Wednesday, October 30, 2013

பிரபஞ்ச கானம்

 பிரபஞ்ச கானம் – மௌனி


அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது.

அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான்.

சிற்சில சமயம், இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்லும் நேர்பாட்டையைக் கொள்ளும்போது, தன்னை மறந்து அவன் மனம், ஆனந்தம் அடைவதுண்டு. மற்றும் சிற்சில சமயம், தன்னால் கவலைகளைத் தாங்க முடியாது என்று எண்ணும்போது, தன்னைவிடக் காற்று அழுத்தமாகத் தாங்கும் என்று எண்ணித் தன் கவலைகளை காற்றில் விடுவான். ஆனால் சூல் கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதே போன்று, அவை காற்றில் மிதந்து பிரிந்து, உலகையே கவலைமயமாக்கிவிடும். எட்டாத தூரத்தில் வானில் புதைந்து கேலிக் கண்சிமிட்டும் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது, அவனது பாழ்பட்ட, பழைய வாழ்க்கை நினைவு எழும் கோபித்து, வானில் அந்த நட்சத்திரங்களைத் தானே வாரி இறைத்தவன் போன்ற உரிமை உணர்ச்சியுடன் அவற்றைப் பிடுங்கி, கடலில் ஆழ்த்த எண்ணுவான். அந்தப் புதிய ஸ்தானத்தில் அவை எவ்வகையாகுமென்ற சந்தேகம் கொண்டவன் போல அண்ணாந்து நோக்குவான். அவையும், அதே ஐயம் கொண்டு விழிப்பது போன்று, அவனுக்குத் தோன்றும்.

அவ்வூரின் குறுகிய வீதிகள், நோக நீண்டு உயர்ந்த வீடுகளைக் கொண்டிருந்தன. மாலை வேளையில், வீடுகளின் மேற்பாகத்திலே சாய்ந்த சூரியக் கிரணங்கள் விழும்போது, ரகசியக் குகைகளின் வாய்போன்று, இருண்ட உள் பாகத்தை வீட்டின் திறந்த வாயில்கள் காட்டி நிற்கும், அது ”வா” வென்ற வாய்த் திறப்பல்ல. உள்ளே சென்றதும் மறைந்துவிடும் எண்ணங்களை விழுங்க நிற்கும் அசட்டு வாய்த் திறப்புப் போன்றுதான் தோற்றமளிக்கும்.

அவன், அந்தரங்கக் குகையில் மறைந்த எண்ணங்களோவெனில், பழுக்க காய்ந்த சூட்டுக் கோலால், எழுதப்பட்டனவே போன்று அடிக்கடி எழுந்தன. மழுங்கி மறைந்திருந்த அந்த நினைவுகளை மிகுந்த அனல் கொண்டு ஜொலித்து எழுச் செய்ய அவனுக்கு ஒரு சிறிய குழந்தையின் அழுகை போதும், ஒரு காகத்தின் கரைதல் போதும். மூன்று வருஷங்களுக்கு முன்னால் அவன் சென்றான்.

காலத்தைக் கையைப் பிடித்து நிறுத்திக் கனிந்த காதலுடன் தழுவினாலும், அது நகர்ந்து சென்று கொண்டேதான் இருக்கும். ஆனாலும் அவன் பிரிந்த நேரம் அவனுக்கு அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. அந்த நிகழ்ச்சி, காலபோக்கில், சலனமடையாது. அவனுக்கு நின்றது நின்றதுதான். அதுமுதல், உலகிலே உலக வாழ்விலே, ஒருவகை வெறுப்பைக் கொண்டான். அப்வெறுப்பே, அவன் உள்ளத்தில் கசிந்த தணலாய் கண்களில் பிரகாசித்து நின்றது. மனது மாறுதலை மிக வேண்டும் நேரத்தில், உலகின் சந்தோஷத்தை விட மனத்தைத் தாக்கும் துக்கம் வேறொன்றுமில்லை என்பதை அவன் உணர்ந்தான்; அவனுக்குச் சந்தோஷமே கிடையாது. வெறுப்புத்தான் அவன் மனதில் நிறைந்திருந்தது.

எட்டி, மேற்கு வெளியில் தெரிந்த சூரியன், சிவந்து இருந்தது. கவியும் மேகம், பற்பல வர்ணச் சித்திரமாக அதைச் சுற்றி அமைந்து, மெழுகி, மெழுகி மாறி மாறிப் பல உருவங்கள் கொண்டது. வாய்விரிந்து நின்ற ஒரு மேகக் குகையின் மேலிருந்து இறங்கிய நீண்ட வெண்மையான தொன்று புகுந்து அதனுடன் கலந்து ஒரு உருக்கொள்ளலாயிற்று. மிக அற்புதமான, உன்னத ஜீவிகளைக் கொண்டு… அப்போது உலகமும் மஞ்சள் நிறத்தில் இன்ப வருத்தமயமாகத் தோன்றிது.

அவள் கண்கள், அடிக்கடி குறி தவறாது பார்வையை அவன்மீது வீசி எறிந்து ஜொலித்தன. மாலை வெளிச்சம் மயங்கியது. அப்போது அவள் உட்சென்று மறைந்துவிட்டாள். அவன் இருந்த வீட்டிற்கு நேர் எதிரே சிறிது தள்ளி நின்ற தன் விட்டினுள் அவள் சென்றுவிட்டாள். அடிக்கடி அவள் இவனைப் பார்ப்பது உண்டு. அதனால், இவன் மனபோக்கு கொஞ்சம் மாறுதல் அடைய இடமேற்பட்டது. அவளது பார்வையால் வாழ்க்கை, நடுவே சிறிது வசீகரம் கொண்டது. உலகத்திலும் சிறு ஒளி உலாவுவதைக் கொஞ்சம் இவன் உணர ஆரம்பித்தான்.

ஒருநாள் காலை, அவன் அரசமரத் துறைக்கு ஸ்நானம் செய்யச்சென்றான். அங்கே, அவள் குளித்துவிட்டுப் புடவை துவைத்துக் கொண்டு இருந்தாள். அவள் இடம்விட்டுச் சென்றபின், ஸ்நானம் செய்ய எண்ணி அரசமரத்தடியில் நின்றிருந்தான். அவளுக்குப்பின் சிறு அலைகள் மிதக்கும் குளத்தின் ஜலப் பரப்பு – எதிர்க்கரையின் ஓரத்தில் நரைத்த நான்கைந்து நாரைகள், ஜலத்தில் தம் சாயலைக் கண்டு குனிந்து நின்றிருந்தன. வானவெளிச்சம், ஜலப் பரப்பின் மேல் படர்ந்து தவித்துக் கொண்டிருந்தது. எதிர்க்கரையில் நின்ற சிறு சிறு மரங்கள், இக்கரையில் நிற்கும் இவளை எட்டித் தொடும் ஆர்வத்தோடு கட்டை விரல்களில் நின்று குனிந்தனவே போன்று சாய்ந்து இருந்தன. மெல்லெனக் காற்று வீசியது. குளத்தில் பூத்திருந்த அல்லிப் பூக்களின் தலைகள் ஆடின – அவன் மனதின் கனம் கொஞ்சம் குறைந்தது.
அவன் தலைக்கு மேலே, சிறிது பின்னால் ஒரு மீன் கொத்திக் குருவி சிறகடித்துக் குனிந்து நோக்கி நின்றது. திடீரென்று ஜலத்தில் விழுந்து, ஒரு மீனைக் கொத்திப் பறந்தது; பக்கத்து மரக்கிளையில் உட்கார்ந்தது. குளத்து மேட்டில், ஒரு குடியானவப் பெண் சாணம் தட்டிக் கொண்டிருந்தாள். அதை, துவைத்துக் கொண்டிருந்த இவள் பார்த்தாள். ”எனக்காகத்தான் அதோ தட்டிக் கொண்டிருப்பது – நன்குலர்ந்த பின், அடுக்கடுக்காக -” என்று அவள் பார்த்ததாக எண்ணிய இவன் நெஞ்சு உலர்ந்தது.

அவன் அவ்வூர் வந்தபின், அவள் பாடிக் கேட்டதில்லை. அவள் பாடியே மூன்று வருஷத்திற்கு மேலிருக்கும். அவள் ஒருதரம் நோய்வாய்ப்பாட்டுக் கிடந்தபோது, அவள் இருதயம் பலவீனப்பட்டு இருப்பதாகச் சொல்லிப் பரிசோதனை செய்த டாக்டர் அவள் பாடுவது கூடாதென்றார். அது முதல், அவள் சங்கீதம் அவளுள்ளே உறைந்து கிடந்தது. அவளுக்கு வீணையிலும் பயிற்சி உண்டு. ஒரு தரம், அவள் வீணைவாசிக்க அவன் கேட்டான். அதன் பிறகு அவளுடைய சங்கீதத்தைப் பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும்அவன் ”அபிப்பிராயமும் உறுதியாகிவிட்டது” அவள்தான் சங்கீதம்; பிரபஞ்ச கானம் அவளுள் அடைபட்டுவிட்டது” என்று எண்ணலானான். காகத்தின் கரைதலும், குருவிகளின் ஆரவாரமும், மரத்திடைக் காற்றின் ஓலமும் காதுக்கு வெறுப்பாகி விட்டன. அவளுடைய சங்கீதம் வெளிவிளக்கம் கொள்ளாததனால் இயற்கையே ஒருவகையில் குறைவுபட்டது போலவும், வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சப்தம்தான் என்றும் எண்ணலானான்.
அவன் அவ்வூர் வந்து வெகுநாட்கள் சென்றவின் ஒரு ஆடி வெள்ளிக்கிழமையன்று, அவள் வீணை வாசிக்கக் கேட்டான். அவள் வீட்டின் உள்ளே தீபம் எரிந்து கொண்டிருந்தது. முற்றத்தில் பிரகாசமான ஒரு விளக்கு ஏற்றி மாட்டப்பட்டிருந்தது. திறந்த வாயிற்படியின் வழியாக, இருண்ட வீதியின் நடுவே குறுக்காக முற்றத்து வெளிச்சம் படர்ந்து தெரிந்தது. உள்ளே, அவள் தம்பி படித்துக் கொண்டிருந்தான். கூடத்திலிருந்து வீணை மீட்டும் நாதம் கேட்டது. அவள் வாசிக்க ஆரம்பித்தாள். இவன், எதிர்வீட்டுத் திண்ணையில் ஒருபுறமாக இருள் மறைவில் நின்று கேட்டான்.
சுமார் ஒன்றரை மணி நேரம் வாசித்தாள். அவ்வளவு நேரமும் ஒரே வினாடி போலக் கழிந்துவிட்டது. உலகமே குமுறி சங்கீத மயமானதாக நினைத்தான். அவள் வாசித்துக் கொண்டிருக்கும் போதே நடுவில் இவன் மனதில் பளீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. அதை உதற முடியாத ஓர் உண்மையென உணர்ந்தான். அவள் பாட்டின் பாணியும் அதைப் பலப்படுத்தியது. இவன் மனத்தில் ஒருவகைப் பயம் தோன்ற ஆரம்பித்து, உடல் குலுங்கியது. அவள் முடிக்கும் முன்பே தன் இதயம் பிளந்துவிடுமென நினைத்தான். அவள் வாசிப்பதை நிறுத்திவிட மாட்டாளா என்று துடித்துக் கொண்டே கேட்டு நின்றான்.

”ஆம், அவள் பாடுவது கூடாது; டாக்டர் சொல்லியது உண்மையானால் முடிவு நிச்சயம். ஆனால், அவள் முடிவு… பாட்டினாலா அவள் முடிவு? அவர் நினைக்கும் காரணத்தினாலன்று” மனோவேகத்தின் பலனாகப் பிறந்த ஒரு உணர்ச்சி அவன் உள்ளத்தில் ஒரு அற்புதத் தத்துவமாக மாறியது.
அதன் பின்பு, மனக் களங்கமின்றியும் கூடுமானவரையில் தன் சாயையின் சம்பந்தமற்றதுமான ஒருபுற உணர்வைக் கொண்டும் மேலே சிந்தனைகளை எழுப்புவான். அப்படியும் தான் முன் உணர்ந்ததையே மனத்தில் உறுதிப்படுத்திக் கொண்டான் – ”இயற்கை” ஏதோ ஒரு வகையில் குறைவுபட்டது என்ற எண்ணம் – பிரபஞ்ச கானமும், வசீகரமும் திரண்டு அவளாக உருக்கொண்டதனால்தான் அந்தக் குறைவு என்ற நிச்சயம், உறுதிப்பட்டது. நிலவு பூப்பது விரசமாகத் தோன்றியது அவனுக்கு. அந்தியில் ஆந்தைகள் பொந்துவாயில் அலறுவது வெலித்தியாகக் கேட்டது. உலக சப்தங்களே பாழ்பட்டு ஒலித்தன. தன் உன்மத்த மிகுதியில் சுருதி கலைந்த வீணையில் தேர்ச்சி பெற்ற ஒருவன் வாசிக்கும் கானங்கள்தான் இந்தச் சப்தங்கள். சுருதி ஓடி அவளிடம் ஒளிந்து கொண்டு ”இயற்கை” அன்னை அளிக்கக்கூடிய, அளிக்க வேண்டிய இன்பம் பாதிக்குமேல் (சப்த ரூபத்திலும், காட்சி ரூபத்திலும்) அவளிடம் அடங்கி மறைந்து போய்விட்டது. மேலே யோசிக்கும் போது, ”இழந்ததைப் பெற இயற்கைச் சக்தி” முயலுவதையும், தனியாகப் பிரிந்து அவளாக உருக்கொண்ட பிரபஞ்சகானமும், வசீகரமும் வெளியே பரந்துபட முயலுவதையும் யாரால் எவ்வளவு நாள், எப்படித் தடுக்க முடியும்? அவள் முடிவு பாட்டினால்” என்ற எண்ணம் வலுவாக எழுந்து நின்றது. அடிக்கடி அவன் மனது அதனால் மிகுந்த துக்கமடையும்.
சில மாதங்கள் சென்றன. அவனுக்கோ அவன் யோசனைகள்தான்; கணநேரம் நீண்டு, நெங்காலமாயிற்றென்ற எண்ணந்தான்…
அன்று அவள் கலியாணத்தின், மூன்றாம் நாள், அன்று மாலை நலுங்கு நடந்து கொண்டிருந்தது…

சமீப காலத்தில் அவன் வருத்தம் அதிகமாயிற்று. தன்னுள் வருத்தமே தனிப்பட்டு அழுதுகொண்டு இரவில் இருள் வழியே உருவற்று ஊளையிட்டோடியது என்று எண்ணினான் ஓரோர் சமயம். அவள் கலியாணத்தின் முதல்நாள் இரவு அவனால் உறக்கங் கொள்ள முடியவில்லை. உலகில் அவச்சத்தம் இருளோடு கூடி மிதந்தது. இரவின் ஒளியற்ற ஆபாசத் தோற்றம்… அவன் நெடுநேரம் திண்ணைத் தூணில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான்.

