ல. தன்ர பக்கத்து வீட்டுகாரன்ர பிள்ளை வெளிநாட்டில இருந்து காசு அனுப்பி, அந்த பக்கத்து வீட்டுக்காரன் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா கூட 'வடலிக்க குந்தினதுகளுக்கெல்லாம் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கேக்குதாம்' எண்டு சொல்லி பொறாமைப்படுகுதுகளாம் நம்ம சனம்... என்ற உண்மையை நம்ம பதிவர்கள் யாரோ எழுதியதாக நினைவு..! அடச்சே ...அவன் வெளிநாட்டில உழைச்சு வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா என்ன, வீட்டுக்க டொயிலேட் கட்டினா என்ன..! அத போய் எட்டிப்பாத்து ...............!!

இந்த ஐரோப்பியர்கள் இருக்கார்களே.. நடுறோட்டில ஒரு ஆணும் பொண்ணும் நாலு மணி நேரமா கிஸ் அடிச்சுக்கொண்டு நிண்டாலும், அதால போற வாற எவனுமே திரும்பி கூட பார்க்கமாட்டான், இல்லை பட்டிக்காட்டு தனமா ஒட்டி நிண்ணு கமெராவில போட்டோ எடுத்து நியூசில போட்டு, எதோ கலாசாரத்தை காப்பாற்றிவிட்டேனே எண்டு பீத்திக்கமாட்டான். ஆனா நம்ம ஆக்கள் இருக்கார்களே வயசு போன பாட்டி ஸ்டைலா ட்ரெஸ் போட்டுக்கொண்டு றோட்டில நிண்டாலே போதும்; எதோ நமீதா கண்டது போல நாக்க தொங்க போட்டுக்கிட்டு பார்ப்பார்கள் பாருங்கோ.. பாட்டி செருப்பு எடுத்து காட்டும் வரை இமையே மூட மாட்டார்கள். சில வேளை இடையில எவனாச்சும் வந்து "ஏண்டா! வயசுபோனதுகளை கூட நாட்டில நிம்மதியா உலாவ விடமாட்டிங்களா?" எண்டு கேட்டால் "அண்ணே வயசானதுகள் எல்லாம் இப்பிடி ட்ரெஸ் பண்ணினால் நம்ம கலாசாரம் என்ன ஆவது" எண்டு பிளேட்ட மாத்தி கலாசார காவலர்கள் ஆவார்களே; அங்கே நிக்கிறார்கள் நம்மவர்கள்..
பொதுவாகவே மனிதர்களை பொறுத்தவரை அவர்கள் மறக்க நினைப்பதெல்லாம் தாம் கடந்து வந்த கடுமையான நாட்களை தான். யாருமே அந்த நாட்களுக்கு திரும்பி போக விரும்பார்கள். உதாரணமாய் வறுமையில் வாடிய காலங்கள்....இவ்வாறு வறுமையின் தாக்கத்தால் வாடி, மிக கடுமையாக கஸ்ரப்பட்டு எதோ ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்று தம் உழைப்பால் முன்னேறி, மீண்டும் நாடு வரும் போது வசதியாக தான் வாழ நினைப்பார்கள். தம் கடந்த காலங்களில் வறுமையால் இழந்தவற்றை எல்லாம் அனுபவிக்க நினைப்பதில் தப்பேதும் இல்லை தானே. அதை விடுத்து ஓலை குடிசையில போய் உக்கார்ந்து கொண்டு, பருப்பும் சேறும் மட்டும் சாப்பிட்டு, காலுக்கு செருப்பு கூட போடாமல் நடந்து.... கேட்டால் "ஐயகோ! நான் கடந்த காலத்தை மறக்கவில்லை" எண்டு பிதற்றுவானேயானால் என்னை பொறுத்தவரை அவன் வாழவே தெரியாத முட்டாள். ஆனால் நம்ம சனம் இருக்கே..எவனாச்சும் வெளிநாட்டால வந்து சொகுசாய் சுத்தி திரிஞ்சா பொறுக்காது.. செருப்பே இல்லாமல் திரிஞ்சதுகளுக்கு இப்ப பள்சர் கேக்குதாம் எண்டு புகைக்க தொடங்கிடுகிறார்களாம்..

இவ்வாறு தங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை பார்க்காது எப்பவுமே அடுத்தவன் முதுகை எட்டி பார்த்து முகம் சுழிக்கும் நம்மவர்கள் இருக்கும் வரை ஐரோப்பியர்களை விட அரை நூற்றாண்டு பின்னுக்கு தான் நிற்போம்.