அவள் வீட்டின் முன் அறை ஜன்னல் மூடி இருந்தது. பொருந்தாத கதவுகளின் இடைவழியே, உள் வெளிச்சத்தின் சாய்வு ஒளிரேகை தெருவிலும், இவன் திண்ணைச் சுவரிலும் படிந்திருந்தது. இவன் உள்ளத்தையும் அது சிறிது தடவி மனஆறுதலை அளித்தது. ஒருவகை இன்பம் கண்டான். யாரோ குறுக்காக எதிர்வீட்டின் உள்ளே நடப்பதால் அவ்வொளி ரேகை நடுநடுவே மறைந்து தெரிந்து கொண்டிருந்தது. அது இவனுக்கு வெகுபுதுமையாகத் தோன்றியது. அதையே, குறித்து நோக்குவான். ”ஆம்… அவள், நிதானமற்று, உள்ளே உலாவுகிறாள்… அடைபட்டது, வெளியே போக ஆயத்தம் கொள்ளுகிறது…!” மேலே அவனால் யோசிக்க முடியவில்லை. அவன் மனம் துக்கம் அடைந்தது. ஆகாயத்தில், இருட்பாய் விரிப்பின் நடுநடுவே வெளிச்சப்புள்ளி வர்ணந் தீட்டிக் கொண்டது போன்று எண்ணிலா நட்சத்திரங்கள் பிரகாசித்தன. அவை ஆழ்ந்த துக்கத்தில் உதிராது, மடியாது, ஐயமுற்று வினாவி நிற்பவை போன்று தோன்றின இவனுக்கு. ”அவளால், பிரபஞ்ச ஜோதியே, அழகே, குன்றிவிட்டதுதான் உண்மை”. அப்போது துக்க ஓலத்தில் வாடைக் காற்று வீச ஆரம்பித்தது. எட்டிபோகும் நரியின் ஊளை, ஒரே இடத்தில் பதிந்து பரவும் பறைச்சேரி நாய்க் குறைப்பு போன்ற மிகக் கோரமான, சப்தங்கள்தான் இருள் வெளியில் மிதந்தன. அவளிடம் அடைபட்ட உன்னத கானம் வெளியில் படரும் நாளை வேண்டிக் கூவும் பிரலாபிப்புப் போன்றுதான் அந்தச் சப்தங்கள் அவன் காதில் விழுந்தன. தூரத்தில் கிழக்கு அடிவானத்திலிருந்து, புகைந்து மேலோங்கும் முகில் கூட்டம்.

நன்றாக மழை அடித்து நின்றது. தெருவில், உறிஞ்சியது போக மீதி மழை ஜலம் வாய்க்காலாக ஓடியது. மிகுந்தது சிறு சறு ஜலத்திட்டுகளாக நின்றது. ஒருதரம், அவள் ஜன்னலைத் திறந்து மூடினாள். ஒளித்திட்டுக்களாய்த் தோய்ந்து ஜொலித்தது தெரு முழுவதும். சிறு தூரம் விழுவது நின்றபாடில்லை. ஒரு பூனை தெரு நடுவே, குறுக்காக ஓடியபோது, வெளிச்சத்தில் விழுந்து மிதந்து மறைந்தது…

கல்யாணம் மூன்றாம்நாள், நலுங்கு நடந்துகொண்டிருந்தது. கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை எதிரில் வெற்றிலைத் தாம்பாளத்தைக் கையில் ஏந்தி அவர் அதை ஏற்றுக்கொள்வதை எதிர்பார்த்து அவள் நின்றிருந்தாள். அவள் பாட வேண்டுமென்பது அவர் எண்ணம்போலும், சுற்றி இருந்த, மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் இவளைப் பார்த்து ”பாடு பாடு” என்றார்கள். இவளோ முடியாதென்று சொல்வது போன்று மெளனமாக நின்றிருந்தாள். இவள் பாடக்கூடாதென்று எண்ணியே, அவனும் எட்டிய தூணடியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் எல்லோரும், இவள் மனது நோக ஏதேதோ பேசினர். அவள் மனது வெறுப்படைந்தது. ஒருவகை அலக்ஷ¢யம் அவள் கண்களில் தெரிந்தது. எட்டித் தூணில் சாய்ந்திருந்த அவனை ஒருதரம் பார்த்தாள். இவள் பார்வை, தவறாது, குறி கொண்டு அவனைத் தாக்கியது. அப்போது உச்சிமேட்டிலிருந்து, ஒரு காகம் விகாரமாகக் கரைந்து கொண்டிருந்தது. அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான் இவன். பின்னும் ஒருதரம் இவனை விழித்துப் பார்த்தாள். மதுக்குடித்த தேனீக்களைப் போன்று குறுகுறுவென்றிருந்தன அவன் விழிகள். அவள் உடம்பு ஒரு தரம் மயிர்சிலிர்த்தது. திடீரென்று ”நான் பாடுகிறேன் – கேட்க வேண்டுமா? சரி என்றாள் அவள். இவன் மனதோவெனில், நிம்மதியற்று வெடிக்கும் துக்கத்தில் ஆழ்ந்தது. அவள் விளக்கம் கொண்டு விரிவுபட எண்ணிவிட்டாள் போலும்! அவள் பாட ஆரம்பித்தாள்.
ஆரம்பித்த அவள் கொஞ்சம் கொஞ்சமாக மெய்மறந்தாள். சாஸ்திர வரையறுப்பை அறிந்தும் கட்டுப்பாட்டின் எல்லையை உணர்ந்தும், உடைத்துக் கொண்டு பிரவாகம் போன்று அவள் கானம் வெளிப்பட்டது. அங்கிருந்த யாவரும் மெய்மறந்தனர்.

தலை கிறுகிறுத்து ஒன்றும் புரியாமல் இவன் தூணோடு தூணாகி விட்டான்.
அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த அறிதற்கரிய ஜீவ உணர்ச்சிக் கற்பனைகள், காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையைத் தாண்டிப் பரிமாணம் கொண்டன. மேருவைவிட உன்னதமாயும், மரணத்தைவிட மனத்தைப் பிளப்பதாயும், மாதரின் முத்தத்தைவிட ஆவலைத் தூண்டி இழுப்பதாயும் இருந்தன. மேலே, இன்னும் மேலே, போய்க் கொண்டிருந்தன…
அவள் ஒரு மணி நேரம் பாடினாள். அவளுள் அடைபட்ட சங்கீதம் விரிந்து வியாபகம் கொள்ளலாயிற்று. வெளி உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் அடைந்து கொண்டிருந்தது…

இவன் மனப்புத்தகம், பிரிந்து உணர்ச்சி மிகுதியில் படிக்கப்பட்டது. ”காலம்” விறைத்து நின்றுவிட்டது… அந்தியின் மங்கல் வெளிச்சம் மறையுமுன் மஞ்சள் கண்டது. இவன் முகம் ஒளிகொண்டு சவக்களை பெற்றிருந்தது.
கடைசிக் காகக் கூட்டத்தின் ஒருமித்த கரைதல் கூச்சல் கேட்டது. முற்றத்துக் கொட்டகையின் மீது குருவிகள் உட்கார்ந்துகொண்டு ஆரவாரித்தன. இவன் திடீரென்று, வாய்திறந்து ”ஐயோ… அதோ… சங்கீதம், இனிமை, இன்பம் எல்லாம் திறந்த வெளியில், நிறைகிறதே…” என்று கத்தினான், அதே சமயம், அவளும் கீழே சாய்ந்தாள். ”இயற்கை அன்னை” தன் குறையை, நிவர்த்தித்துக் கொண்டாள். இழந்ததை, அணைத்துச் சேர்த்துக் கொண்டாள்… ஆகாயவீதி, அழகு பட்டது. மேக மலை மறைப்பினின்றும் விடுபட்ட பிறைச்சந்திரன் சோபை மிகுந்து பிரகாசித்தது. வெளியே, அவ்வூர் குறுகிய விதியே ஒரு களை கொண்டது.

குளக்கரை, அரசமரத்திலிருந்து, நேர்கிழக்கே, பார்த்தால், வளைந்த வானம் பூமியில் புதைபடும் வரையில், கண்வெளி வீதியை மறைக்க ஒன்றுமில்லை. மேற்கே, ஒரு அடர்ந்த மாந்தோப்பு.
காலை நேரம் வந்தது. மூலைமுடுக்குகளிலும், தோப்பின் இடைவெளிகளிலும், தாமதமாக உலாவி நின்ற மங்கலை ஊர்ந்து துரத்த ஒளிவந்து பரவியது. பல பல மூலைகளிலிருந்து, பக்ஷ¢க் குரல்கள் கேட்டுப் பதிலளித்துக் கொண்டிருந்தன. இரவின் இருளைத் திரட்டி அடிவானத்தில், நெருப்பிடப்பட்டதே போன்று கிழக்கு புகைந்து, சிவந்து, தணல்கண்டது… காலைச் சூரியன் உதித்தான். சிறிது சென்று, வானவெளியை உற்றுநோக்க இயலாதபடி ஒளி மயமாயிற்று. உலகப் பேரிரைச்சல், ஒரு உன்னத சங்கீதமாக ஒலித்தது. மனத்தில் ஒரு திருப்தி – சாந்தி, அவன், வீடு அடைந்தான்.

மாலையில், மேற்கே நோக்கும் போது மரங்களின் இடைவெளி வழியாக பரந்த வயல் வரப்புக்கள் நேர்க்கோடு போல் மறைந்து கொண்டிருந்தன. அவை விரிந்து விரிந்து சென்று அடிவானில் கலக்கும். தூரத்து வரப்புக்களில் வளர்ந்து நின்ற நெட்டைப் பனைமரங்களின் தலைகள் வானை முட்டி மறைவது போன்று தோன்றும். “வாழ்க்கை…? ஒரு உன்னத மனவெழுச்சி..” அவன் பார்த்து நின்றான்.
குளத்துமேட்டு வறட்டிகள் உலர்ந்து அடுக்கப்பட்டு இருந்தன.

Friday, October 25, 2013

யார் இந்தக் களப்பிரர் பாகம் 07

             யார் இந்தக் களப்பிரர் பாகம் 07


களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள்தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம்தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது.

களப்பிரர் வரலாறு பற்றித் திடமாக அறிந்து கொள்வதற்கான விரிவான சான்றுகள் கிடைக்கவில்லை. இவர்களின் மூலம், வலிமை பெற்றதற்கான பின்னணிகள், தமிழகத்தினுள் படையெடுத்த காலம், அவர்கள் ஆரம்பத்தில் தோற்கடித்த மன்னர் பெயர்கள் என்பன மறைபொருளாகவே உள்ளன. எனினும், கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இவர்கள் தோற்றம் பற்றி வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள்.அவர்களுள் ஒருவனே அச்சுத களப்பாளன்(அச்சுத விக்கந்தக் களப்பாளன்). இவன் காலம் கி.பி நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவையே.

பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்குஅருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

சிலர் மேற்குக் கங்கர்களுக்கும், களப்பாளர்களுக்கும் தொடர்பு காட்ட முயன்றுள்ளனர். பிற்காலத்தில் வட தமிழகத்தில்குறுநில மன்னர்களாக இருந்த முத்தரையர் குலத்தவன் ஒருவன், கல்வெட்டொன்றில், களவன் கள்வன் எனக் குறித்திருப்பதைக் கொண்டு, களப்பிரர்களுக்கும் முத்தரையர்களுக்கும் தொடர்பு காண்பவர்களும் உள்ளனர். கர்நாடகத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் சிலவற்றில் கலிகுலன், கலிதேவன் போன்ற பெயர்க் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாலும், களப்பிரர்களும் கலியரசர்கள் எனப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதாலும் களப்பிரர் கர்நாடகத் தொடர்பு உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.இருப்பினும் இன்று (களப்)பறையர் என்று அழைக்கபடுபவர்களே அன்று களப்பிரர் எனப்பட்டனர் என கருதுவோர் பலருண்டு. மேலும் இவர்கள் கோசர்கள் வழி வந்தவர் என்றும், உழவர்கள் வழி வந்தவர்கள் என்றும் கருத்துகள் நிலவுகிறது.(கலப்பையை கொண்டு உழுவதால் கலமர் என்ற பெயர் களமர் என்றாகி களப்பிரர் என்று மறுவியது பின்னர் களப்பறையர் என மாறியது).

தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த களவர் என்னும் இனத்தவரே களப்பாளர் எனச் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இருவரும் வேறு என்று கூறுவோரும் உள்ளனர். அதற்கு அவர்கள் பின்வரும் சான்றுகளையும் காட்டுகின்றனர்.
களவர் என்றும், களமர் என்றும் குறிப்பிடப் படுவோர் களத்தில் விளைசல் காணும் உ ழவர்.

வேங்கடப் பகுதியில் வாழ்ந்தவர் கள்வர்.
களப்பாளர் பண்டைய தமிழ்க்குடி சைவ மரபு.
களப்பிரர் அன்னிய நாட்டினர். அன்னிய மொழியினர். அன்னிய மதத்தினர். (சமணம்).

களப்பிரர்களின் மொழிக் கொள்கைகள் பற்றி தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. "அவர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் ஒரு பக்கத்தில் பிராகிருதமொழியிலும் மறுபக்கம் தமிழிலும் பெயர் பொறித்துள்ளனர் என்பதனால், களப்பிரர்கள் ஒருவகையான பிராகிருதத்தையே தங்களது பரிமாற்ற மொழியாகப் பயன்படுத்தியிருக்கலாம்." அதே வேளை இக்காலத்தில் தமிழ் மொழி தேக்கம் அடையவில்லை என்றாலும் அவர்கள் தமிழுக்கு ஆக்கம் அளித்தாகவும் தெரியவில்லை என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார்.

இக்காலத்தில் இருந்து கிடைக்கப்பெறும் பெரும்பாலான கல்வெட்டுக்கள் தமிழ் மொழியில் இருப்பதால், அரச மொழியாக தமிழ் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. எனினும், களப்பிரர்கள் ஆதரித்த பெளத்த சமய நூல்களும் பிற பல நூல்களும் பாலி மொழியிலேயே பெரும்பாலும் எழுதப்பட்டன.

களப்பிரர்கள் வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள். இதர வைதீக எதிர்ப்புச் சமயமாகிய சமண சமயமும் இக் காலத்தில் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருந்தது. எனினும் இவர்கள் வைதீக சமயங்களை எதிர்த்தார்களா என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உண்டு. வரலாற்றாளர் அலைசு ஜஸ்டினா தினகரன் அவர்கள் இந்து சைவர்கள், சமணர் அல்லது பௌத்த சமயத்தினராக இவர்கள் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்.

உசாத்துணைகள் :

The Kalabhras in the Pandiya Country and Their Impact on the Life and Letters There, By M. Arunachalam, Published by University of Madras, 1979
பண்டைத்தடயம், பகுதி- கோசர் தான் களப்பிரரோ மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்)
ஏ.பி. வள்ளிநாயகம்

  

Sunday, October 20, 2013

யார் இந்தக் களப்பிரர் பாகம் 06

 யார் இந்தக் களப்பிரர் பாகம் 06


உலகத் தமிழர்களுக்குத் திருக்குறளைக் கொடுத்தவர்கள். சீவக சிந்தாமணி, முதுமொழிக் காஞ்சியைக் கொடுத்தவர்கள். கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி அந்தாதி என்று எத்தனையோ காப்பியங்களைத் தந்தவர்கள். நாலாடியாரும் இவர்கள் காலத்தில் வந்தது தான். காரைக்கால் அம்மையாரின் நூல்களும், இவர்களின் காலத்து முதன்மை நூல்கள். முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இவர்கள் காலத்தில் வளர்ந்தவைதான்.

தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகளைத் தமிழ்க் கவிதைகளுக்கு கொடுத்துச் சென்றவர்கள். அதையும் தாண்டி ஒன்று உள்ளது. இப்போது நாம் எழுதுகிறோமே தமிழ் எழுத்துகள், இவை எல்லாம் சிந்துவெளி பாளி எழுத்துகளாக இருந்தவை. அவற்றை வட்ட எழுத்துகளாக மாற்றியதும் இவர்கள்தாம். அப்படிப்பட்ட மனிதர்களின் வரலாறு மறைந்து போய்க் கிடக்கிறது. தமிழர்களின் நினைவுச் சுவடுகளில் இருந்து அந்த மனிதர்கள், ஒட்டு மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.


சோழர்களுக்கு புகழாரங்கள்

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள். இவர்களைத் தெரியும்தானே. அசைந்தால் அங்கே ஒன்று. இசைந்தால் இங்கே ஒன்று என்று தமிழகம் முழுமையும் கோயில்களைக் கட்டி அழகு பார்த்தவர்கள். இதில் கடைசியாக வந்த சோழர்களுக்கு மட்டும் பெரிய பெரிய புகழாரங்கள். ஆர்ப்பாட்டமான சுவர் ஓவியங்கள். உலகத்தின் உச்சிக்கே அவர்களை ஏற்றியும் வைத்து இருக்கிறார்கள்.

ஆனால், பல்லவர்களைப் பற்றி அதிகம் இருக்காது. சாளுக்கிய மன்னன் புலிகேசியை நீயா நானா என்று பதம் பார்த்தவர்கள் இந்தப் பல்லவர்கள். வாதாபியை பாதாம் பருப்பாக வறுத்து எடுத்தவர்கள். பல்லவர்களைப் போல, களப்பிரர்களைப் பற்றியும் தமிழக வரலாற்றில் அதிகம் இருக்காது. உண்மையில் எல்லாருக்கும் சம நீதி வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

அதுதான் உண்மை. ஆனால், வழங்கப்படவில்லையே. ஏன்? அதுதான் இன்றைய வழக்கு. இப்போதைய வழக்கு. இன்று நாம் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு. சான்று: http://voiceofthf.blogspot.com/2012/02/blog-post.html

தமிழுக்கு உயிர் கொடுத்தவர்கள்

இத்தனைக்கும் தமிழகத்தின் வடபகுதியைச் சோழர்களைவிட மிகச் சிறப்பாக ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். அதையும் தாண்டி, தமிழுக்கு உயிர் கொடுத்தவர்கள் களப்பிரர்கள். ஆனால், அப்படிப்பட்ட களப்பிரர்கள் ஏன் இந்த இருட்டடிப்பு செய்யப்பட்டனர் என்பதுதான் புரியவில்லை. கல்லூரியில் படித்த நினைவுகள். இப்போது உதவி செய்கின்றன. சரி. விசயத்திற்கு வருவோம்.

தமிழக வரலாற்றில் அதிகமான பாதிப்பை உண்டாக்கியவர்கள் சேரனும் இல்லை. சோழனும் இல்லை. பாண்டியனும் இல்லை. பல்லவர்கள்தான். பல்லவர்கள். மறுபடியும் சொல்கிறேன். பல்லவர்கள்தான். அவர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உலகத்தில் வாழும் அத்தனைத் தமிழர்களும் சாகும் வரை, பல்லவர்களை மறந்துவிடக் கூடாது.

பல்லவர்கள்தான் தமிழகத்தின் சிலை ஓவியங்களுக்கு உயிர் கொடுத்தவர்கள். மாமல்லபுரத்தைக் கட்டியவர்கள். மறைக்கப்பட்ட தமிழகக் குகைக் கோயில்களில், தெய்வீகமான ஓவியங்களை வார்த்துக் காட்டியவர்கள். சேரனும் இல்லை. சோழனும் இல்லை. பாண்டியனும் இல்லை. பல்லவர்கள்தான்.

மாமல்லபுரம் மகாபலிபுரம்

பல்லவர்கள் சிற்பக் கலையில் புரட்சி செய்தவர்கள். மகாபலிபுரத்தில் அழகு அழகான கருங்கல் சிலைகளை நீங்கள் பார்த்து இருக்கலாம். அத்தனையும் பல்லவர்களின் சித்தங்கள். காவேரியில் கல்லுக்கு அடியிலும் சிற்பங்களை வடித்தவர்கள் இந்தப் பல்லவர்கள். தங்களைப் பற்றி, நிறைய குறிப்புகளை விட்டுச் சென்றவர்கள். மாமல்லபுரம் என்பதும் மகாபலிபுரம் என்பதும் இரண்டும் ஒன்றுதான்.

ஆனால், தமிழக வரலாற்றைப் படித்துப் பாருங்கள். சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களுடன் பல்லவர்களை இணைக்கும் குறிப்புகள் எப்போதுமே இருக்கா. பல்லவர்கள் தனியாகத்தான் இருப்பார்கள். ஏன்? அதே போல களப்பிரர்களைப் பற்றியும் அதிகமான வரலாறு இருக்காது.

களப்பிரர்களின் காலம், ஓர் இருண்ட காலம் என்று ஓரம் கட்டப்பட்டு இருக்கும். உண்மையிலேயே அதிகம் மறக்கப்பட்ட காலம் களப்பிரர் காலம்தான். களப்பிரர்கள் யார்? இவர்கள் எங்கு இருந்து வந்தார்கள். கொஞ்சம் அலசிப் பார்ப்போம். களப்பிரர்கள் 3-ஆம் நூற்றாண்டில் இருந்து 6-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள். தமிழகத்தின் மீது களப்பிரர்கள் படை எடுத்த போது, முதுகுடுமிப் பேர்வழுதி பாண்டியன் என்பவர் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தார். அத்துடன் தமிழின் கடைச் சங்கம் ஒரு முடிவுக்கு வந்தது என்று அறிஞர் டி.வி.சதாசிவ பண்டாரத்தார் சொல்கின்றார்.

இது எல்லாம் 1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. அப்போது கேரளா என்பதும் இல்லை, கர்நாடகா என்பதும் இல்லை. எல்லாமே தமிழகம்தான். ஆனால், இப்போது நடக்கிற கூத்தைப் பாருங்கள். முல்லைப் பெரியாறும் காவேரியும் கண்ணீர்விட்டு அழுவதைப் பார்த்தால், மறுபடியும் பல்லவர்களும் வல்லவர்களும் வர வேண்டும் என்கிற ஆசை, சுற்றிச் சுற்றி அடிக்கின்றது. மனசுக்கு ரொம்பவும் சங்கடமாக இருக்கிறது.

களப்பிரர் பற்றிய உண்மைகள் தெரிய வேண்டும் என்றால் தமிழ் நாவலர் சரிதை, யாப்பருங்கலக் காரிகை, பெரிய புராணம், காசாக்குடிச் செப்பேடுகள், திருப்புகலூர் கல்வெட்டு, வேள்விக்குடி சேப்பேடுகளைப் படியுங்கள். உண்மை தெரியும்.

ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்னால், கேரளா எனும் ஒரு பகுதி இல்லை. 12 ஆம் நூற்றாண்டில்தான் கேரள மொழியும் உருவானது. அதுவரை கேரளாவில் பேசப்பட்ட மொழி தமிழ்மொழிதான். அந்தக் காலக்கட்டத்தில் அந்த நிலப்பகுதியை சேர மன்னர்கள் ஆண்டு வந்தனர். [http://en.wikipedia.org/wiki/Kerala]

வரலாற்று ஆசிரியர்களால் ‘இருண்ட காலம்’ என்று வர்ணிக்கப்படும், அந்தக் காலத்தைப் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்துள்ளனர். அதற்குக் காரணம் உண்டு. நீங்களே புரிந்து கொள்வீர்கள். அதைப் பற்றிய ஆய்வுகளைச் செய்து வரலாற்றின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் மயிலை.சீனி. வேங்கடசாமி எனும் வரலாற்று அறிஞர்.

களப்பிரர்கள் இந்து மதத்தை ஆதரித்தனர். இருந்தாலும் அவர்கள் புத்த, சமண மதங்களைச் சார்ந்தவர்கள். களப்பிரர்கள் செய்த ஒரு தவறு என்னவென்றால், ஆரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நில தானங்களைத் தடுத்து நிறுத்தியதுதான். அதனால் அவர்கள் இந்து மதத்தை ஆதரிக்கவில்லை எனும் கருத்து உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் அவர்கள் ஆரியர்களின் எதிரிகளாகவே அடையாளம் காணப்பட்டனர்.

தயவுசெய்து வாசகர்கள் மன்னிக்கவும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைத்தான் சொல்ல வருகிறேன். மற்றபடி தமிழர்களின் சாதி சம்பிரதாயங்களைப் பற்றி சொல்லவில்லை. தமிழர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து, அதில் மூத்த பிரிவில் தங்களை நிலைப்படுத்தியவர்கள் ஆரியர்கள்.

பாண்டிய மன்னர்களை நம்ப வைத்து, அவர்களைப் பதினாறு வகையான தானங்கள் செய்யச் சொல்லி ஆரியர்கள் நலம் பெற்றனர். [சான்று: தமிழ் மக்கள் வரலாறு. அயலவர் காலம்.க.ப.அறவாணன். மார்ச் 2006. பக்:59]
எடைக்கு எடை ஆரியர்களுக்குப் பொன் கொடுக்கும் பழக்கம் அக்காலத்திலேயே தொடங்கியது.

தமிழுக்கே உரிய எழுத்துகள் வழக்கில் இருந்த போதும் பிராமி எழுத்துகளையே கல்வெட்டுகளில் அமைத்தனர். ஆரியர்களுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. அந்த நிலங்களில் இருந்து கிடைத்த வருமானம் ஒட்டு மொத்தமாக ஆரியர்களுக்கே போய்ச் சேர்ந்தன. அதைத் தடுத்து நிறுத்தி, நிலங்களை மறுபடியும் ஏழைகளுக்கே திருப்பிக் கொடுத்தனர். அதுதான் களப்பிரர்கள் செய்த தவறு.

களப்பிரர்கள் ஆட்சி முடிவுக்கு வந்ததும், அவர்களைப் பற்றிய ஆவணங்கள் எல்லாமே அழிக்கப்பட்டுவிட்டன. அதனால், களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம் என்று சொல்லப்படுகிறது. வரலாற்றில் கறுப்புப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

உண்மையிலேயே களப்பிரர்கள், கன்னட நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள். திப்பு சுல்தானைத் திராவிடத் தமிழனாக ஏற்றுக் கொள்ளும் தமிழகம் ஏன், களப்பிரர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. களப்பிரம் என்பது தமிழா, கன்னடமா என்பது முக்கியம் இல்லை. ஆனால், அவர்கள் தமிழகத்தில் நல்ல ஓர் அரசை உருவாக்கி நிர்வாகித்தனர் என்பதுதான் பாராட்டப்பட வேண்டிய விசயம்.

களப்பிரர்கள் காலத்தில்தான் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டன. புதிய பா வகைகள் உருவாக்கப்பட்டன. களப்பிரர்கள் வருவதற்கு முன், தமிழ் இலக்கியத்தின் இடைச் சங்கத்தில் ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைப் பாக்கள்தான் இருந்தன. அதற்குள்ளேயே தமிழ்ப்பாக்கள் முடங்கிக் கிடந்தன. ஆக, களப்பிரர்கள் வந்த பிறகுதான் தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகள் வந்தன.

களப்பிரர்கள் காலத்தில் ஆட்சி மொழியாகத் தமிழ்மொழியாக இருந்தது. இவர்களின் காலத்தில்தான் தமிழ்மொழி நன்றாக வளர்ச்சி அடைந்து இருந்தது. அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள் தோன்றின. நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள் தோன்றின. விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூலும் உருவானது.

கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இறையனார் களவியல் உரை தோன்றியது. பிராமிய எழுத்தாக இருந்த தமிழ் எழுத்து, வட்டெழுத்தாக மாறியதும் களப்பிரர் காலத்தில்தான். ஆக, தமிழுக்கு இத்தனைத் தொண்டுகள் செய்தவர்களின் காலத்தை எப்படி இருண்ட காலம் என்று சொல்ல முடியும். சொல்லுங்கள்.

களப்பிரர் காலத்தில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக ஒரு தமிழர் இருந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அதற்காக, களப்பிரர் அரசர்களுக்கு வக்காளத்து வாங்குகிறேன் என்று சொல்ல வேண்டாம். ஏன் களப்பிரர்கள் தமிழக வரலாற்றில் இருந்து ஓரம் கட்டப்பட்டனர் என்பதே என்னுடைய ஆதங்கம்.