என்னை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இனி வரும் தலைமுறைகளில் தமது சுயத்தை இழந்தாலும் வாழ்க்கையில் ,வாழ்க்கை தரத்தில்,நாகரீகத்தில் முன்னேறிவிடுவார்கள்.

இந்த சுயம் எண்டு சொன்னேனே... இவ்வாறு நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருப்பதை விட அதை தொலைப்பதால் ஏதும் குறைந்துவிடப் போகுதா என்ன..?

நன்றி : http://nekalvukal.bl...og-post_18.htmlWednesday, May 1, 2013

ஓலைப் பெட்டிகளை தெரியுமா உங்களுக்கு ...

ஓலைப் பெட்டிகளை தெரியுமா உங்களுக்கு ...


உச்சி முதல் அடிவரை அனைத்துமே பயன்படக்கூடிய மரம் பனைமரம். இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளுமே நமக்கு பயன்படுகிறது. அதிலும் ஓலையின் பயன்பாடு மிகவும் அதிகம்.

பலஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறத்திற்கு கிராக்கி பயங்கரமாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.

இதனால் மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். இதனால் பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே பார்க்க முடியாது.மக்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள் வரத்தொடங்கின. இவை மிகவும் எளிதாக கையாளக்கூடியதாக இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கினார்கள். ஆகையால் பனை ஓலை பெட்டிகள் உள்ளிட்ட பனைப் பொருட்களின் தேவை குறைந்து விட்டது.

பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப்பெட்டிகளின் வருகையால் பனை ஓலைப்பெட்டிகள் காணாமல் போய் விட்டன. அந்த தொழிலும் நலிவடைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் ஒரு காலத்தில் பனை ஓலையினால் செய்யப்படும் பொருட்களின் உற்பத்தியானது மிகவும் சிறந்து விளங்கியது.குறிப்பாக மிட்டாய் வைக்க பயன்படுத்தும் பனை ஓலைப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. ஏனென்றால் இப்பகுதியானது பனை மரங்கள் நிறைந்த பகுதியாகும். ஆகவே பனை ஓலையினால் செய்யக்கூடிய பொருட்களான முறம், கல்யாண சீர்வரிசைப் பெட்டி, வீட்டின் சுவற்றை சுற்றி அமைக்கப்படும் வேலி, மேலும் இனிப்பு வகைகளை வைக்க பயன்படும் ஓலைப்பெட்டி போன்றவைகளும் தயாரிக்கப்படுகின்றன.

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தின்பண்டங்களின் உற்பத்தியானது அதிக அளவில் இருப்பதால், அத்தகைய தின்பண்டங்களை பார்சல் செய்வதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலைப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற் கேற்றார் போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும்.முன்பெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கான பனை ஓலைப்பெட்டிகள் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. மேலும் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் போது இங்கிருந்து சுமார் 80,000 முதல் ஒரு லட்சம் வரை பெட்டிகள் அனுப்பப்பட்டு வந்தது.

திருவிழாக் காலங்களில் உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு செல்பவர்கள் ஓலைப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள் என்பதால் அனைத்து இனிப்பு வகைளிலுமே பனை ஓலைப் பெட்டிகளில் வைத்தே பண்டங்களை வைத்திருப்பார்கள்.

நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளின் வருகையை தொடர்ந்து ஓலைப் பெட்டிகளின் பயன்பாடானது குறையத் தொடங்கியது. இதனால் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டு வந்த இத்தொழிலில் தற்பொழுது ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபடக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால் அதில் சூடான தின்பண்டங்களை பார்சல் செய்யும்பொழுது வேதிப்பொருட்கள் கலப்பதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது.பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்படும் உணவு பண்டங்களானது விரைவில் கெட்டுப் போய்விடும். மேலும் உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதால் அவை கெட்டுப் போகாமல் இருக்கலாம். ஆனால் அப்பொருட்களின் இயற்கைத்தன்மையை இழந்து விடுவது மட்டுமின்றி, அவற்றை உட்கொள்வதால் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுகின்றது.

ஆனால் பனை ஓலைப்பெட்டிகளில் வைக்கப்படும் திண்பண்டங்கள் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. உணவுப்பொருளுக்கு புதிய மணமும், உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது. ஆகவே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பனை ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், அனைவரும் உடல் நலத்தை காக்கலாம்.

மேலும் நலிவடைந்து வரும் பனைப்பொருட்கள் தொழிலுக்கு புத்துயிர் அளித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கையினால் செய்யப்படும் படின ஓலைபெட்டிகளை பொதுமக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.