களப்பிரர் மட்டும் அல்ல, ஆரிய ஆதிக்கம் தொடர்பாக கேள்விகளை எழுப்பிய பல்வேறு தத்துவ ஆவணங்கள், முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சோழர்கள் காலத்தில்தான் கட்டக் கலை வளர்ந்தது என்பது எல்லாம் சரியான கூற்று அல்ல. சோழர்கள் காலத்துக் கோயில்கள் மட்டும்தான் நமக்கு தெரிகின்றன. ஆனால், அவர்களுடைய கோட்டைக் கொத்தளங்கள், அரண்மனைகள் எங்கே போயின? சோழர்கள் காலத்தில் கட்டடக் கலை, பெரிதுபடுத்தப்பட்டது அல்லது விரிவு செய்யப்பட்டது என்று மட்டும் சொல்லலாம்.

சோழர்கள் அல்லது பல்லவர்களைப் போல களப்பிரர்கள் கோயில்களைக் கட்டவில்லை என்பது உண்மைதான். ஆனால், சோழர் காலத்தில் ஆயிரக்கணக்கான விவசாய மக்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

தஞ்சைப் பெரிய கோயில் எப்படிக் கட்டப்பட்டது. சொல்லுங்கள். போர்க் களத்தில் பிடிபட்ட அடிமைகள்; அவர்களின் ஆண்டுக்கணக்கான உழைப்பு; எதிரிகள் நாட்டில் கிடைத்த செல்வங்கள்தான் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்படுவதற்குச் சாத்தியக் கூறுகளாக அமைந்தன.

விண்ணை முட்டும் தஞ்சைக் கோபுரத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நன்றாகப் பார்த்தவர்களுக்குத் தெரியும். சோழனின் கட்டிடக் கலையை விட, ஆயிரக்கணக்கான அடிமைகளின் உழைப்புகள் அங்கே தெரிகின்றன. எதிரிகளின் நாடுகளில் சுரண்டி எடுத்து வரப்பட்ட செல்வங்கள் தெரிகின்றன. சோழர்களின் ஆதிக்கத்தினால் ஏற்பட்ட வேதனைகள் தெரிகின்றன. இவைதான் என் கண்களுக்கும் தெரிகின்றன.

மக்களுக்கு ஒரு பிரமிப்பு கலந்த பயம் வர வேண்டும். மன்னர் மீது மக்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றால், அவர் மீது பயம் இருக்க வேண்டும். அதற்காகத்தான், அத்தகைய பிருமாண்டமான கட்டடிடங்களை அன்றைய அரசர்கள் கட்டினார்கள்.

அண்மைய காலமாக, பழைய சைவ ஆய்வாளர்கள் மறைந்து வருகின்றனர். புதிய தலைமுறை ஆய்வாளர்கள் உருவாகி வருகின்றனர். களப்பிரர் பற்றிய புதிய பார்வையும் உருவாகி வருகிறது.

இன்னும் ஒன்று. உலகப் பொதுமறை திருக்குறளும் களப்பிரர் காலத்தில் உருவானதுதான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.. அதற்கு முன்னரே முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் திருக்குறள் உருவாக்கம் பெற்றது. எனினும், களப்பிரர் காலத்தில்தான், அதற்கு ஓர் உண்மையான வடிவம் கிடைக்கப் பெற்றது. நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா. நானும் தடுமாறுகின்றேன்.

களப்பிரர் காலத்தில் பல சமண குடைவரைக் கோயில்கள் தமிழ்நாட்டில் கட்டப்பட்டன. எடுத்துக்காட்டாக, குமரிமாவட்டத்தில் இருக்கும் சிதறால் மலை, உளுந்தூர்ப் பேட்டையில் இருக்கும் அப்பாண்டநாதர் கோயில் ஆகியவற்றைச் சொல்லலாம். இவை களப்பிரர் காலத்தில் உருவாக்கப்பட்டவை. அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு வர வேண்டும். களப்பிரர்களைப் பற்றிய புதிய வரலாறு விரிவாக எழுதப் படவேண்டும். களப்பிரர் காலத்தை இருண்ட காலமாக இரட்டடிப்பு செய்யக்கூடாது.

களப்பிரர்கள் காவேரிப்பட்டணத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். அவர்கள் தங்களைப் பற்றிய பட்டயங்கள், கல்வெட்டுகள் எதையும் விட்டுச் செல்லவில்லை. அவர்களின் அரசர்களைப் பற்றியும் குறிப்புகள் எழுதி வைக்கவில்லை. அழிக்கப்பட்டுவிட்டன என்று சொல்லலாம்.

களப்பிரர்கள் வடமேற்கே கர்நாடகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படி தமிழகம் வடமேற்கில் இருந்து வந்தவர்களால் ஆளப்பட்டதால், அதனை இருண்ட காலம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தக் கூற்றை ஒரு வலுவான கூற்றாக ஏற்கமுடியாது. ஏன் என்றால் களப்பிரர்கள் மொழி தமிழ் மொழியே ஆகும். கன்னடம் என்ற மொழி உருவானதே கிபி 10-ஆம் நூற்றாண்டில்தான். ஆனால், களப்பிரர்கள் தமிழகத்தை 3-ஆம் நூற்றாண்டிலேயே ஆட்சி செய்து இருக்கின்றனரே.

ஒரு குறிப்பிட்ட காலத்தை, பொற்காலம் என்று சொல்வதற்கு சில காரணங்கள் உள்ளன. அந்தக் காலத்தில் போர் எதுவும் இல்லாமல், அரசியல் குழப்பங்கள் எதுவும் இல்லாமல் இருந்து இருக்க வேண்டும். மக்கள் அமைதியாக வாழ்ந்து இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் கலை, சிற்பம், ஓவியம், மொழி போன்றவை நன்கு வளர்ந்து இருக்க வேண்டும். களப்பிரர்கள் காலத்தில் போர் நடைபெற்றதா, அரசியல் குழப்பங்கள் இருந்தனவா, மக்கள் அமைதியுடன் வாழ்ந்தனரா என்பதற்கு ஆதாரங்கள் எதுவுமே இல்லை.

களப்பிரர்கள், பல்லவர்களைப் போல சிற்பக்கலையையும், சோழர்களைப் போல கட்டடக் கலையையும் வளர்த்ததற்கு எந்தவித சான்றுகளும் இல்லை. ஆனால், அவர்கள் காலத்தில் சீவகசிந்தாமணி, குண்டலகேசி மற்றும் பதினென்கீழ்கணக்கு இயற்றப்பட்டன. இருந்தாலும் அதனைக் களப்பிரர் மன்னர்கள் ஆதரித்தனரா என்பதற்கும் சரியான ஆதாரங்கள் இல்லை. இத்தகைய காரணங்களினால், களப்பிரர்களின் காலத்தை ஓர் இருண்ட காலம் என்று அழைத்து இருக்கின்றனர்.

களப்பிரர்கள் முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தார்கள். பல மாற்றங்களைச் செய்து இருக்கின்றனர். இரண்டாம் விக்கிரமாதித்தன் நேரூர்கொடை வினைய ஆதித்தனின் அரிகரகொடை செப்பேட்டில் இந்தத் தகவல்கள் எழுதப் பட்டு இருக்கின்றன. ஆக, களப்பிரர்கள் தமிழர்களா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கி.பி.7-ஆம் நூற்றாண்டில் கொடுங்கன் பாண்டியன், சிம்ஹவிஷ்ணு பல்லவன், மற்றும் சாளுக்கிய மன்னர்களால் களப்பிரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டையை 8-ஆம் நூற்றாண்டில் இருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்ட முத்தரையர்கள், களப்பிரர்களின் சந்ததியினர் என்றும் சொல்லப்படுகிறது. களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அது நடந்தது அவர்களின் இறுதிக் காலத்தில்தான். அதை நாம் மறந்துவிடக்கூடாது.

கடைசியாக ஒரு செய்தி. 1700 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ்ப் பெண்கள் நெற்றியில் குங்குமம் இட வேண்டும் என்று ஒரு சட்டத்தையே கொண்டு வந்தவர்கள் இந்தக் களப்பிரர்கள்தான்.

இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 09.09.2012 நாளிதழில் வெளிவந்த கட்டுரை

நன்றி : கே எஸ் முத்துக்கிறிஷ்ணன் மலேசியா

 http://ksmuthukrishnan.blogspot.fr/search/label/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Thursday, October 17, 2013

இந்து மதம் எங்கே போகிறது????????? (17 - 22 )

17. மடங்கள் எப்படி தோன்றின.மடங்களுக்கான நோக்கம்? 


அப்படியானால்...சங்கரர் சகாப்தம் முடியும் வரை சங்கர மடங்கள் தோன்றவில்லையா?... அந்த மடங்களையெல்லாம் சங்கரரே ஸ்தாபித்தார் என்ற கருத்து உண்மையில்லையா?... அவ்வாறே வைத்துக் கொண்டால் அத்வைத மடங்கள் மலர்ந்த கதை என்ன?...இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை சங்கரருக்குப் பிறகான நூற்றாண்டு காலம்தான் சொல்கிறது.

தான் போதித்த அத்வைத கருத்துக்களை தன் காலத்துக்குப் பின்னாலும், உலகம் முழுவதும் சென்று பரப்புமாறு தன் சிஷ்யர்களுக்கு ஆணையிட்டார் ஆதிசங்கரர்.

புத்தரிடமிருந்து தனக்கான அத்வைதத்தின் சாரத்தை பெற்ற சங்கரர்... வைஷ்ணவர்களால் ‘ப்ரசன்ன பௌத்தர்’ என்றே அழைக்கப்பட்டார்.

அதாவது புத்தரின் கருத்துக்களை மறைமுகமாக சொன்னவர் என்பதால் இப்பெயரால் அழைக்கப்பட்டார். இதேபோல் ஆதி சங்கரரின் சிஷ்யர்களும்... ப்ரஸன்ன பௌத்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

சங்கரரர் காலத்துக்குப் பிறகு... அத்வைதத்தை பரப்ப முழுக்க முழுக்க முனைந்தார்கள் இந்த ப்ரஸன்ன பௌத்தர்கள். சங்கரரை போலவே ஊர் ஊராக சுற்றினார்கள்.

வாழ்வே பொய் எதையும் நம்பாதே. சந்நியாசம் பெறு...! என சுற்றிச் சுற்றி வலியுறுத்தினார்கள்.

‘தனேஷனே... பார்யஷனே... புத்ரேஷனே’... என சொல்லித்தான் அவர்கள் சந்நியாசம் ஏற்றார்கள். அதாவது செல்வ ஆசையை துறந்தேன். மனைவி (பெண்) இச்சையை மறந்தேன். அதன் மூலம் புத்ர விருப்பத்தை மறுத்தேன் என்பது தான் இந்த மூன்று வார்த்தைகளின் முழக்கம். இந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டு சங்கரரை பரப்புவதற்காக நடந்த சிஷ்யர்கள் அலைந்து அலைந்து ஓர் முடிவுக்கு வந்தார்கள்.

“நமது குருநாதர் புத்தரிடமிருந்த சர்வம் சூன்யம் என்ற உபதேசத்தைத்தான் கைக்கொண்டு கடவுள் மட்டும் உண்மை மற்ற அனைத்துப் பொய் என சொன்னார்.

அப்படிப்பட்ட சங்கரரின் புத்தோபதேசத்தை பரப்ப... நாமும் புத்தரைப் பின்பற்றியவர்களின் யுக்தியை பின்பற்றலாமே”... என ஆலோசித்தனர். என்ன யுக்தி?...

இந்தத் தொடரின் முற்பகுதியில் புத்தரைப் பற்றி எழுதிய அத்தியாயங்களில் நான் ஒன்றை குறிப்பிட்டேனே ஞாபகம் இருக்கிறதா?...

“இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே... இது போன்ற மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்” என இத்தொடரில் 4-ஆவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த புத்த யுக்தியைதான் சங்கரரின் சிஷ்யர்கள் பின்பற்றலாமா என ஆலோசித்தனர். அதன்படியே ஆதிசங்கரரின் சிஷ்யர்கள்... புத்தர் விஹார்களை முன்னோடியாக வைத்து மடங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தனர்.

ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள் திசைக்கு கொஞ்சம் பேராய் கொத்துக் கொத்தாய் நடந்தனர். தெற்கு திசை நோக்கி நடந்தவர்கள் சிருங்கேரியில் ஒரு மடத்தை எழுப்பி... அத்வைத பிரச்சாரத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள். கிழக்குப் பக்கமாக மாயாவாதத்தை பரப்ப சென்றவர்கள் பூரியில் மடத்தை நிர்மாணித்தார்கள்.

மேற்குப் பக்கமாய் அத்வைதம் பரப்புவதற்காக துவாரகையில் தொடங்கப்பட்டது மடம். வடக்குப் பகுதிக்கும் சென்றனர். பத்ரியில் சங்கரரின் கொள்கைகளை விரிவாக்க ஒரு மடத்தை நிர்மாணித்தனர். இவ்வாறு... சங்கரரின் முக்கியமான சிஷ்யர்களான சுரேஷ்வரன், ஆனந்தகிரி, பத்மநாபர், ஹஸ்தமலர் போன்றவர்கள் உள்ளிட்ட பல சிஷ்யர்கள் இந்த 4 மடங்களையும் நிர்மாணிக்கிறார்கள்.

ஆதிசங்கரரின் உபதேசத்திற்கு இணங்க... இம்மடங்களில் எந்தவிதமான பூஜை புனஸ்காரங்களுக்கும் இடம் கிடையாது. அத்வைதம் காட்டும் ஞான மார்க்கத்தின்படி... விக்ரக வழிபாடு கிடையாது. பூஜைகள் கிடையாது. கோவில்களுக்கும் மடங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகமங்கள் கிடையாது. வேதங்கள் சொன்ன கர்மங்கள் கூடாது.

சங்கர கொள்கைகளை பரப்புவதற்கான இம்மடங்களில் சமையல் செய்யக்கூடாது. பிச்சை எடுத்து சாப்பிடும் சந்நியாசிகள் தங்கும் இடத்தில் எதற்காக சமையல்?...

சமையல் இல்லையென்றால்... அதாவது நைவேத்யம் இல்லையென்றால் பிறகு அங்கே பூஜை எப்படி நடக்கும்? பூஜை இல்லையென்றால் அங்கே விக்ரகம் எப்படி இருக்கும்?

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால்... “Shankara Muths are only for proclamation of Advydam” அதாவது சங்கரரின் சிஷ்யர்களால் நிர்மாணிக்கப்பட்ட மடங்களின் முதல் மற்றும் முழுமையான பணி... அத்வைத கொள்கையை பறைசாற்றி... உலககெங்கும் பிரச்சாரம் செய்வதற்காகத்தானே மட்டுமன்றி... வேறெதற்கும் அல்ல...

இப்போது நீங்கள் கேட்கலாம் மடங்களுக்கான நோக்கம் இப்போதும் அதே அளவில் இருக்கிறதா?... சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?..

தொடரும்

18 சங்கரர், சங்கர மடங்களை ஸ்தாபித்தாரா?...

ஆதிசங்கரர் போதித்தபடி தான் அவர்தம் சிஷ்யர்களால் சிருஷ்டிக்கப்பட்ட மடங்கள் நடக்கின்றதா? ஆதி சங்கரரே மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?

இரண்டாவது கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம்.
வரலாற்றுச் செய்திகளை, வதந்திகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு அப்படியே அண்ணாந்து பார்த்து ஆமாம் போடுவதல்ல அறிவு.


அதிலே சொல்லப்பட்டவற்றின் உள்ளே போய் உட்கார்ந்து சிந்தனை செய்து சரிபார்ப்பதுதான் முறை. அந்த முறையில்... சங்கரர், சங்கர மடங்களை ஸ்தாபித்தாரா?... என்பதை பார்க்கக் கடவோம்.

ஆதிசங்கரர் தனது முப்பத்து இரண்டாவது வயதிலேயே மோட்சமடைந்து விட்டார் என கொண்டு பார்த்தால், சாலை வசதிகள் தெளிவான பூகோள வழிகாட்டுதல்கள் என எவ்வித போக்குவரத்து தகவலமைப்பும் துளிகூட இல்லாத சங்கரரது காலத்தில் அவர் இந்தியா முழுமையும் சுற்றியிருக்க முடியுமா? என்பதே சிந்திக்கத் தகுந்ததாகிறது

.இன்றுகூட நெடுஞ்சாலைகளிலிருந்து கோபித்துக் கொண்டது போல் எத்தனை சிறு சிறு வீதிகள் விலகிச் செல்கின்றன. அவற்றின் வழியே எத்தனை கிராமங்கள் கல்லும் மண்ணும் கலந்த சந்துகளால் கட்டப்பட்டு கிடக்கின்றன. அந்த சின்னச் சின்ன சாலைகளைக் கடந்து அந்த கிராமத்துக்குள் செல்வதற்கு...விஞ்ஞானம் வளர்ந்த இக்காலத்திலேயே நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? கால விரயம் ஆகிறது?

அப்படியென்றால் விஞ்ஞானம் வளராத- ஞானம் வளர்ந்த காலத்தில் வாழ்ந்த சங்கரர் தன் காலத்தில் எத்தனை வியாக்யானங்கள் பாஷ்யங்கள் செய்திருக்கிறார்.

இவ்வளவையும் மூலநூல்கள் பார்த்து படித்து உணர்ந்து தெளிந்து பாஷ்யமாக மாற்றி இயற்றுவதற்கு சங்கரருக்கு குறிப்பிட்ட காலம் நிச்சயமாக பிடித்திருக்கும். இந்த பெருங்காரியத்தோடு ஊரெங்கும் சுற்றி கால் நடையாகவே சுற்றி... அத்வைதத்தை பரப்பியும் வந்திருக்கிறார்.

கால தேவனின் குளிர், வெப்ப ஜாலங்களில் பயணித்து... இன்று இந்தியா என்று சொல்கிறோமே இவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் பரவலாக சுற்றி வந்திருக்க சங்கரருக்கு எவ்வளவு காலம் பிடித்திருக்கும்.

ஊர் ஊராக போய் உடனே மடம் நிர்மாணிப்பதை சங்கரர் முக்கிய கடமையாக கருதவில்லை. சென்ற உடனேயே அங்கே மடம் ஆரம்பிக்க வேண்டிய அவசியமும் சங்கரருக்கு இருந்திருப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில்... தெற்கே சிருங்கேரியிலிருந்து வடக்கே பத்ரிநாத்... கிழக்கே பூரி, மேற்கே துவாரகா என திக்குக்கு ஒன்றாய்... எக்கச்சக்க தொலைவுகளை இவ்வளவு இளவயதில் முக்தியடைந்த சங்கரர் பயணித்து மடங்களை நிர்மாணித்தார் என்பதை காலக்கணக்கு கேள்வி கேட்கிறது.

அடுத்ததாக...சங்கரர் முக்தியடைந்த அந்த புண்ணிய பூமி எங்கே இருக்கிறதென இதுவரை இறுதியாக தெரிய வரவில்லை. ஒருவேளை சங்கரரே இந்த நான்கு மடங்களையும் தன் ஆயுளுக்குள் ஸ்தாபித்ததாக கருதிக் கொள்வோம்.

அப்படியானால்... சங்கரர் முக்திபெற்ற பிறகு. அவர்மேல் கொண்ட பக்தியின் காரணமாக, மரியாதையின் காரணமாக... அவர் போதனையை கேட்டவர்கள் என்பதன் காரணமாக... சிஷ்யர்கள், சங்கரருக்கு அவர் ஸ்தாபித்த ஏதாவது ஒரு மடத்தில் அவருக்கு சமாதி அமைத்திருப்பார்களே அவர் ஸ்தாபித்த மடத்துக்கு இதைவிட வேறென்ன பெருமை கிடைத்திருக்க முடியும்?.

சரி... சங்கரரே என் இறப்பும் ஒரு பொய்தான். அதனால் என்னை நான் நிர்மாணித்த மடங்களில் ஒன்றில் அடக்கம் செய்து மடத்தின் நோக்கத்தை கெடுத்து விடாதீர்கள் என்று சிஷ்யர்களிடம் சொல்லியதாக வைத்துக் கொள்வோம்.

அப்படியிருப்பின் சங்கரர் முக்தி பெற்ற ஸ்தலத்திலேயே அவருக்கு ஜீவசமாதி எழுப்பியிருக்க மாட்டார்களா? அதுவும் தேடலில் காணக் கிடைக்கவில்லையே. இந்த கேள்விக் குறிகளையெல்லாம் ஒரு பக்கம் வையுங்கள்.

இன்னொரு பக்கம் சங்கரர்... சங்கர மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு தெய்வங்களே சாட்சி சொல்கின்றன.

தெய்வ சாட்சியா? ஆமாம். கடந்த அத்தியாயத்துக்கு, முதல் அத்தியாயத்தில் தான்... மோட்சம் பெறுவதற்கு சங்கரர் அருளிய ஸ்லோகத்தை சொல்லியிருந்தேன். அதாவது... சந்நியாசிகளின் நற்சம்பந்தம் பெற்று அதன்மூலம் உலகியல் பற்றை ஒழித்து... மோகத்தை துறந்து... அதன் அடிப்படையில் சித்தம் சலனம் இன்றி இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று.

இதைச் சொன்ன சங்கரர்... விக்ரஹ வழிபாட்டை வலியுறுத்திய ஆகமக்காரர்களை கண்டித்த கதையையும் சொல்லியிருந்தேன். அதாவது... மனசு சுத்தமானாதான் மோட்சமே தவிர... அப்படி, இப்படி, என விக்ரக வழிபாடுகளால் அல்ல என்பது சங்கரோபதேசம். இப்படிப்பட்ட சங்கரர்... தான் மடங்களை நிர்மாணித்து அதில் ஆஹம ரீதியான வழிபாடுகளை நடத்தியிருப்பாரா...?

அதிலும் ‘அகம் ப்ரம்மம்’ என்று சொன்ன சங்கரரின் மடங்களில் நிலவும் வழிபாடுகளைக் கவனியுங்கள்.]

தெற்கே உள்ள சிருங்கேரி மடத்தில் சாரதாதேவி வழிபாடு... கிழக்கே உள்ள பூரி மடத்தில் க்ருஷ்ண உபாசனை, வடக்கேயுள்ள பத்ரிநாத் மடத்தில் சில வழிபாடு... மேற்கே இருக்கிற துவாரகையில் கிருஷ்ண துதி இப்படியாக 4 மடங்களிலும் விக்ரக வழிபாடு... மூர்த்தி உபாஸனை.

அதுவும் வெவ்வேறு தெய்வ வழிபாடு... சங்கரரே உண்மையில் மடங்களை ஸ்தாபித்திருந்தால் இப்படிப்பட்ட முரண்பாடுகளை முடிச்சு போட்டிருப்பாரா?

இதற்கெல்லாம் சிலர் பதில் சொல்லலாம். ‘சங்கரர்தான் மடங்களை ஸ்தாபித்தார்.அவரது சிஷ்யர்கள் காலத்தில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்’ என்று. சபாஷ். இந்த பதில்தான் முதல் கேள்விக்கு பதில். அதாவது... சங்கரர் போதித்தபடி தான் மடங்கள் நடக்கின்றதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் கிடைத்து விட்டதே.

அடுத்ததாக 4 மடங்கள் தானா காஞ்சி மடத்தைப் பற்றி சொல்லவே இல்லையே? இந்த கேள்வி காதில் கேட்கிறது எங்களைப் போன்றவர்களுக்கு. அது கும்பகோண மடம்தான்.
 
தொடரும்

19.ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது. மடாதிபதி என்றால் யார்...? கும்பகோணம் மடமா? காஞ்சி மடமா?

இந்தக் கேள்விக்குள் நுழைவதற்கு முன்பு, 500 வருடங்கள் பின்னால் போய் அதோ அந்த சிருங்கேரி மடத்தின் வாசலில் நில்லுங்களேன். இன்றைய பெங்களூரிலிருந்து சில மணித்துளிகள் வாகனப் பயணம். அங்கே ஷிமோகா இயற்கையின் அழகு அமோகமாய் மேற்குத் தொடர்ச்சி மலைமீது ஏறி இறங்கி தவழ்ந்து கொண்டிருக்கிறது.

இங்கிருந்து சுமார் 100. கிலோமீட்டர் கடந்து... தண்மையான துங்கா நதியின் மத்திய கருநாடகாவிலுள்ள இந்த சிருங்கேரியில் தான் சங்கரத்துவத்தின் தென்பகுதி மடம் எளிமையாக அமைந்திருந்த குடில் போன்ற தோற்றம் கொண்ட இம் மடத்தின் வாசலில் ஆங்காங்கே சில பிராமணர்களின் பேச்சுக்குரல்.

மடத்துக்கு உள்ளே சந்நியாசிகள் அமர்ந்திருக்க... அங்கேயும் சில பிராமணர்கள், பல நாள்கள் வெளியே சுற்றித் திரிந்த அத்வைத சந்யாசிகள் அன்றுதான் மடத்துக்கு வந்திருப்பார்கள் போலும்.

அதனால்தான் இந்த பக்தி பரபரப்பு. இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்வது விசேஷம். மடத்தை மையமாக வைத்தபடி அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில்தான் சுற்றித் திரிந்து அத்வைதம் பரப்பவேண்டும்.

அதேபோல, அதே பகுதிகளில் வாழ்பவர்கள்தான் அம்மடத்துக்குள் வந்து ஸ்வாமிகளிடம் தரிசனமோ, தீட்சையோ பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டிருந்தது.

அந்த எல்லையை விட்டு மடாதிபதிகளும் வெளியே போகக்கூடாது. அந்த எல்லையைத் தாண்டிய பக்தர்களும் அம்மடத்துக்கு வரக்கூடாது. இந்த இடத்தில் மடாதிபதி என்றால் யார்...? என்ற கேள்வி எழும்.

மடங்களின் அதிபதி மடாதிபதி. அதிபதி என்றால் மடத்துக்குப் பொறுப்பானவர் அதாவது இருக்கும் சந்யாச சிஷ்யர்களிலேயே சந்யாச காலத்தில் மூத்தவர்கள் மடாதிபதி என அழைக்கப்படுவார்.

அவருக்கு அடுத்தது சந்யாசகாலம் பெற்றவர். அடுத்த மடாதிபதியாக வருவார். இதுதான் மடாதிபதி என்பதன் பொருள்.

மாறாக மடத்துக்கு வருவாய் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு நிருவாகம் செய்பவர் அல்ல அதாவது... அந்த காலத்திலெல்லாம் சங்கர மடங்களில் நிறைய சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்கள்.

சந்யாசம் வாங்கிக்கொண்டு செயல் பட்டிருக்கிறார்கள். அவர்களில் அதிக அளவு சந்யாச காலம் பெற்றவர் மடாதிபதியாகிறார். அதாவது The Senior Saint becomes seer இந்த சின்ன விளக்கத்துக்குப் பிறகு மறுபடியும் சிருங்கேரி மடத்தின் வாசலுக்கு வந்துவிட்டீர்களா?

அப்படி ஒரு மூத்த சந்யாசி மடாதிபதியாக வீற்றிருந்தார் மடத்தில். அவரைப் பார்த்து தரிசித்து வணங்கி மகிழ்ந்துவிட்டு திருப்திபட்டுக் கொண்டவாறே சில பிராமணர்கள் வெளியே வந்தனர்.

அப்போது சில யுவஸ்திரீகள் சங்கர மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதற்காக உள்ளே நுழைய...“நில்லுங்கள்” என்றது மடத்துக்காரரின் குரல் நீங்களெல்லாம் உள்ளே வரக்கூடாது. ஸ்வாமிகள் உங்களை பார்க்கமாட்டார். நீங்கள் கொண்டு வருபவற்றை ஸ்வீகரிக்க மாட்டார். போய்விடுங்கள். ”“ஏன்...?” கையில் பழங்களை வைத்திருந்த பெண்கள் திரும்பக் கேட்டனர்.

“ஏனென்றால் நீங்களெல்லாம் ஸ்திரீகள். உங்கள் சம்பந்தம் வேண்டாம். உங்களால் உண்டாகும் இன்பங்களெல்லாம் வேண்டாம். புத்ர சுகம்... முதலான லவுகீக வஸ்துகளெல்லாம் வேண்டாம் என்றுதானே சந்யாசம் பெற்றிருக்கிறார். பிறகு எப்படி உங்களை நோக்குவார். பிக்க்ஷாந்திக்காக வந்தால் அப்போது இப்பழக்கங்களை இடுங்கள். இப்போது திரும்ப நடங்கள்” என நீண்டதொரு விளக்கம் சொல்லி வைத்தார் மடத்துக்காரர்.

ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது என்பது சங்கர மடங்களில் ஆரம்ப காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாட்டு நெறிமுறை. அந்த இளம் பருவத்து ஸ்திரீகள் மடத்தை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்து போனார்கள்.

இதற்குப் பின்னர் அதே மடத்துக்கு இன்னும் சில பிராமணர்கள் கொத்தாக வந்தனர். அதே ரீதியில் அவர்களும் தடுக்கப்பட்டனர்.

“ஏனப்பா? நாங்கள் என்ன ஸ்திரீகளா? அத்வைதிகள்தான். அனுமதிக்க வேண்டியது தானே...?”“இல்லை உங்களுக்கு அனுமதி இல்லை?”“அனுமதி இல்லையா? ஏன்?”

இக்கேள்விக்கு அம் மடத்துக்காரர்கள் சொன்ன பதிலுக்குப்பின் ஒரு கதை.

மடங்களுக்கென்று ஓர் எல்லை நிருணயிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் பக்தர்களும் மடாதிபதிகளும் செயல் படுகிறார்கள் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்த வகையில் சிருங்கேரி மடத்துக்குட்பட்ட எல்லையில் இன்றைய தமிழ்நாடும் அடங்கும்.

தமிழ்ப் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள் ஷிமோகா மாவட்டத்திலும் மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர். அவர்களில் வேத விற்பன்னர்கள், வித்வான்களுக்கெல்லாம் அரசர்கள் உள்ளிட்ட பல புரவலர்கள் கிராமங்கள், நிலங்கள் என பரிசுகளாகக் கொடுத்தனர்.

அவ்வாறு தேஜஸான வளத்தை அனுபவித்து வந்த தமிழ்ப் பிராமணர்கள்தான் கொத்துக் கொத்தாக போனார்கள். இவர்களின் வளத்தைப் பார்த்தோ மொழியைப் பார்த்தோ சிருங்கேரி மடத்துக்காரர்களில் சிலருக்கு செரிமானம் ஆகவில்லை.

“நீங்கள் தமிழ்நாட்டுப் பூர்வீக பிராமணர்கள்தானே...”“ஆமாம்... அதற்கென்ன?...”“நீங்கள் சிறீமடத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் அதனால் உங்களுக்கு இங்கே ப்ராப்தம் இல்லை.” என்றனர் மடத்துக்காரர்கள்.

“தென்தேசம் முழுதுமே சிருங்கேரி மடத்தின் எல்லைக் குட்பட்டதுதானே... நாங்களும் தென்தேசக் காரர்கள்தானே?.”

“பூகோள எல்லை கிடக்கட்டும் ... உங்கள் கோத்ர அனுஷ்டானங்களின்படி, பின்பற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நீங்கள் இம்மடத்துக்கு தோஷக்காரர்கள் இம்மடத்தின் வைதீக எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு அனுமதி இல்லை...”

கருநாடக மண்ணில் ‘தமிழர்கள்’ முதன்முதலாக அனுமதி மறுக்கப்படாதது. இந்த சமயத்தில்தானோ என நினைக்கிறேன்.

தொடரும்
20. காஞ்சி மடமா? கும்பகோண மடமா?

சிருங்கேரி மடத்துக்குள் தமிழ் குடியேற்றங்களை உள்ளே விடாததற்கும்... காஞ்சியா கும்பகோணமா என்பதற்கும் என்ன சம்மந்தம் என்று தானே கேட்கிறீர்கள்.

மறுபடியும் மடத்தின் வாசல். “நீங்கள் எந்த கோத்ரமாக இருந்தாலும்... எந்த வேதக்காரராக இருந்தாலும் (பிராமணர்களில் ரிக் வேதக்காரர்கள், யஜுர், சாம, அதர்வண வேதக்காரர்கள் என ஒவ்வொரு வேதத்தின் வழி வந்தவர்களாக பிரிக்கப் பட்டிருக்கிறார்கள்)

இங்கே உங்களுக்கு ஆசி பெறவோ, தீட்சை பெறவோ, தரிசனம் பண்ணவோ பாக்கியம் கிடையாது. அதனால் நீங்கள் இம்மடத்துக்கு வரவேண்டாம். உங்களால் மடத்துக்கு, தோஷமும் உங்களுக்கு பாவமும் நேரவேண்டாம்.”

“நாங்களும் இந்த மடத்துக்கு பாத்யப் பட்டவர்கள்தானே... நாங்கள் உள்ளேவர சாத்தியப்படாதா?” என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் கேள்வி எழுப்பி செய்த பக்தி போராட்டம், வெற்றியைத் தரவில்லை.

இங்கே இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சோழ மண்டலத்திலிருந்தும்... திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் தென் மண்டலத்திலிருந்தும் சிருங்கேரி சுற்று வட்டாரங்களில் சில தலைமுறைகளுக்கு முன்னரே குடியேறியவர்களில் சிலர்... முறையாக தீட்சை பெற்று... சந்யாசம் பெற்று பிரம்மச்சர்யத்தை பிடிப்போடு கவனித்து வந்தார்கள்.

அவர்களுக்கும் அனுமதி மறுப்பு கண்டு கொதித்துப்போன தமிழ் வழி குடியேற்றத்தினர், என்ன செய்யலாம் என்று விவாதிக்கக் கூடினார்கள்.

“நம்மை அனுமதிக்காத மடத்தை நாம் விடக்கூடாது. எப்படியாவது உள்ளே செல்லவேண்டும். மட காரியங்களில் நாம் பங்கு பெறவேண்டும்” குடுமியை முடிந்து கொண்டே கோபத்தை அவிழ்த்து விட்டார் ஓர் இளைஞர்.

“பக்தியில் பிளவு செய்யப் பார்க்கிறார்கள். இதை சாத்வீகமாய் எதிர்கொண்டு மடத்துக்குள் சஞ்சரிப்போம்” என்றார் இன்னொருத்தர். இப்படி பல கருத்துகள் எதிரொலித்துக் கொண்டிருந்த போது தான்... ஒரே ஒரு குரல் வித்தியாசமாய் வெளிப்பட்டது.

“நாம் சாதாரணப்பட்டவர்கள் அல்ல... வேத ஞானம் விருத்தியானவர்கள். நம்முடைய வித்வான்களுக்காக ராஜாக்களும், நிலக்கிழார்களும் பல கிராமங்களை நமக்கு பாத்யப்படுத்தியிருக் கிறார்கள். இப்படியிருக்க நாமே தனியாக ஒரு மடத்தை ஸ்தாபித்து, இறைத்தொண்டும் ஏழைகளுக்குத் தொண்டும் செய்யலாமே...”

இந்த யோசனையை எல்லோர்க்கும் பிடிக்க... அன்று முதல் சிருங்கேரி மடத்தை பகிஷ்கரித்து அதன் அருகிலேயே சங்கமேஸ்வரம் என்னும் இடத்தில் புதிய மடத்தை ஸ்தாபித்தனர்.

தங்களுக்குள்ளேயே ஒரு மடாதிபதியை நியமித்துக் கொண்டு - சங்ஙகர மடங்களிலிருந்து பெற்ற சாரங்களை அடிப்படையாக வைத்து இம்மடத்தை பரிபாலித்தனர். இம்மடத்துக்கு சோழ மண்டல, தொண்டை மண்டல... என தமிழகத்தின் பல பக்தர்களும் வந்து போக ஆரம்பிக்க... காலதேவன் பயணத்தில் காஞ்சியில் ஓர் முக்கிய சம்பவம் நடந்தது.

கோயில்கள் நகரம், சிற்பக் கலைகளின் சீமாட்டி நகரம் என்றெல்லாம் புகழ் பெற்ற காஞ்சீபுரம் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களிலும் ஒன்றாகக் கருதப்பட்டது.அதாவது... அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சீ, பூரி, துவாரகை எனப்படும் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களில் தென்பகுதியில் இருக்கும் ஒரே நகரம் காஞ்சிதான்.

அந்த அளவுக்கு இங்கே பக்தி வெள்ளம் அணைகள் இல்லாமல் ஆன்மீகப் பாசனம் செய்து கொண்டிருந்தது. எங்கெங்கு பார்த்தாலும் இறை முழக்கங்கள், சிற்ப சாஸ்திரங்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் சங்கமேஸ்வர மடத்தின் ஒரு கிளையை அங்கிருந்து திரும்பி வந்தவர்கள் நிர்மானித்தனர்.

கட்டிடம் கிடையாது, பெரிய இடம் கிடையாது, சிறியதொரு குடில், மிக எளிமையான தோற்றம் கொண்டது காஞ்சிமடம். சங்கரரின் உபதேசங்களின்படி அத்வைதத்தை பரப்பவும், அறம் செய்யவும் அமைக்கப்பட்ட இம்மடம் இருக்குமிடம் தெரியாத அளவுக்கு எளிமையாக இருந்தது.

மடத்திலிருந்த சந்நியாசிகள் பிக்ஷாந்திக்காகவும்... உபந்யாசங்களுக்காகவும்... கோயில்கள், ஆற்றங்கரைகள் என மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்றுவர காஞ்சியின் மணம் மெல்ல மெல்ல வீசத் தொடங்கியது.

அப்போது தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சித் தொடங்கியிருந்தது. சந்நியாசிகளின் உபதேசங்கள், அவர்களுடைய ஆசீர்வாதம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டனர் நாயக்க மன்னர்கள். சொல்லப்போனால் நாயக்கர்களின் ராஜ நாயகர்களாக விளங்கியவர்கள் சந்நியாசிகளும், துறவிகளும்தான். அறமும், பக்தி நெறியும், ஆன்மீகக் கட்டுப்பாடுகளும் ஒருங்கிணைந்து தங்களை வழிநடத்த வேண்டும் என விரும்பிய நாயக்க மன்னர்களின் காதுகள் வரை வந்து நிறைந்தது காஞ்சி மடத்தின் புகழ்.

அப்படிப்பட்ட ஒரு மடம்... ஏன் அதே மடத்தை நம் ராஜ்ஜியத்தில் அமையுங்கள்.எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன். அறமும், பக்தியும் தழைக்கவேண்டும் என நாயக்க மன்னன் ஆசைப்பட, ஆணையிடப்பட்டது.

உதயமானது கும்பகோண மடம் இன்றையிலிருந்து சுமார் நானூறு - அய்ந்நூறு ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் காமகோடி மடம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது காஞ்சியிலிருந்த அம்மடம்.

காஞ்சியில் இருந்ததைவிட கும்பகோணத்துக்கு வந்தபின் நாயக்கர்களின் ஆதரவால் பீடுநடை போட்டது புதிய மடம். சொத்துகளை நிறைய தானமாக கொடுத்தனர் மன்னர்கள். அன்றிலிருந்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதி, சுமார் 60, 70 ஆண்டுகள் முன்புவரை, கும்பகோண காமகோடி மடம்தான் அது.

எனவேதான், கும்பகோண மடம் என்றே பலராலும் அழைக்கப்பட்டது. இவ்வளவு பிற்காலத்தில் தோன்றிய இம்மடத்தையும் ஆதிசங்கரர்தான் நிர்மானித்தார் என சிலர் சொல்லி வருவதை ஒதுக்கிவிட்டு... கும்பகோண மடம் காஞ்சிக்கு மீண்டும் வந்த கதையைப் பார்ப்போமா...?

தொடரும்
21.ஆசைவைப்பவன் பக்தன் கிடையாது.

நம்மில் ‘பக்தர்கள்’ எத்தனை பேர் இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்.

கும்பகோண மடம் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன்பு... கும்பகோணத்தில் மடத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை பொதுவாகப் பார்த்துவிடலாம்.

பெண்களை உள்ளே அனுமதிக்காத, ‘எல்லைகளை’ கடுமையாக அனுஷ்டித்த சிருங்கேரி மடம் போலவேதான் கும்பகோண மடமும், மடம் அமைந்திருக்கும் தஞ்சாவூர் ஜில்லா தாண்டி திருச்சிராப்பள்ளி ஜில்லாவின் ஒரு பகுதி. ராமநாதபுர சமுத்திரக் கரைப்பகுதி தொண்டை மண்டல பிரதேசம் என எங்கும் மடாதிபதி போகமாட்டார்.

ஆனால்... இம்மடத்துக்கே உரிய விசேஷமான விஷயம், பக்தர்கள் எங்கிருந்தும் இம்மடத்துக்கு வரலாம். அதாவது,‘எல்லை தாண்டிய பக்தியோடு இங்கே வரலாம்.

இந்த இடத்தில் பக்தர்கள் என்றால் யார் என்பதற்கு இலக்கணமாக ஒரு ஸ்லோகம் பார்க்கலாமா?

“பரமாத்மனே யேர் ரக்தஹவிரக்தோ அபரமாத்மநீ”...என்று போகும் வரிகள், பக்தர்கள் என்றால் யார் என்பதைச் சொல்கின்றன.

அதாவது, கடவுளைத் தவிர வேறு யார் மீதோ, எந்தப் பொருள் மீதோ ஆசைவைப்பவன் பக்தன் கிடையாது.

இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால்... பெண்ணோடு தேக சம்பந்தம் கொள்ளாது, புத்ர இஷ்டம் இல்லாத... லௌதீகத்தில் நாட்டம் வைக்காத மனது கொண்டவன்தான் பக்தன் என்கிறது இலக்கணம்.

இப்போதெல்லாம் சின்னச் சின்ன தெருமுனைக் கோயில்கள் வரை உற்சவங்களுக்கு வெளியிடப்படும் அழைப்பிதழ்களில் எல்லாம் ‘பக்த கோடிகளே’ என அழைக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் நம்மில் ‘பக்தர்கள்’ எத்தனை பேர் இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம். இப்படிப்பட்ட இலக்கணங்கள் பெற்றோ, பெறாமலோ பல பக்தர்கள்(!) கும்பகோண மடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்களில் ஒருவர்கூட சூத்திரர் கிடையாது காரணம்?

“அப்பிராமணர்கள் (பிராமணர் அல்லாதவர்கள்) சந்யாசிகளாக கூடாது...” என்று ஸ்மிருதி வகுத்த விதி அப்படியென்றால் சந்யாசம் பெற்றவர்களை தரிசிக்கவும் கூடாது என்றது தொடர்விதி.

இப்படிப்பட்ட சீதோஷண நிலையில் மன்னர்களின் ஆதரவோடு ‘சிறப்பாக’ நடந்து கொண்டிருந்தது கும்பகோண மடம். பல மடாதிபதிகளுக்குப் பிறகு கும்பகோண மடாதிபதியானார் சிறீசந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் அவருடன் நான் பல விஷயங்களில் நட்பு பாராட்டி ஆத்ம தோழனாக இருந்தேன்.

அப்போத மகாபெரியவர் அத்வைத பிரச்சாரம் பண்ணுவதற்காக பல வெளிஸ்தலங்களுக்கும் போக ஆரம்பித்தார். (எல்லைக் கட்டுப்பாடுகள் தளர ஆரம்பித்துவிட்டன). இதன் விளைவாக பல முக்கியஸ்தர்கள் மகாபெரியவரின்
பக்தர்கள் ஆனார்கள்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் என் ஞாபகப்படி மகாத்மா காந்தியடிகளே கும்பகோணத்துக்கு வந்து மகா பெரியவரை மூன்று முறை சந்தித்திருக்கிறார். இன்னும், பல தேசத் தலைவர்களும் மகா பெரியவரை தரிசித்து ஆசிபெற்று அருள்பிரசாதம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

இந்த சமயங்களில்கூட சிருங்கேரி மடத்துக்கும் கும்பகோண மடத்துக்கும் இடையே கருத்து ரீதியான பல மோதல்கள் நடந்து கொண்டிருந்தன.

‘நாங்கள்தான் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட மடக்காரர்கள்’ என அவர்களும்... இல்லை இல்லை நாங்கள்தான் ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப் பட்டவர்கள்’ என்றும் பல வாதங்கள், பிரதிவாதங்கள் ஒரு பக்கம் நடக்க... இன்னொரு பக்கம் அத்வைத ப்ராபகண்டாவை லட்சியமாகக் கொண்ட காரியங்களும் நடந்து கொண்டிருந்தன.

மடங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வர்ணாஸ்ரம தர்மத்தை வளர்த்துக் காப்பதில் சங்கரரரின் சர்வ மடங்களும் சம்மதமாகத்தான் செயல்பட்டு வந்தன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதி... பல அரசியல் தலைவர்களும் தரிசித்துச் சென்றதாலும், வெளியூர்களுக்குச் சென்று வந்ததாலும் மகா பெரியவரின் ப்ராபகண்டா பெருகியது.

அந்த நேரத்தில் கிழக்குப் பகுதி மடமான பூரி சங்கராச்சாரியாரின் மதராஸ் ராஜதானிக்கு வந்து பல சமய சம்ப்ரதாய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு, தன் எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தார். இச்செய்தியை மகாபெரியவரின் கவனத்துக்கு சிஷ்ய கோடிகள் கொண்டு சென்றார்கள்.

“கிழக்கேயிருந்து இங்கே வந்து ப்ராபகண்டா செய்கிறார் பூரி சங்கராச்சாரியார். நாம் அங்கே செல்லும்போது நமக்கு பல எதிர்ப்புகளை அவர்கள் காட்டியிருக்கிறார்கள். நமது மடத்தை அவர்கள் ஒரு மடமாகவே பார்க்காமல் ஜடமாக பார்த்து வந்தார்கள். அவர்கள் இங்கே வருவதா? என சித்தம் நொந்து கேட்டிருக்கிறார்கள். அவர்களை சாந்தப்படுத்தினார் மகா பெரியவர்.

இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் முற்பாதிப் பகுதியில் நடந்தவை. அப்போது மகா பெரியவர் ‘தேசாந்திரம்’ எனப்படும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போது... ‘கும்பகோணம் மடாதிபதி வருகை...’ என்றே அன்றைய செய்தித்தாள்கள் பிரசுரம் செய்தன.

இதற்கெல்லாம் பிறகுதான் நாம் கும்பகோணத்தில் இருப்பதால் பலரும் நம்மை ஒதுக்கப் பார்க்கிறார்கள்.நாம் பிரதான ராஜஸ்தானியர் மதராசுக்கு அருகில், பல வருடங்கள் முன்பு தாய்மடம் இருந்த காஞ்சிக்கே செல்லலாம்’ என முடிவெடுக்கப்பட்டது. கும்பகோண மடம் மறுபடியும்... காஞ்சிக்கு வந்த கதை இப்போது புரிந்துவிட்டதா?

சரி... மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுடன் தோழமை கொண்டிருந்தேன் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்தத் தூய்மையான தோழமையில் எனக்கு வாய்க்கப்பெற்ற அனுபவத்தை உங்களோடு, சேர்ந்து மறுபடியும் அனுபவித்துப் பார்க்கட்டுமா?

தொடரும்

பகுதி – 22 பெரியாருக்கு பதிலடி .ஆரிய சமாஜம்.

மகாபெரியவர் சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளுடன் நான் பெற்றிருந்த பாக்கியத்துக்குரிய தோழமை அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் முன், அவரோடு எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்திய என் வாழ்க்கை நிலைமையும் ஞாபகத்தில் வந்து கூத்தாடுகிறது. இதைச் சொல்லிவிட்டுப் பிறகு மகா பெரியவரின் தோழமைக்குள் நுழைந்ததை தொட்டுத் தொடருகிறேன்.

என் குழந்தைப் பருவத்திலே நான் தொட்டு விளையாடிய பொருள்களிலே வேதப்புஸ்தகங்களும் அடங்கும்.என்னுடைய தகப்பனார்...தாததேசிக தாத்தாச்சாரியார் வேதங்களைக் கரைத்துத் தாளித்துத் தளிகை செய்து உண்டவர் என்றுகூட சொல்லலாம். நான் சின்னக் குழந்தையாக இருக்கும் போதே என் சின்னச்சின்ன செவிமடல்களில் அவரது வேதக்குரல் மோதிக் தளும்பும் அப்போது எனக்கு வேதமும் தெரியாது வெங்காயமும் தெரியாது.

நான் வளர்ந்த நாள்களில் சேட்டைகள் செய்து கொண்டிருக்கும் போது சொந்தக்காரர்கள் பலர் அது சொல்லுது... இது சொல்லுது... என பேச வைத்துக் கொண்டிருக்க... என் தந்தையார் என்னைக் கொஞ்சும் போதும் வேத மந்திரங்களைத் தான் சொல்லுவாராம். நான் ரொம்ப அடம் பண்ணினால் கோபிக்கும் போதும், வேத மந்திரங்களிலிருந்து சில கடும் புத்தி சொல்லும் ஸ்லோகங்களைச் சொல்லித்தான் கோபிப்பாராம். இப்படியாக எனக்குத் தெரியாமலேயே... வேதங்கள் என்னோடு விளையாடிக்கொண்டிருந்தன.

கற்கும் வயது வந்ததும் என்னுடைய தகப்பானாரே எனக்கு வேதங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அவரிடம் வேத அத்யயனம் செய்த நான்... அவருடைய மகனாக மட்டுமன்றி மாணவனாகவும் மலர்ந்தேன். வேதத்தின் ஓசைகளை காதால் கேட்டு அதை நாக்கால் புரட்டிப் போடுவது தான் வேத அத்யயனம் என்ற நிலை இருந்த அந்தக் காலத்தில் எனக்கு சின்னஞ்சிறு வயதிலேயே வேதத்தின் பொருள் பகுத்து விளக்கிவந்தார் தகப்பனார்.

பதினைந்து வயது முதலான நாள்களில் வேதங்களைப் பற்றி நானே சிந்திக்க ஆரம்பித்தபோதுதான்... நாட்டில் ஆரிய சமாஜம் என்ற அமைப்பு பிராமணர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதென்ன ஆரிய சமாஜம் தயானந்த சரஸ்வதி என்பவரால் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அந்த அமைப்பு பிராமணர்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியதை அன்று இளைஞனான என்னால் உணர முடிந்ததது.

அந்த அளவுக்கு தயானந்த சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா...?

“வேதத்தை பிராமணர்கள் தங்களது தொழிற்கருவியாகப் பயன்ப டுத்திவிட்டனர். இதனால் வேதம் பிராமணர்களின் வீட்டு புஸ்தகங்களுக்குள் புதைந்து கிடக்கிறது. தாங்களும் வேதத்தைக் கற்காமல் அடுத்தவர்களும் கற்காமல் வேதத்தை அவர்கள் சிறைப் பிடித்து வைத்துள்ளனர்.

எனவே, வேதத்தை பிராமணர்கள் மட்டுமல்ல எல்லோரும் படிக்கவேண்டும். வேதப்பொருள்களை அனைவரும் உணர வேண்டும். அனைவரும் என்றால் பிராமணர் அல்லாதவர்களும்.” என்ற ரீதியில் தயானந்த சரஸ்வதி பரப்பிய கருத்தை அவரது ஆரிய சமாஜத்தினர் இந்தியா முழுவதும் பரப்பி வந்தனர். இங்கே தமிழ் நாட்டுக்கும் வந்து சேர்ந்தது அந்தக் கருத்துரு.

பத்திரிகைகளில் பிரசுரம் செய்யப்பட்டது. சென்னை சவுகார்பேட்டையில் வந்து சமாஜத்தினர் கூட்டங்களும் போட்டனர். இந்த நிலையில்தான் கும்பகோணத்தில் வேதம் படித்துணர்ந்த நானும் என் சனாதன சகாக்களும் பிராமணீயத்தைக் காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தோம்.

பிராமண சபை, என ஒரு சபையை அமைத்தோம். அந்த நேரத்தில் ஈரோடு ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் பிராமணர்களை... பிராமணீயத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

எனவே நாங்கள் ‘பிராமண சபை’யை ஆரம்பித்து சனாதன தர்மத்தைப் பாதுகாக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டோம்.

ஊர், ஊராக கிராமம் கிராமமாக ஜில்லா முழுவதும் செல்வோம். ஒருநாள் உபந்யாசம் செய்தால் சபையிலிருந்து 10 ரூபாய் சம்பளமாகக் கொடுப்பார்கள். ஊரெல்லாம் சுற்றி நாங்கள் ராமசாமி நாயக்கருக்குப் பதிலடி கொடுத்து வந்த வேளையிலே ஒரு சுவராஜ்யம்.

பரவஸ்து ராஜகோபாலாச்சாரி அய்யங்கார் எனும் ஒரு நண்பர்... வேதங்கள் மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களில் சூத்திரர்களைத் தாக்கி, அவமானப்படுத்தும் விதமாக உள்ள ஸ்லோகங்களை யெல்லாம் எடுத்து எழுதி ராமசாமி நாயக்கரின் இயக்கக்காரர்களிடம் கொடுத்து விடுவார். அவர்களுக்கு எங்களை வசவுபாட இது மேலும் வசதியாக இருக்கும்.

இப்படிப்பட்ட நிலையிலும் சனாதன தர்மசபை என மேலும் ஒரு சபை நிறுவப்பட்டது. அந்தக் காலத்தில் காங்கிரசில் தீவிரமாக இருந்த ஜி வெங்கட்ராமய்யர், எம்.கே. வைத்யநாத அய்யர் போன்றவர்கள் எல்லாம் எங்கள் சபைக்கு வரத்தொடங்கினர்.

அப்போது கும்பகோணத்தில் கம்பீரமாக இருந்த சங்கரமடத்தின் சார்பில் ‘ஆரிய தர்மம்’ என்னும் ஒரு பத்திரிகைகூட வெளிவந்தது. அதிலே என்னுடைய சித்தப்பா அக்னிஹோத்ரம் கோபால தேசிகாச்சாரியார் ‘எடிட்டர்’ ஆகவும் இருக்கிறார். அதோடு ‘ஜாதி தத்வ நிரூபணம்’ எனும் ஒரு புத்தகத்தையும் அவர் எழுதினார்.

இப்படியாக நான் சபைகளின் மூலம் வேத தர்மத்தைக் காக்க பிரச்சாரத்திலும், சில பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும் இருந்த போது... அடிக்கடி சென்னை சென்றும் வருவேன். நான் இப்பிரச்சாரங்களில் மிகத் தீவிரமாக இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்ட கும்பகோண மடத்தின் சங்காராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னைப் பற்றி சிலரிடம் விசாரித்திருக்கிறார். அவர்களிடமே என்னை அவர் கூப்பிட்டு அனுப்ப...
என் இளமைப் பருவத்தின் ஒரு காலைவேளையில் கும்பகோணம் சங்கர மடத்துக்குப் போனேன். தாத்தாச்சாரீ... வாரும்.. உட்காரும்... என அழைத்து தன் அருகிலேயே என்னை உட்கார வைத்தார்.

தொடரும்

நன்றி : http://thathachariyar.blogspot.fr/2010/11/22.html
 
Sunday, October 13, 2013

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா?

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா?

சோதிட முறையின் மூலம் உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா?

மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு... உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க...
தொகுதி 1

A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98 

 மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க. கூட்ட வேண்டாம்...

(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 )

 பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.

பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.

 பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது...

A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49
  

நானும் சோதித்துப் பார்த்தேன் ,அப்படியே ஷாக் ஆயிட்டன்.

நன்றி: அன்பின் வாசல் வலைப் பூவிற்காக சுசிலா மாறிஸ்

Friday, October 11, 2013

யார் இந்தக் களப்பிரர் பாகம் 05 ( களப்பிரர்கள் செய்த தவறு )

களப்பிரர்கள் செய்த தவறு 


களப்பிரர்கள் காலம் பற்றி ஆராய்வதற்கு மிகுந்த நேர்மையும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் தேவையாக இருக்கிறது. அறிவியல் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இலக்கியங்கள் மூலம் பெற்ற தகவல்களும் அவற்றை நேர்மையோடு இணைக்கும் யூகங்களும் தேவைப்படுகின்றன.

களப்பிரர் என்பவர்கள் கருநாடக தேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவினர் என்பதும் அவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு.திராவிட இனத்தில் தொடர்வளர்ச்சியில் தமிழ் மொழி உருவாகியதை உலக ஆய்வாளர்கள் யாரும் மறுப்பதில்லை. களப்பிரர் பற்றிய ஆய்வை மேற்கொள்ளுவதற்கு தமிழர்களின் சரித்திரத்தையும் ஓரிரு பத்திகளில் பார்ப்பது நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்.மாந்த இனத்தின் வரலாறு ஏறத்தாழ ஒரு லட்சத்து எண்பது ஆயிரம் ஆண்டுக்கு மேலான தொன்மையுடையது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

உலக கண்டங்கள் யாவும் ஆரம்பத்தில் கோக்வாண்டா கண்டமாக இணைந்திருந்து, பல லட்சம் ஆண்டுகளாகப் பிரிந்து மிதக்கத் தொடங்கியிருப்பினும் ஆஸ்திரேலியா பிரிந்து சென்றது 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. காரணம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடியினர். அவர்கள் திராவிட இனத்தவர்கள் என்பதற்கு அவர்களிடம் மிச்சமிருக்கும் சில ஒலிக்குறிப்புகளும் சில ஆதி நம்பிக்கைகளும் காரணமாக இருக்கின்றன. உதாரணமாக அவர்கள் நாக வழிபாட்டையும் லிங்க வழிபாட்டையும் எருது இலச்சினைகளையும் இன்னமும் பின்பற்றி வருகின்றனர். இன்னமும் அவர்கள் பயன்படுத்தும் ஓரசை, ஈரசைச் சொற்கள் தமிழ் மொழியை ஒத்திருக்கின்றன. தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதைத் தெளிவுபடுத்த இந்த சிறிய உதாரணத்தை முன் வைக்கிறேன்.
இந்தியாவில் பரவலாக வசித்து வந்த இந்த இனம் சிந்து சமவெளியிலும் தென்னிந்தியாவிலும் வசித்து வந்த தடயங்கள் கிடைத்துள்ளன. ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த இனக்குழு ஈரான், ஆப்கானிஸ்தான், மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் யூகம்.

தெற்கே கடல் கொண்டுவிட்ட குமரியில் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பனி உருகல் காலத்தில் சுமார் 300 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்தபோது இலங்கை பரப்பு தனித்துப் போனதோடு, குமரி கண்டத்தின் கடைசி நிலப்பரப்பும் மூழ்கிப் போனது தெரிகிறது.

அதற்கு முன்பு உலக கடல் மட்டத்தில் இரண்டு முறை கடல் மட்டம் உயர்ந்திருப்பதை அறிய முடிகிறது. பனி உருகல் காரணமாக ஏற்பட்ட அந்த இரண்டு கடல் ஊழியில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த குமரிப்பரப்பு சுத்தமாகவே அழிந்து போனது. கடல் கொண்டுவிட்ட அந்த நிலப்பகுதியில்தான் முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டதாக அதன் பின்னர் வந்த புலவர்களின் பாக்களில் இருந்து அறிய முடிகிறது.

இப்போதும் மேற்குத் தொடர்ச்சி மலையின் முகடுகள் கடலில் மூழ்கியிருப்பதை செயற்கைக் கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. கடற்கோள், பனி ஊழி, அயலவர் படையெடுப்பு என தமிழினம் ஏராளமான நசிவுகளை காலம்தோறும் சந்தித்தாலும் அது ஸ்பினிக்ஸ் பறவையை உதாரணம் காட்டுவதுபோல மீண்டும் மீண்டும் எழுந்துவந்திருப்பதைப் பார்க்கிறோம். ஐரோப்பிய மொழிகளோ, கிரேக்க, எகிப்து மொழிகளோ இத்தனைச் சிரமங்களை எதிர் கொள்ளாமலேயே மறைந்து போயிருப்பதைப் பார்க்கும்போது தமிழுக்கு இருக்கும் தொன்மையும் பலமும் விளங்கும்.
இவ்வளவு தொன்மையான மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அதனுடைய பலமாகவும் அமைந்திருக்கிறது. அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் தமிழர்களின் ரத்தத்தில் ஊறியிருப்பதாகவே சொல்லலாம்.

தமிழ்மொழி சுமார் பத்தாயிரம் ஆண்டுகளில் செழுமையடைந்து, தழைத்து தென்னிந்திய லப்பரப்பில் பிரதான தொடர்பு மொழியாகவும் இலக்கியத்தில் மிக உயர்ந்த லையிலும் செயல்படத் தொடங்கியது. மொழிக்கு இலக்கணம் வகுக்கப்பட வேண்டும் என்ற உந்துதல் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்-டதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. உலகில் வேறெந்த மொழியிலும் இதற்கான ஆதாரங்கள் இல்லை. இங்கு தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை இயம்பப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு தமிழகத்தில் நிலைபெற்றிருந்த ஆட்சியே களப்பிரர் காலம்.

கி.பி. 250க்குப் பிறகும் கி.பி. 550க்கு முன்புமான இக்காலகட்டத்தில் தமிழில் இலக்கியச் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் பிராகிருதம், பாலி மொழிகளே நிலைநாட்டப்பட்டன. அதே சமயம் அவர்கள் தமிழை வளர்த்தார்கள் என்று விவாதிப்போரும் உண்டு. நாலடியார், சீவகசிந்தாமணி, காரைக்காலம்மையார் நூல்கள், இறையனார் களவியல் ஆகிய நூல்கள் இக்காலத்தைச் சேர்ந்தவைதான் என்பது ம.சீ.வேங்கடாமி நாட்டாரின் கருத்து. முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இக்காலத்தைச் சேர்ந்தவை என்கிறார் பண்டாரத்தார். ஆனால் இந்த நூல்கள் பலவும் அறத்தை முன்னிறுத்திப் பாடியதாகவே இருந்தன. மு.ரா.நல்லபெருமாள் முதலியார் சொல்வது முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து பார்க்க வைக்கிறது. "களப்பிரர்கள் என்பரோர் தமிழரே. அவர்கள் காலத்தில் பார்ப்பனர்கள் தம் ஆதிக்கத்தை இழந்திருந்தனர். அதனால்தான் அந்தக் காலத்தை இருண்ட காலம் என்று சொல்கின்றனர்.' என்கிறார். நாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஆதிசங்கரரும் ராமானுஜரும் தோன்றி சமணத்துக்கு எதிராக சைவத்தையும் வைணவத்தையும் முன்னெடுத்துச் சென்றனர். பதினாயிரம் சமணர்களை கூன்பாண்டியன் கழுவேற்றினான் என்ற குறிப்பின் மூலம் சமணர்கள் அழித்தொழிக்கப்பட்டதோடு அவர்களின் சமய நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டன என யூகிக்க முடிகிறது.

பார்ப்பனர்கள் ஆதிக்கம் மீண்டும் உருவானதால் அந்தத் தமிழர் ஆட்சிக்காலம் முற்றிலும் மறைக்கப்பட்டு இருண்டகாலம் என்று ஆகிப்போனது என்பாரும் உண்டு. மயிலை சீனி. வேங்கடசாமி, தேவநேயப் பாவாணர் போன்ற பலர் இந்தக் கருத்துக்கு உடன்பட்டவரே. களப்பிரர் காலத்துக்குப் பிறகு சைவமும் வைணவமும் தழைத்தது என்பது உண்மை. கி.பி. 600க்குப் பிறகு தமிழில் சைவமும், வைணவமும் பக்தி இலக்கியத்தை ஆவேசத்தோடு வளர்த்திருப்பதைப் பார்க்கலாம். வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை களப்பிரர்கள் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலேயே இங்கு நூல்கள் இயற்ற முயன்றதையும் சமண மதத்தை வளர்க்க முற்பட்டதையும் ஆராய்கிறார்.

பாண்டி நாட்டில் சமண கிரந்தர்கள் எண்ணற்றவர்கள் இருந்ததாக சீன பயணி யுவான் சுவாங் எழுதியிருக்கிறார். இவர் கி.பி. 600 நூற்றாண்டு வாக்கில் அவர் தமிழகம் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. களப்பிரர்கள் காலத்துக்கு பின்னர் தோன்றிய திருநாவுக்கரசர் சமணர்களோடு வாதாடியதையும் அவரைச் சுண்ணாம்புக் காலவாயில் போட்டு சித்தரவதை செய்ததையும் தமிழிலக்கியங்கள் விவரிக்கின்றன. ஆக, களப்பிரர்கள் காலம் என்பது சமணர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம் என்பதில் ஐயம் யாருக்கும் இல்லை. அவர்கள் தங்களின் சமய நூல்களையும் தங்களின் மொழியையும் இங்கே பரப்புவதில் பெரும் வேகம் காட்டினர். தமிழகத்தில் சித்தன்ன வாசல் குடைவரைக் கோவில்களும் சிலப்பதிகாரத்தைப் போலவே, சமண, பௌத்த சமயத்தை போதிக்கும் சீவக சிந்தாமணி, மணிமேகலை ஆகிய நூல்களில் அச் சமயத்தினர் இங்கே செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.மொழி ஆராய்ச்சியாளர் ப. சிவனடி இக் கருத்தை வலியுறுத்துகிறார். தமிழ் நாட்டில் இரண்டாம் நூற்றாண்டிலேயே செழிக்கத் தொடங்கிய சமணமும் பெüத்தமும் பிறகு ஏன் தமிழர்களுக்கு எதிராக மாறியது என்பது யூகிக்க உகந்தது. அவர்கள் சமண சமயத்தைப் புகுத்தினர் என்பது காரணமாகத் தெரியவில்லை. சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ சமண சமயத்தைத் தழுவுகிறார். கவுந்தி அடிகள், மணிமேகலை போன்ற கதாபாத்திரங்கள் சமண சமயத்தைத் தழுவியதாக படிக்கிற நாம் எப்போது அதன் எதிரியாக மாறினோம் என்பது யோசித்தல் முக்கியம்.

அவர்கள் நம் மொழியின் மீது ஆதிக்கத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியதில் இருந்துதான் களப்பிரர்களுக்கும் தமிழருக்குமான முரண்பாடுகள் பெருகத் தொடங்கியிருக்க வேண்டும்.இதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது அன்று துவங்கப்பட்ட திராவிட சங்கம். பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ஒன்றை நிறுவினார் (கி.பி. 470). அவருடைய நோக்கமே சமண சமய நூல்களை தமிழில் இயற்ற வேண்டும் என்பதே. பதினென் கீழ் கணக்கு நூல்கள் பலவும் இச் சங்கத்தின் முயற்சியினால் தோன்றியிருக்கலாம் என்பது கே.கே. பிள்ளையவர்களின் வாதம். பாலி பிராகிருத மொழியில் நூல்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் நூல்கள் இயற்றப்பட வேண்டும் என்று தமிழகத்துக்குள் ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டதே தமிழுக்கு நேர்ந்த சோதனைக் காலத்தைக் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சமய மறுமலர்ச்சி தமிழர்களை ஒருங்கிணைக்க முயன்றது. இதனால் தமிழர்கள் தமிழில் தமிழுக்கு நெருக்கமான இறைநூல்களைப் பாடுவதில் இயல்பாகவே ஈடுபட்டிருக்கலாம்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாக சொல்வது உலகில் வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு. அதே போல பக்தி இலக்கியத்தின் காலத்தையும் தமிழ் வளர்ச்சியின் பங்களிப்பாகக் கொள்ள முடியும். சமணத்துக்கு மாற்றாக மட்டுமின்றி பாலி மொழிக்கு மாற்றாகவும் தமிழ் செயல்பட்டது. தமிழர்களுக்கு மொழி மிகவும் முக்கியமானதாக இருந்ததை பல்வேறு கால கட்ட நிகழ்வுகள் மூலம் அறிய முடிகிறது. மொழிக்காக உயிரையும் இழக்கத் துணிந்தவர்களாக அவர்கள் இருந்தனர். சைவம், வைணவ பாடல்களில் தமிழைச் சிறப்பித்துப் பாடுவதை நாம் பார்க்கிறோம். 

"மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப்
பயன் அறிகிலா அந்தகர்'-

என தேவாரத்தில் சமணரைப் பழிக்கிறார் ஞான சம்பந்தர்.

- இத் தகவல்களை தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்ட தமிழர் வரலாறு நூலில் பி. இராமநாதன் தெரிவிக்கிறார்.1938 இந்தித் திணிப்பின் போது தாளமுத்து, நடராசன் உயிர்த் தியாகமும், 1965 ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டமும் உயிரிழப்புகளும் தமிழீழத்துக்காக உயிர் நீத்தவர்களும் தமிழர்கள் மொழிமீது அதீத பாசம் கொண்டிருந்ததற்கு சமீபத்திய உதாரணங்கள். இதற்கு முன்னர் சைவர்களும் வைணவர்களும் போட்டி போட்டுக் கொண்டு சமயத்தை வளர்த்ததோடு தமிழையும் வளர்த்ததை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும். சுண்ணணாம்புக் காலவாயில் சுட்டெரித்தபோதும் சைவத்தை மட்டுமின்றி அவர்கள் தமிழையும் நேசித்ததை அறிய முடிகிறது. அதற்கும் முந்தைய காலங்களில் அவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்ததும் இறைவனையே அதற்கு தலைவனாக்கியதும் இலக்கியம் தரும் தகவல்கள்.

புதிதாக வேறு ஒரு சமயத்தைப் புகுத்தியதோடு மட்டுமின்றி வேறொரு மொழியையும் புகுத்தியதே தமிழர்கள் முற்றாக அவர்களை அழிக்க முனைந்ததற்கு முக்கிய காரணம் என்று நான் கருதுகிறேன்.களப்பிரர்கள் ஏந்தப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. களப்பிரர்கள் என்பார் கர்நாடகத்திலிருந்து தமிழர் மீது ஆக்ரமிப்பு செய்தவர்கள் என்று பரவலாக அறியப்படுகிறது.

இக்கருத்தில் ஆய்வாளர்கள் பலருக்கும் ஒத்த கருத்து உண்டு. மைசூர் ராச்சியத்தின் பேலூர் கல்வெட்டு ஒன்று அங்கு களப்போரா எனும் பெயரில் ஒரு வம்சத்தினர் வாழ்ந்ததாகத் தெரிவிக்கிறது. (கே.கே. பிள்ளையின் தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் ( பக்.185) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.) களப்பிரர்கள் தெற்கு ஆந்திரப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பார் சிலர். வேங்கடத்தை ஆண்டுவந்த களவர் என்னும் இனத்தவரே பல்லவரின் கை ஓங்கியதாலும் சமுத்திரகுப்தனின் படையெடுப்பினாலும் தென் தமிழகத்துக்கு பெயர்ந்து தமிழகத்தை ஆக்ரமித்ததாக அதே நூல் தகவல் தருகிறது. இது தவிர களப்பிரர் தமிழரே என்ற கருத்து ஒன்று உண்டு. பாவாணர், க.ப. அறவாணன் போன்றோர் இக் கருத்து உடையவர்கள். களப்பிரர் என்ற தமிழர் ஆட்சியில் பார்ப்பனர் செல்வாக்கு இழந்து இருந்ததால் அக் காலகட்டத்தை இருண்ட காலமாக வர்ணிக்கின்றனர் என்கின்றனர். வரலாற்றை யூகிப்பது ஒரு சுவையான அம்சம். எது உண்மையாக இருக்கும் என்று அலசுவதும் தேவை.

 நன்றி  http://www.tamilmagan.in/2011/08/blog-post.html